Pondicherry

News July 28, 2024

போதைப் பொருள் எதிர்ப்பு மினி மாரத்தான்

image

BNI பாண்டிச்சேரி சார்பில் இன்று காலை புதுச்சேரி கடற்கரை சாலையில் நடைபெற்ற போதைப் பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு மினி மாரத்தான் போட்டியை முதுநிலை காவல் கண்காணிப்பாளர் நாரா சைதன்யா மற்றும் காவல் கண்காணிப்பாளர் லட்சுமி சௌஜன்யா ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். இந்த மாரத்தான் போட்டியில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

News July 28, 2024

அதிமுக நிர்வாகி வெட்டி கொலை

image

புதுச்சேரி மாநில எல்லைப்பகுதியான திருப்பனாம்பாக்கம் அருகே கடலூர் நவநீதம் பகுதி அதிமுக வார்டு செயலாளர் பத்மநாதன் (43) மர்ம நபர்களால் இன்று காலை வெட்டி கொல்லப்பட்டார். அதிகாலை கோவில் கலை நிகழ்ச்சிக்கு சென்று விட்டு இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பும் போது, காரில் வந்த மர்ம நபர்கள் அவரது பைக்கை இடித்து கீழே தள்ளி வெட்டி கொன்றுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

News July 28, 2024

எம்.பி.பி.எஸ் சேர்க்கைக்கு தகவல் கையேடு வெளியீடு

image

புதுச்சேரி அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ், பல் மருத்துவம் உள்ளிட்ட படிப்புகளுக்கு நீட் மதிப்பெண் அடிப்படையிலான மாணவர் சேர்க்கை நடத்த சென்டாக் தயாராகி வருகிறது. இதனை முன்னிட்டு மருத்துவ படிப்புகளுக்கான தகவல் கையேட்டினை சென்டாக் தனது இணையதளத்தில் நேற்று வெளியிட்டுள்ளது. கலந்தாய்வுக்கு விண்ணப்பித்துள்ள மாணவர்கள் கையேட்டினை பதிவிறக்கம் செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

News July 28, 2024

புதிய துணை நிலை ஆளுநர் நியமனம்

image

புதுச்சேரியின் தற்போதைய துணை நிலை ஆளுநராக சி.பி. ராதாகிருஷ்ணன் இருந்து வரும் நிலையில், புதுச்சேரியின் புதிய துணை நிலை ஆளுநராக கே.கைலாசநாதன் குடியரசு தலைவரால் நியமனம் செய்யப்பட்டுள்ளார். கே.கைலாசநாதன் பிரதமர் நரேந்திர மோடி குஜராத் மாநில முதலமைச்சராக இருந்த போது குஜராத் அரசின் முதன்மை செயலாளராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

News July 28, 2024

புதுவைக்கு மத்திய இணை அமைச்சர் வருகை

image

புதுச்சேரிக்கு இன்று வருகை தந்துள்ள மத்திய ரயில்வே மற்றும் ஜல் சக்தி துறை இணை அமைச்சர் சோமன்னாவை புதுச்சேரி சட்டப்பேரவை தலைவர் செல்வம் சால்வை அணிவித்து மலர் கொத்துக் கொடுத்து வரவேற்றார். மேலும் வரவேற்பில் புதுச்சேரி மாநில பாஜக பொறுப்பாளர் நிர்மல் குமார் சுரானா, புதுச்சேரி அமைச்சர் சாய் ஜெ சரவணன் குமார், பாஜக மாநில தலைவர் செல்வகணபதி மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் உடன் இருந்தனர்.

News July 27, 2024

கமலஹாசனை சந்தித்து நன்றி தெரிவித்த வைத்திலிங்கம்

image

புதுச்சேரி மக்களவைத் தொகுதியில் இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கம் எம்பி இன்று சென்னையில் மக்கள் நீதி மைய கட்சியின் தலைவர் கமலஹாசனை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தார். அப்போது முன்னாள் முதல்வர் நாராயணசாமி, முன்னாள் எம்எல்ஏக்கள், மற்றும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.

News July 27, 2024

புதுச்சேரி சட்டப்பேரவையில் சபாநாயகர் ஆய்வு

image

புதுச்சேரியில் வரும் 31.07.2024 அன்று புதுச்சேரி சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடரை நடைபெற உள்ளது. மேலும் சட்டப்பேரவைத் தலைவர் இன்று சட்டப்பேரவை கூட்ட மைய அரங்கை பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது சட்டப்பேரவை செயலர் தயாளன் உடன் இருந்தார். தொடர்ந்து ஆகஸ்ட் 2ஆம் தேதி நிதித்துறை பொறுப்பு வகிக்கும் முதலமைச்சர் ரங்கசாமி பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார்.

News July 27, 2024

திருமாவளவனை சந்தித்து நன்றி தெரிவித்த வைத்திலிங்கம்

image

புதுச்சேரி மக்களவைத் தொகுதியில் இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற வைத்த வைத்தியலிங்கம் எம்.பி. இன்று சென்னையில் விசிக தலைவர் தொல். திருமாவளவனை சந்தித்து நன்றி தெரிவித்தார். அப்போது முன்னாள் முதல்வர் நாராயணசாமி, சட்டமன்ற கட்சி தலைவர் வைத்தியநாதன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆனந்தராமன், கார்த்திகேயன் மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.

News July 27, 2024

இலவச கண் பரிசோதனை முகாம்

image

புதுச்சேரி நகரப்பகுதியில் உள்ள ‘சர்க்கிள் தி பாண்டிச்சேரி’ அமைப்பு சார்பில் இலவச கண் பரிசோதனை மருத்துவ முகாம் சர்க்கிள் தி பாண்டிச்சேரி வளாகத்தில் இன்று நடைபெற்றது. ஜோதி கண் மருத்துவமனை மற்றும் ரோட்டரி கிளப் ஆப் பாண்டிச்சேரி ஆகியவை இணைந்து நடத்திய பரிசோதனை முகாமினை சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் சிவா தொடங்கி வைத்து கண் பரிசோதனை செய்து கொண்டார்.

News July 27, 2024

கூட்டுறவு மேலாண்மை பயிற்சியில் சேர விண்ணப்பிக்கலாம்

image

புதுச்சேரி கூட்டுறவு மேலாண்மை இயக்குநர் மாறன் நேற்று வெளியிட்ட செய்திகுறிப்பில், கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் 2024-25ஆம் கல்வியாண்டிற்கான ஒரு ஆண்டு கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சியில் சேர விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்தப் பயிற்சியில் சேர 17 வயது பூர்த்தியடைந்திருக்க வேண்டும். கல்வித் தகுதியாக +2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பட்டதாரிகளும் விண்ணப்பிக்கலாம் என்று அவர் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!