Pondicherry

News July 20, 2024

புதுச்சேரி:போக்குவரத்து முதுநிலை கண்காணிப்பாளர் நியமனம்

image

புதுச்சேரியில் புதிய போக்குவரத்து முதுநிலைக் காவல் கண்காணிப்பாளராக பிரவீன் குமார் திரிபாதி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.டெல்லியில் பணியாற்றி வந்த பிராவின் குமார் திரிபாதி பணிமாறுதல் பெற்று புதுச்சேரி போக்குவரத்து முதுநிலை கண்காணிப்பாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை துணைநிலை ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தலின்படி,மாநில தலைமை செயலர்,சரத் சௌகான் பிறப்பித்துள்ளார்.

News July 20, 2024

முன்னாள் பாஜக தலைவர் பரபரப்பு கருத்து

image

புதுவை பாஜக முன்னாள் மாநில தலைவர் சாமிநாதன் வெளியிட்டுள்ள அறிக்கையில், காமராஜரை பின்பற்றும் புதுவை முதல்வர், அதுபோல இந்த ஆண்டு ஆக 4ஆம் தேதி முதல்வர் தனது தொண்டர்களுக்கு ப்ளக்ஸ் மற்றும் பேனர் வைக்கும் பணத்தை ஏராளமான ஏழை மாணவர்களுக்கு வழங்க முன்வர வேண்டும் என்று அறிவுறுத்தினார். மேலும் பேனர் இல்லாத அழகிய புதுவை உருவாக்க முதல்வர் முதல் முயற்சி எடுக்க வேண்டும் என்றார்.

News July 20, 2024

புதுச்சேரி கல்வித்துறை முக்கிய அறிவிப்பு

image

புதுச்சேரி மாநில பள்ளி கல்வித்துறை இயக்குநர் பிரியதர்ஷினி இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் புதுச்சேரி மாநிலத்தில் வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள மாணவர்களுக்கு வழங்கப்படும் உதவித்தொகை பெற வரும் செப்டம்பர் மாதம் 30 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று பள்ளி கல்வித்துறை இயக்குநர் பிரியதர்ஷினி தெரிவித்துள்ளார்.

News July 20, 2024

புதுச்சேரிக்கு 2ஆம் இடம்

image

புதுவை அரசின் உள்ளாட்சித் துறையின் கீழ் செயல்பட்டு வரும், நகர்ப்புற வளர்ச்சி முகமை, தீனதயாள் அந்தியோதியா யோஜனா தேசிய அளவிலான தெருவோர வியாபாரிகளின் வாழ்வாதார மேம்பாட்டுத் திட்டத்தில், புதுவை மாநிலத்துக்கு இரண்டாம் பரிசு கிடைத்துள்ளது. இதற்கான சான்றிதழ் புதுவை உள்ளாட்சித் துறை இயக்குநரிடம் புது தில்லியில் நேற்று வழங்கப்பட்டது.

News July 20, 2024

புதிய காவல் கண்காணிப்பாளர் நியமனம்

image

புது தில்லியில் இருந்து புதுச்சேரிக்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ள பிரவீன்குமார் திரிபாதி, புதுச்சேரி போக்குவரத்துக் காவல் துறையின் முதுநிலைக் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை துணைநிலை ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தலின்படி, மாநில தலைமைச் செயலர் சரத்செளகான் நேற்று பிறப்பித்துள்ளார்.

News July 19, 2024

புதுவையில் பறந்த அதிரடி உத்தரவு

image

காரைக்கால் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில், தினமும் காலை நடைபெறும் அவையின் போது மாணவ, மாணவிகள் அனைவரும் போதைப்பொருள் பயன்பாட்டுக்கு எதிரான உறுதிமொழி எடுக்க மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி மற்றும் கல்வித்துறை துணை இயக்குநர் ஆகியோர் அறிவுறுத்தும்படி காரைக்கால் மாவட்ட ஆட்சியர் மணிகண்டன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

News July 19, 2024

காரைக்காலில் 1ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு

image

வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளதால் புதுவை மற்றும் தமிழகத்தில் உள்ள 9 துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ள நிலையில், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் உள்ள துறை முகங்களில் 1 ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது‌. மேலும் மீனவர்கள் தங்களது படகுகளை பாதுகாப்பாக வைத்து கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

News July 19, 2024

சாராயம் கடத்தினால் கடும் நடவடிக்கை எஸ்.பி. எச்சரிக்கை

image

புதுவை வில்லியனுார், மங்கலம், திருக்கனுார், திருபுவனை, நெட்டப்பாக்கம் மற்றும் காட்டேரிக்குப்பம் பகுதியில் உள்ள சாராயக்கடை உரிமையாளர்களை அழைத்து எஸ்பி வம்சிதரெட்டி நேற்று ஆலோசனை கூட்டம் நடத்தினார். இக்கூட்டத்தில் வில்லியனுார் பகுதிகளில் இருந்து தமிழகத்திற்கு சாராயம் கடத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கடை உரிமையாளர்களுக்கு எஸ்பி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

News July 19, 2024

புதுச்சேரியில் போலீசார் தீவிர சோதனை

image

தமிழகத்தில் ரவுடிகள் மீது போலீசார் என்கவுண்டர் உள்ளிட்ட தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். இந்த நிலையில், தமிழகத்தைச் சேர்ந்த ரவுடிகள் புதுச்சேரியில் பதுங்கி இருப்பதாக புதுச்சேரி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், காவல் ஆய்வாளர் செந்தில் குமார் தலைமையிலான போலீசார், ஒதியஞ்சாலை பகுதிக்குட்பட்ட தங்கும் விடுதிகள் விடுதிகள் மற்றும் முக்கிய ஹோட்டல்களில் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.

News July 18, 2024

பல் மருத்துவப் படிப்பு: வரைவு தரவரிசை பட்டியல் வெளியீடு

image

புதுச்சேரி சென்டாக் ஒருங்கிணைப்பாளர் அமன் சர்மா இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்;  முதுநிலை பல் மருத்துவ படிப்பில் அரசு நிர்வாகம் சிறுபான்மையினர் என்.ஆர்.ஐ. ஒதுக்கீடு இடங்களுக்கு வரைவு தரவரிசை பட்டியலை சென்டாக் வெளியிட்டுள்ளது. இதில் ஆட்சேபனைகள் இருந்தால் நாளை 19ஆம் தேதி மாலை 3 மணிக்கு தெரிவிக்கலாம். சமீபத்தில் புதுப்பிக்கப்பட்ட சான்றிதழ்களை சமர்ப்பிக்கலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

error: Content is protected !!