Pondicherry

News July 13, 2024

புதுச்சேரி மாநில பா.ஜ.க. செயற்குழு நாளை கூடுகிறது

image

புதுச்சேரி மாநில தேசிய ஜனநாயக கூட்டணியில் பிளவு ஏற்பட்டுள்ளது. முதல்வர் ரங்கசாமி மற்றும் பா.ஜ.க. அமைச்சர்களுக்கு எதிராக பாஜக எம்எல்ஏ-க்கள் போர்க்கொடி தூக்கி உள்ளனர். மேலும் அதிருப்தி எம்எல்ஏ-க்கள் ஏழு பேர் டெல்லிக்கு சென்று நட்டாவை சந்தித்து முறையிட்டுள்ளனர். இத்தகைய பரபரப்பான சூழலில் புதுச்சேரி மாநில பாஜக செயற்குழு கூட்டம் மரப்பாலம் சுகன்யா சென்டரில் நாளை நடைபெற உள்ளது.

News July 13, 2024

புதுச்சேரியில் 7 புதிய நீதிமன்றங்கள் திறப்பு

image

புதுச்சேரி நீதிமன்ற வளாகத்தில் 7 புதிய நீதிமன்றங்கள் திறப்பு விழா இன்று(ஜூலை 13) நடைபெற்றது. திறப்பு விழாவில் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி மகாதேவன்,
புதுச்சேரி துணை நிலை ஆளுநர் சி. பி.ராதா கிருஷ்ணன்,
முதலமைச்சர் ரங்கசாமி ஆகியோர் கலந்து கொண்டு மகிளா நீதிமன்றம், மொபைல் நீதிமன்றம், பாஸ்ட் ட்ராக் நீதிமன்றம் உள்ளிட்ட 7 புதிய நீதிமன்றங்களை திறந்து வைத்தனர்.

News July 13, 2024

பயனாளிகளுக்கு நிதியுதவி வழங்கிய சபாநாயகர்

image

புதுச்சேரி அரசு குடிசை மாற்று வாரியம் மூலம், பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தின் கீழ் மணவெளி தொகுதியைச் சேர்ந்த 36 பயனாளிகளுக்கு, கல்வீடு கட்டுவதற்காக ரூ.44.00 லட்சம் நிதி உதவி தொகை வழங்கும் அரசாணைகளை சட்டப்பேரவை தலைவர் செல்வம் இன்று தவளக்குப்பத்தில் உள்ள தனது இல்லத்தில் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

News July 13, 2024

நியூயார்க் தூதருடன் புதுவை அமைச்சர் சந்திப்பு

image

புதுவை சுற்றுலாத்துறை அமைச்சர் லட்சுமிநாராயணன் அமெரிக்காவில் உள்ள நியூயார்க் நகரில் இந்திய தூதர் பினாய் ஸ்ரீகாந்த் பிரதான் அழைப்பை ஏற்று, இந்திய தூதுவர் மாளிகையில் நேற்று மரியாதை நிமித்தமான சந்திப்பு நடைபெற்றது. இதில் இந்திய தூதரகம் சார்பாக புதுவை சுற்றுலா மற்றும் தொழில்நுட்ப துறையில் கட்டமைப்புகள், மேம்பாடு முதலீடுகள் என பல்வேறு நிலைகளில் நடவடிக்கைகளை எடுக்கலாம் என ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

News July 13, 2024

பால் குளிரூட்டும் நிலையங்கள்: முதல்வர் திறந்து வைப்பு

image

தேசிய பால்வள அபிவிருத்தி திட்டத்தின் கீழ் அரியூர், மங்கலம், பிள்ளையார்குப்பம், கடுவனூர், கொரவள்ளிமேடு ஆகிய 5 கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்கங்களில், தலா 3,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட பால் குளிரூட்டு நிலையங்கள் மொத்தம் ரூ.96 இலட்சம் மதிப்பீட்டில் நிறுவப்பட்டுள்ளது. இதனை முதல்வர் ரங்கசாமி நேற்று சட்டப்பேரவை அலுவலகத்தில் இருந்து காணொளி காட்சி வாயிலாகத் திறந்து வைத்தார்.

News July 13, 2024

திரௌபதி அம்மன் ஆலய சீரமைப்பு பணி

image

புதுச்சேரி நெட்டப்பாக்கத்தில் அமைந்துள்ள திரௌபதி அம்மன் ஆலய சீரமைப்பு பணி நேற்று தொடங்கியது. இப்பணியை தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், துணை சபாநாயகருமான ராஜவேலு கொடிமரக்கால் நட்டு வைத்து, பூஜை செய்து நேற்று துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சிகள் ஊர் பொது மக்கள், ஆலய அறங்காவல் குழு தலைவர்கள் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

News July 13, 2024

காவலா் பொது நலச்சங்கத்துக்கு ரூ.1 கோடி நிதி

image

புதுவை கம்பன் கலையரங்கத்தில் நேற்று ஊர்க்காவல் படை வீரர்களுக்கு பணி ஆணை வழங்கி முதல்வர் ரங்கசாமி பேசும்போது புதுவையில் காவல் துறையின் நடவடிக்கையால் சட்டம், ஒழுங்கு சிறப்பாக பராமரிக்கப்பட்டு வருகிறது. மேலும் போதைப் பொருள் வழக்கில் சம்பந்தப்பட்டவா்கள் யாராக இருந்தாலும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், காவலா்களின் பொது நலச்சங்கத்துக்கு ரூ.1 கோடி நிதி வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

News July 12, 2024

பணி ஆணை வழங்கிய முதல்வர்

image

புதுச்சேரி மாநில காவல் துறையில் புதியதாக தேர்வு செய்யப்பட்ட ஊர்க்காவல் படை வீரர்களுக்கு பணி ஆணை வழங்கும் நிகழ்ச்சி புதுச்சேரி கம்பன் கலையரங்கில் இன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி, மாநில உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் ஆகியோர் பணி ஆணை வழங்கி வாழ்த்து தெரிவித்தனர். இதில் ஏராளமான காவல்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

News July 12, 2024

ரெட்டியார்பாளையம்: புதிய காவல் நிலையம் திறப்பு

image

புதுச்சேரி உழவர்கரை நகராட்சி, ரெட்டியார்பாளையம் காவல் நிலையத்துக்கு அரசு நிதி ஒதுக்கி ரூ.3.50 கோடி செலவில் ரெட்டியார்பாளையம் காவல் நிலையம் புதியதாக கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா இன்று நடைபெற்றது. திறப்பு விழாவிற்கு புதுச்சேரி டிஜிபி ஸ்ரீனிவாஸ் தலைமை தாங்க முதல்வர் ரங்கசாமி, உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் ஆகியோர் கலந்துகொண்டு காவல் நிலையத்தை திறந்து வைத்தனர்.

News July 12, 2024

புதுவையில் ஊழியர்களுக்கு பணி நிரந்தர ஆணை

image

காரைக்கால் கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்கத்தில் 15 ஆண்டுகளுக்கும் மேலாக தினக்கூலி ஊதியத்தில் பணிபுரியும் காரைக்கால் வடக்கு தொகுதிற்கு உட்பட்ட 11 ஊழியர்களுக்கு புதுச்சேரி அமைச்சர் திருமுருகனின் பரிந்துரையின் பேரில் பணி நிரந்தர ஆணையை இன்று புதுச்சேரி மாநில முதலமைச்சர் ரங்கசாமி வழங்கினார். இதில், அமைச்சர் தேனி ஜெயக்குமார், சபாநாயகர் செல்வம் உடன் இருந்தனர்.

error: Content is protected !!