Pondicherry

News September 7, 2024

அரசு பள்ளியில் ஸ்மார்ட் கிளாஸ் திறப்பு விழா

image

புதுச்சேரி இலாசுப்பேட்டை பகுதியில் உள்ள கோலக்கார அரங்கசாமி நாயகர் அரசு நடுநிலைப் பள்ளியில் ஸ்மார்ட் கிளாஸ் திறப்பு விழா முதலமைச்சர் ரங்கசாமி அவர்கள் தலைமையில் நடைபெற்றது. விழாவில் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வைத்தியநாதன் மற்றும் பாஜக தலைவர் செல்வகணபதி, ஆகியோர் கலந்து கொண்டனர். அதனைத் தொடர்ந்து முதலமைச்சர் மாணவர்களுக்கு இனிப்பு வழங்கினார் .

News September 7, 2024

விநாயகர் சதுர்த்தி – புதுச்சேரி கவர்னர் வாழ்த்து

image

விநாயகர் சதுர்த்தியையொட்டி புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கைலாஷ்நாதன் இன்று வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் இந்திய வழிபாட்டு மரபில் முழு முதற்கடவுளாக போற்றப்படும் விநாயக பெருமாளின் அருளால் மக்கள் அனைவரும் வளம்பெற வேண்டிக் கொள்வோம். அனைவரது வாழ்விலும் மகிழ்ச்சி பொங்கி, வெற்றிகள் சேர என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

News September 6, 2024

புதுச்சேரி துணைநிலை ஆளுநர் அறிவித்த செய்தி

image

புதுச்சேரியில் 2024 ஆம் ஆண்டு செப்டம்பர் 07 ஆம் தேதி சனிக்கிழமை புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் அனைத்துப் பகுதிகளுக்கும் அனைத்து பொதுத்துறை நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள் (தொழில்முறை கல்லூரிகள் உட்பட) உட்பட அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் நிறுவனங்களுக்கு “விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விடுமுறை தினம் என புதுச்சேரி துணைநிலை ஆளுநர் மகிழ்ச்சியுடன் அறிவித்துள்ளார்.

News September 6, 2024

புதுச்சேரியில் நாளை அரசு விடுமுறை

image

நாடுமுழுவதும், வருகின்ற செப்டம்பர் 7-ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி கோலாகலமாக கொண்டாடப்படவுள்ளது. புதுச்சேரியில் விநாயகர் சதுர்த்தியை ஒட்டி கல்வி நிறுவனங்களுக்கு, அலுவலகங்களுக்கு நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து விநாயகர் சதுர்த்திக்கு தேவையான பொருட்கள் விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது.

News September 6, 2024

மடுகரை அருகே வாலிபரை தாக்கிய மூன்று பேர் கைது

image

தட்டாம்பாளையம் மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் சக்திமுருகன் இவர் நேற்று முன்தினம் இரவு மடுகரை பஸ் நிலையத்தில் நின்று கொண்டிருந்தார். அங்கு வந்த அதே பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணா, பசுபதி, சதீஷ் ஆகியோர் முன்விரோதத்தில் சக்தி முருகனை சரமாரியாக தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர். புகாரின் பேரில் மடுகரை சப் இன்ஸ்பெக்டர் குப்புசாமி வழக்குப் பதிந்து கிருஷ்ணா உட்பட மூன்று பேரையும் நேற்று கைது செய்தனர்.

News September 6, 2024

புதுச்சேரி அருகே காதலி இறந்த சோகத்தில் காதலன் தற்கொலை

image

புதுச்சேரி குமரகுருபள்ளத்தை சேர்ந்த ரவிச்சந்திரன் மகன் ரவிக்குமார், தனியார் விடுதி ஊழியர். இவர் காதலித்த பெண் இறந்ததால், மன உளைச்சலில் இருந்து வந்த அவர், எலி பேஸ்ட் சாப்பிட்டார். சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தார். இதுகுறித்து, ரெட்டியார்பாளையம் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

News September 6, 2024

மாஹே ஆற்றங்கரையில் புதுச்சேரி கவர்னர் ஆய்வு

image

அரச முறை பயணமாக இன்று மாஹே சென்ற புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கைலாஷ்நாதன் மாஹே ஆற்றங்கரையில் செயல்படுத்தப்பட்ட நடைபாதை மூன்றாம் கட்டப் பணிகளை பார்வையிட்டு அதன் பின்னர் மாஹி மீன்பிடி துறைமுகத்தை பார்வையிட்டு அங்குள்ள மீனவர்களின் தேவைகள் குறித்தும் அவர்கள் சந்திக்கும் சவால்கள் குறித்தும் விசாரித்தறிந்தார். அப்போது அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர்

News September 6, 2024

புதுச்சேரியில் தண்ணீர் கட்டணம் ஆன்லைனில் செலுத்தும் வசதி

image

புதுச்சேரி பொதுப்பணித்துறை, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மூலம் புதுச்சேரியில் தண்ணீர் கட்டணங்களை ஆன்லைன் மூலம் செலுத்தும் பாரத் பில் பேமென்ட் வசதியினை முதல்வர் ரங்கசாமி துவக்கி வைத்தார். இதன் துவக்க விழா சட்டசபையில் நேற்று நடந்தது. இந்த நிகழ்ச்சியில், பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமிநாராயணன், தலைமைப் பொறியாளர் தீனதயாளன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

News September 5, 2024

ராஜீவ் காந்தி ஆயுர்வேத மருத்துவக் கல்லூரியில் கவர்னர் ஆய்வு

image

அரசு முறைப் பயணமாக இன்று மாஹி வந்துள்ள துணைநிலை ஆளுநர் கைலஷ்நாதன் ராஜீவ் காந்தி ஆயுர்வேத மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையைப் பார்வையிட்டு கல்வி நிறுவனத்தின் செயல்பாடுகள், மாணவர்களின் எண்ணிக்கை, மருத்துவமனையின் செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்தார். ஆயுர்வேத மருந்துகள் தயாரிக்கும் முறையையும் கேட்டறிந்தார்.

News September 5, 2024

புதுச்சேரி பள்ளி கல்வி இயக்கம் ஆசிரியர்களுக்கு நினைவு பரிசு

image

புதுச்சேரி பள்ளி கல்வி இயக்கம் சார்பில் ஆசிரியர் தின விழா இன்று கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி மற்றும் உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர். தொடர்ந்து புதுச்சேரி அரசு பள்ளி மற்றும் கல்லூரிகளில் சிறந்து விளங்கிய ஆசிரியர்களுக்கு நினைவு பரிசு வழங்கி வாழ்த்து தெரிவித்தனர். இதில் ஏராளமான ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

error: Content is protected !!