India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ரெட்டியார் பாளையம் புதுநகரில் விஷவாயுவால் பாதிக்கப்பட்ட பகுதியில் இந்திராகாந்தி அரசு மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனையை சேர்ந்த மருத்துவர்கள் இன்று அங்குள்ள கோயில் பகுதியில் மருத்துவ முகாம் அமைத்துள்ளனர். மேலும், யாருக்கேனும் தலைவலி, வாந்தி, மயக்கம் இருந்தால் உடனடியாக மருத்துவ முகாமிற்கு வரும்படி மைக் மூலம் அழைப்பு விடுத்தனர். அதோடு அப்பகுதியில் ஆம்புலன்ஸ் தயார் நிலையில் வைத்துள்ளனர்.
புதுச்சேரி என்.ஆர் காங்கிரஸ் பிரமுகரும் தொழிலதிபருமான புகழேந்தியின் பிறந்தநாள் விழா இன்று கோரிமேட்டில் உள்ள அவரது இல்லத்தில் கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் கலந்து கொண்டு பொன்னாடை மற்றும் பூங்கொத்து வழங்கி பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தார். தொடர்ந்து பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியை அமைச்சர் துவக்கி வைத்தார்.
புதுவை மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை மற்றும் சமூக நலத்துறை அதிகாரிகளுடன் அமைச்சர் தேனீ. ஜெயக்குமார் இன்று ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனை கூட்டத்தில் புதிய திட்டப் பணிகள் மாணவர்களுக்கான உதவித்தொகைகள் உள்ளிட்ட பயன்கள், இந்த நடப்பு நிதியாண்டில் (2024-2025) செய்ய வேண்டிய அனைத்து பணிகளும் தகுந்த காலத்திற்குள் செய்து முடிக்கப்பட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
புதுவை முதலமைச்சர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; குழந்தைப் பருவம் மகிழ்ச்சி, சிரிப்பு மற்றும் கல்வி கற்பதற்கான காலமாக இருக்க வேண்டும் என்றும் ஒவ்வொரு குழந்தைக்கும் கல்வி, விளையாட்டு மற்றும் பிரகாசமான எதிர்காலத்திற்கான உரிமையை நிலை நாட்ட உறுதியேற்போம் என்றும் புதுச்சேரி மாநில முதலமைச்சர் ரங்கசாமி உலக குழந்தைத் தொழிலாளர் எதிர்ப்பு தினம் வாழ்த்து தெரிவித்தார்.
புதுவை மாநிலம் ஏனாம் பகுதியை சேர்ந்த14 வயது சிறுவன் குளத்தில் மூழ்கி இறந்தான். சிறுவன் இறந்ததை மருத்துவர்கள் உறுதி செய்த பிறகு உடலை பாதுகாத்து வைக்க பிரேத அறையில் வைக்க அறையில் பிரசர் வேலை செய்யாததால் சிறுவனின் உடலை நோயாளிகள் அறையின் படுக்கையில் பல மணி நேரம் வைத்திருந்தனர். இதனை கண்டித்து அந்த பகுதி மக்கள் அரசு மருத்துவமனையில் முன் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
புதுச்சேரியில் நடந்த விஷவாயு சம்பவங்கள் எதிர்காலத்தில் நிகழாவண்ணம் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மக்கள் தங்களது பகுதிகளில் கழிவுநீர்த்தொட்டி , கழிவு நீர் வாய்க்கால் அடைப்புகளை தூய்மைப்படுத்துதல் சம்பந்தமான புகார்கள் பொதுப்பணித்துறை அலுவலகத்தில் செயல்படும் ‘அவசர கழிவுநீர் நடவடிக்கை குழுவின் ‘14420’ என்ற தொலைபேசியை தொடர்பு கொண்டு தெரிவிக்குமாறு உள்ளாட்சித் துறை இயக்குனர் அறிவித்துள்ளார்.
புதுச்சேரி துணைநிலை ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் வெளியிட்ட செய்தியில், ரெட்டியார்பாளையம் பகுதியில் கழிவறையில் இருந்து விஷவாயு வெளியேறி, மூச்சு திணறல் ஏற்பட்டு செந்தாமரை, காமாட்சி, மாணவி செல்வராணி ஆகியோர் உயிரிழந்தனர் என்ற செய்தி மிகுந்த வருத்தத்தை தருகிறது. விஷவாயு தாக்கி உயிரிழந்த 3 பேரின் குடும்பத்தினர், உறவினர்களுக்கு தனது ஆழ்ந்த இரங்கலையும் வருத்தத்தையும் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி மாநிலத்தில் உள்ள பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. இதனை அடுத்து நாளை கோடை விடுமுறை முடிந்து அனைத்து பள்ளிகள் திறக்கப்பட உள்ளது. இதனை முன்னிட்டு கல்வித்துறை சார்பில் பள்ளிகளை சுத்தம் செய்யும் பணி உள்ளிட்ட பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. மேலும் நாளை பள்ளிகளுக்கு செல்ல மாணவர்கள் தேவையான பொருட்களை வாங்கி தயாராகி வருகின்றனர்.
புதுச்சேரி ரெட்டியார்பாளையத்தில் இன்று காலை சாக்கடையில் இருந்து வெளியேறிய விஷவாயு தாக்கி 2 பெண்கள் உயிரிழந்தனர். காப்பாற்ற சென்ற 15 வயது சிறுமியும் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்நிலையில், விஷவாயு தாக்கி உயிரிழந்த சிறுமியின் குடும்பத்திற்கு ரூ.30 லட்சமும், மற்ற இருவரின் குடும்பத்திற்கு தலா ரூ.20 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.
புதுச்சேரி அடுத்த ரெட்டியார்பாளையம் பகுதியில் இன்று ஏற்பட்ட விஷவாயு தாக்குதலினால் 3 பேர் உயிரிழந்த சம்பவம் குறித்து முதல்வர் ரங்கசாமி சம்பவம் நடைபெற்ற இடத்திற்கு சென்று ஆய்வு செய்தார். இதனைத் தொடர்ந்து முதலமைச்சர் துறை அதிகாரிகளுடன் சட்டப்பேரவையில் உள்ள தனது அலுவலகத்தில் ஆலோசனை நடத்தினார். இந்த சம்பவம் குறித்து மாவட்ட ஆட்சியர் மற்றும் அதிகாரிகளும் உரிய ஆய்வினை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.