Pondicherry

News July 31, 2024

புதுச்சேரியில் ஆட்சியை கவிழ்க்க மாட்டோம் – நாராயணசாமி

image

புதுச்சேரி காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் முதல்வர் நாராயணசாமி பாஜக மற்றும், என்.ஆர்.காங்கிரஸ் இடையே கூட்டணியில் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதனால், இந்த ஆட்சி நீடிக்குமா என்ற கேள்வி மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. இதை குறை பிரசவ ஆட்சியாகத்தான் நினைக்கிறோம். அதே சமயத்தில் ஆட்சி கவிழ்ப்பு வேலையில் நாங்கள் ஈடுபட மாட்டோம்” என்றார்

News July 31, 2024

சட்டப்பேரவையில் ஆளுநர் உரை நேரடி ஒளிபரப்பு

image

சட்டசபை செயலர் தயாளன் நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், புதுச்சேரியில் 15வது சட்டசபை, 5வது கூட்டத்தொடர் இன்று காலை 9.30 மணிக்கு ஆளுநர் ராதாகிருஷ்ணன் உரையுடன் தொடங்குகிறது. ஆளுநரின் உரை நிகழ்ச்சி, சமூக வலைதங்களான யூடியூப், முகநூல், எக்ஸ் தளம் உள்ளிட்டவற்றில் நேரடியாக ஒளிபரப்பு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், துர்தர்ஷன் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்படும் என அறிவித்துள்ளார்.

News July 30, 2024

டிஜிபிக்கு முதல்வர் அமைச்சர்கள் வாழ்த்து

image

புதுச்சேரி மாநில டிஜிபியாக உள்ள ஸ்ரீனிவாஸ் நாளையுடன் பணி ஓய்வு பெற உள்ளார். இதனை அடுத்து அவருக்கு பாராட்டு விழா முதலியார் பேட்டையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இன்று நடைபெற்றது. இதில் முதல்வர் ரங்கசாமி, சபாநாயகர் செல்வம், அமைச்சர்கள் சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டு அவருக்கு பொன்னாடை போர்த்தி பூங்கொத்து கொடுத்து வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

News July 30, 2024

காவல் துறையின் கையேடு புத்தகம் வெளியீடு

image

புதுச்சேரி காவல் துறைக்கான காவல் துறையின் செயல் முறை கையேடு அடங்கிய புத்தகம் மற்றும் புதுச்சேரி காவல் துறைக்கான பாடல் வெளியீட்டு விழா, முதலியார்பேட்டையில் உள்ள தனியார் மஹாலில் இன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் முதலமைச்சர் ரங்கசாமி மற்றும் உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் ஆகியோர் கலந்து கொண்டு நிகழ்ச்சியை குத்து விளக்கு ஏற்றி வைத்தனர். அதை தொடர்ந்து காவல் துறையின் கையேடு புத்தகத்தை வெளியிட்டனர்.

News July 30, 2024

முதலமைச்சரிடம் எதிர்க்கட்சித் தலைவர் கோரிக்கை

image

புதுச்சேரி சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் சிவா இன்று முதல்வர் ரங்கசாமியை சட்டப்பேரவையில் சந்தித்து மனு ஒன்றை அளித்தார். அந்த மனுவில், ஓய்வு பெற்ற துணை இராணுவப் படையினருக்கு அரசின் சலுகைகள் கிடைக்கச் செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். நாட்டை பாதுகாத்த நம் மண்ணின் மைந்தர்களும் அரசின் சலுகைகளைப் பெற தங்கள் அரசு கொள்கை முடிவெடுத்து நடப்பாண்டில் அரசாணை வெளியிட வேண்டும் என்று வலியுறுத்தினார்.

News July 30, 2024

சட்டப்பேரவையில் நாளை கவர்னர் சிபி ராதாகிருஷ்ணன் உரை

image

15-ஆவது புதுச்சேரி சட்டப்பேரவையின் ஐந்தாவது கூட்டத்தொடர் நாளை காலை 9.30 மணிக்கு சட்டப்பேரவையின் மைய மண்டபத்தில் கூட்டப்படுகிறது. இதில் துணை நிலை ஆளுநர் சிபி ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு உரையாற்ற உள்ளார். வரும் ஆகஸ்ட் 2ஆம் தேதி நிதித்துறை பொறுப்பு வகிக்கும் முதல்வர் ரங்கசாமி பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார்.

News July 30, 2024

புதுவை முதல்வரை சந்தித்து விவசாயிகள் கோரிக்கை

image

காரைக்கால் மாவட்ட டெல்டா விவசாயிகள் நல சங்க இணை செயலாளர் சோமு தலைமையில் காரைக்கால் மாவட்ட விவசாயிகள் புதுச்சேரி மாநில முதலமைச்சர் ரங்கசாமி மற்றும் வேளாண் துறை அமைச்சர் தேனி ஜெயக்குமார் ஆகியோரை புதுச்சேரி சட்டப்பேரவையில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். இதில் முதலமைச்சரிடம் விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகளை வைத்தனர். இதற்கு நடவடிக்கை எடுப்பதாக முதல்வர் உறுதி அளித்தார்.

News July 30, 2024

புதுச்சேரி சிறப்பு நீதிமன்றத்திற்கு வழக்கறிஞர் நியமனம்

image

சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றும் E. சந்திரசேகரன் புதுச்சேரி சிறப்பு நீதிமன்ற தேசிய புலனாய்வு முகமையின் வழக்கறிஞராக இன்று நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை மத்திய அரசு பிறப்பித்துள்ளது. இவர் தேசிய நீதித்துறை அகாடமியின் பயிற்றுநராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

News July 30, 2024

படகுகளை பழுது நீக்க நிதியுதவி

image

புதுச்சேரி மீனவர் நலத்துறை மூலம் மீன்பிடி விசைப்படகுகளுக்கு பழுது நீக்க 82 மர இரும்பு ஃபைபர் விசைப்படகுகளுக்கு ரூ.24,60,000 மற்றும் 49 சிறிய விசைப்படகுகளுக்கு ரூ.9,80,000 என மொத்தம் ரூ.34,40,000 நிதியுதவியை முதலமைச்சர் ரங்கசாமி, மீன்வளத்துறை அமைச்சர் லட்சுமிநாராயணன் முன்னிலையில் விசைப்படகு உரிமையாளர்கள் சங்கத் தலைவரிடம் சட்டசபையில் இன்று வழங்கினார்.

News July 30, 2024

‘ரங்கசாமி டம்மி முதல்வராக உள்ளார்’

image

புதுச்சேரி காங்கிரஸ் அலுவலகத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் முதல்வர் நாராயணசாமி, ‘முதலமைச்சரின் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டிய அமைச்சர்கள் தான்தோன்றித்தனமாக செயல்படுகிறார்கள். முதல்வர் டம்மியாக இருக்கிறார். புதுவை அரசு மீது வழக்கு தொடர்ந்த அமைச்சர் சாய். சரவணகுமார் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை’ என்று கேள்வி எழுப்பிய அவர், புதுச்சேரியில் அனைத்து துறைகளிலும் ஊழல் நடக்கிறது என்றார்.

error: Content is protected !!