India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
காரைக்காலில் பள்ளி மாணவர்கள் மாவட்ட நிர்வாக செயல்பாடுகள் குறித்து நேரடியாக அறிந்து கொள்ளும் வகையில் பள்ளி மாணவர்கள் ஒருநாள் மாவட்ட ஆட்சியர் என்கின்ற அறிவிப்பினை செயல்படுத்தும் விதமாக, காரைக்கால்மேடு அரசு பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு பயிலும் லித்யா ஸ்ரீ என்கிற மாணவி நாளை (ஜூலை 18) ஒருநாள் மாவட்ட ஆட்சியராக தன்னுடன் இணைந்து பணியாற்றுவார் என்று ஆட்சியர் மணிகண்டன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் 20 மாவட்டங்களுக்கு இன்று (ஜூலை 17) இரவு 10 மணி வரை மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அந்தவகையில், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், பெரம்பலூர், அரியலூர், கடலூர், திருச்சி, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், மதுரை, தூத்துக்குடி, புதுச்சேரி மற்றும் காரைக்கால் உள்ளிட்ட 20 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை மிதமான மழை வாய்ப்புள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி மாநில காங்கிரஸ் தலைவர் எம்.பி வைத்திலிங்கம் இன்று (ஜூலை 17) அவரது அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, சட்டமன்றத்தைக் கூட்டாத முதல்வர் ரங்கசாமி அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டுவாரா என்று கேள்வி எழுப்பியவர், கர்நாடக காங்கிரஸ் அரசை காவிரியில் நீர் திறக்க நாங்கள் வலியுறுத்துவோம் என்றும், இது தொடர்பாக கடிதம் எழுத உள்ளோம் என்றும் அவர் தெரிவித்தார்.
புதுச்சேரி மாநில எதிர்க்கட்சித் தலைவர் சிவா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், புதுச்சேரி மாநிலத்தில் மீண்டும் நியாய விலைக்கடைகளை திறந்து அத்தியாவசியப் பொருட்களை மக்களுக்கு வழங்காவிட்டால் மாநில அளவில் போராட்டம் வெடிக்கும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சிவா அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். எனவே நியாய விலை கடைகள் உடனடியாக திறக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.
புதுச்சேரியில் அரசின் மூலம் கிராமப்புற மக்களின் நலன் கருதி மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் மூலம் 100 நாள் வேலை திட்ட பணி வழங்கப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக மங்களம் தொகுதிக்குட்பட்ட திருக்காஞ்சி கிராமத்தில் 1 கோடியே 70 லட்சம் ரூபாய் செலவில் 100 நாள் வேலை திட்ட பணியை வேளாண்துறை அமைச்சர் தேனீ ஜெயக்குமார் இன்று தொடங்கி வைத்தார்.
புதுச்சேரி பிரதேச நம்மாழ்வார் இயற்கை உழவர்கள் சங்கத்தின் சார்பாக தேசிய நெல் திருவிழா மற்றும் பாரம்பரிய உணவு திருவிழா கரியமாணிக்கம் ஹோலி ப்ளவர் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் இன்று நடைபெற்றது. இந்த தேசிய நெல் திருவிழாவில் சட்டப்பேரவை தலைவர் செல்வம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு விழாவினை தொடங்கி வைத்து வாழ்த்துரை வழங்கினார். பின்னர் இயற்கை விவசாயம் செய்த விவசாயிகளை பாராட்டி பரிசுகள் வழங்கப்பட்டது.
புதுச்சேரி பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற காங்கிரஸ் கட்சி தலைவர் வைத்திலிங்கம் எம்.பி. நேற்று காலப்பட்டு சட்டமன்ற தொகுதி முழுவதும் சென்று வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார். அப்போது முன்னாள் அமைச்சர்கள் ஷாஜகான், கந்தசாமி, சட்டமன்ற உறுப்பினர் வைத்தியநாதன் இந்தியா கூட்டணி கட்சியின் தலைவர்கள், தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.
தொடக்கப்பள்ளி இடைநிலை ஆசிரியர் பணிக்கு, கூடுதலாக 1,000 பணியிடங்கள் சேர்க்கப்பட்டுள்ளது. இதனால், 2,768 பணியிடங்களுக்கு வரும் 21ஆம் தேதி தேர்வு நடைபெற உள்ளது. தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் இந்த தேர்வானது நடைபெற உள்ளது. தேர்வு கூடங்கள் பற்றிய விவரங்களை ஹால் டிக்கெட்டில் தெரிவிக்கப்படும். இன்னும் ஓரிரு நாட்களில் ஹால் டிக்கெட்டுகள் <
காரைக்கால் மாவட்டத்தில் புதுவை அரசு ரெஸ்டோரண்ட் பார் திறக்க அனுமதி அளித்துள்ளது. இதனால் அரசு அலுவலகங்கள், பள்ளிகள், கோயில்கள் உள்ளிட்ட பொது இடங்களுக்கு அருகே மதுபான கடைகள் அமைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், ரெஸ்டோரண்ட்களுக்கு அனுமதி வழங்க கூடாது என வலியுறுத்தியும் காரைக்கால் இந்து முன்னணியின் நகர தலைவர் ராஜ்குமார் தலைமையில் நேற்று மாவட்ட ஆட்சியர் மணிகண்டன் அவர்களிடம் மனு அளிக்கப்பட்டது.
புதுச்சேரி முதியோர் மற்றும் ஆதரவற்றோர் உதவித்தொகை திட்டத்தின் கீழ் பயன்பெற்று வரும் பயனாளிகள், உதவித்தொகை பெற தகுதியானவர்களா என வீடு வீடாகச் சென்று தணிக்கை செய்யப்பட உள்ளது. எனவே, மாதாந்திர உதவித்தொகை பெற்று வரும் அனைவரும், வேறு ஏதேனும் பகுதிகளில் குடியேறி இருந்தால், அவர்கள் தற்போதைய முகவரியை அருகிலுள்ள அங்கன்வாடி மையத்தில் ஒரு வாரத்திற்குள் பதிவு செய்து கொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.