Pondicherry

News July 16, 2024

மடிக்கணினி பெறாத மாணவர்களுக்கு பணம்

image

புதுச்சேரியில் காமராஜர் பிறந்த தினத்தை முன்னிட்டு நேற்று கதிர்காமம் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற மாணவர் நாள் விழாவில் முதல்வர் ரங்கசாமி பேசும்போது, இலவச பாடப்புத்தகம் முதல் சீருடை, மடிக்கணினிகள் வரை மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. மேலும் மடிக்கணினியை பெறாமல் விடுபட்ட மாணவ, மாணவிகளுக்கு அவரவர் வங்கிக் கணக்கில் விரைவில் அதற்கான பணம் செலுத்தப்படும் என்றார்.

News July 15, 2024

புதுச்சேரியில் முழு பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் – கவர்னர்

image

புதுச்சேரியில் இந்த மாத இறுதியில் முழு பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். அமைச்சர்
திருமுருகனுக்கு இலாகா ஒதுக்கீடு செய்ய முதல்வர் ரங்கசாமி இதுவரை பரிந்துரை செய்யவில்லை . என்கவுண்டர் வராமல் இருப்பதற்கு ரவுடிகள் உருவாகாமல் இருக்க வேண்டும்.ரவுடிகள் உருவாகாமல் இருப்பதற்கு கட்டப்பஞ்சாயத்து இல்லாத சமுதாயத்தை உருவாக்க வேண்டும் என்று கவர்னர் ராதாகிருஷ்ணன் இன்று தெரிவித்துள்ளார்.

News July 15, 2024

விரைவில் இலவச அரிசி போடப்படும்:

image

புதுச்சேரியில் ரேஷன் கடைகளை திறந்து விரைவில் இலவச அரிசி வழங்கப்படும் என புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி தெரிவித்துள்ளார். இன்று எம்.ஆ,காங்., அலுவலகத்தில் காமராஜர் பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. இதில் கலந்து கொண்ட அவர், காமராஜர் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், “புதுச்சேரி மக்களுக்கு இலவசமாக அரிசி வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாகத் தெரிவித்தார்.

News July 15, 2024

புதுச்சேரி: காமராஜர் சிலைக்கு முதல்வர் மரியாதை

image

கர்மவீரர் காமராஜரின் பிறந்த நாளை ஒட்டி புதுச்சேரி அண்ணா சாலை ராஜா தியேட்டர் அருகே அமைந்துள்ள அவரது சிலைக்கு புதுச்சேரி அரசு சார்பில் முதல்வர் ரங்கசாமி இன்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அவரைத் தொடர்ந்து சபாநாயகர் செல்வம் மற்றும் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

News July 15, 2024

உள்ளாட்சித் தேர்தலை நடத்த கோரி ஆளுநரிடம் மனு

image

புதுச்சேரி மக்கள் முன்னேற்றக் கழக மாநில நிர்வாகிகள் துணை நிலை ஆளுநரிடம் நேற்று மனு ஒன்றை வழங்கினர். அதில், புதுச்சேரியில் உள்ளாட்சித் தேர்தல்களை உடனடியாக நடத்த வேண்டும், புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும், புதுவை தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்திற்கு நிர்வாகக் குழுவை உடனடியாக அமைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை விடுத்தனர்.

News July 15, 2024

புதுச்சேரி: காமராஜர் சிலைக்கு ஆளுநர் மரியாதை

image

பெருந்தலைவர் காமராஜரின் 122 வது பிறந்த நாளை முன்னிட்டு, இன்று ராஜா திரையரங்கம் அருகில் காமராஜர் சாலை-அண்ணா சாலை சந்திப்பில் உள்ள அன்னாரது உருவ சிலைக்கு துணைநிலை ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்ச்சியில், செய்தி மற்றும் விளம்பரத் துறையின் இயக்குனர் தமிழ்ச்செல்வன் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

News July 15, 2024

புதுச்சேரி: மத்திய இணையமைச்சருக்கு சிக்கல்

image

போலி ஆவணம் மூலம் புதுச்சேரியில் கார் பதிவு செய்ததாக தம்மீது தொடரப்பட்ட வழக்கு தொடர்பாக மத்திய இணையமைச்சரும், நடிகருமான சுரேஷ் கோபி கேரள உயர்நீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்துள்ளார். 2010 ஆம் ஆண்டு சொகுசு கார் வாங்கிய சுரேஷ் கோபி அதனை புதுச்சேரியில் பதிவு செய்து கேரளாவில் பயன்படுத்தியுள்ளார். போலி ஆவணம் மூலம் புதுச்சேரியில் கார் பதிவு செய்த நிலையில் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

News July 14, 2024

புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்புக்கான நுழைவு தேர்வு

image

புதுச்சேரி சுகாதாரத்துறை சார்பில் பிஎஸ்சி நர்சிங் படிப்புக்கான பொது நுழைவுத் தேர்வு இன்று (ஜூலை 14) நடைபெற்றது. புதுச்சேரி பாரதிதாசன் அரசு மகளிர் கல்லூரி, உப்பளம் இமாக்குலேட் மேல்நிலைப்பள்ளி உள்ளிட்ட 10 மையங்களில் இந்த தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வை 1952 பேர் எழுதினர். கடுமையான சோதனைக்கு பின்னரே தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டனர்.

News July 14, 2024

புதுச்சேரி: சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி கருத்து

image

நீதிமன்றங்கள் குற்றங்களைக் குறைக்கும் மையங்களாக வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஆர்.மகாதேவன் தெரிவித்துள்ளார். புதுச்சேரி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் 7 புதிய நீதிமன்றங்களை தொடங்கி வைத்து பேசிய அவர், சாமானிய மக்களுக்கு உடனடியாக கிடைக்கும் நீதியே உண்மையான நீதி என்றும், தாமதமாக கிடைக்கும் நீதி கிடைத்து பயனில்லை என்று பேசினார்.

News July 14, 2024

புதுவை பிரான்ஸ் தூதரகத்தில் சுதந்திர தின விழா

image

புதுவையில் பிரான்ஸ் நாட்டின் சுதந்திர தின விழா பிரஞ்சு அரசு சார்பில் பிரான்ஸ் தூதரகத்தில் இன்று (ஜூலை 14) நடைபெற்றது. இதில் உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் கலந்து கொண்டு புதுச்சேரி பிரஞ்சு துணை தூதர் லிசே டல்போட் பரே அவர்களுக்கு பொன்னாடை அணிவித்து சுதந்திர தின வாழ்த்துக்கள் தெரிவித்தார். பிரான்ஸ் நாட்டில் நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டியை வரவேற்கும் விதமாக ஒலிம்பிக் தீபம் ஏற்றி நிகழ்ச்சியை துவங்கினர்.

error: Content is protected !!