India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
புதுச்சேரியில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன், விமான நிலையத்தை விரிவாக்கம் செய்ய திட்டமிட்டுள்ளோம், அதற்கான நிலத்தை கையகப்படுத்துவது முக்கியம். தமிழகம், புதுச்சேரியில் எவ்வளவு நிலம் தேவை என்பதை ஆராய வேண்டும். இதன் மூலம் மக்கள் வேலைவாய்ப்பு, புதுச்சேரிக்கான பயன் தொடர்பாகவும் ஆராயப்படும் அதன் பிறகே விமான நிலையம் இட மாற்றம் குறித்து அறிவிக்கப்படும் என்றார்.
புதுவை அரசு நேற்று வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, மிலாடி நபியினை முன்னிட்டு 17.09.2024 (செவ்வாய்) அன்று விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே 17.09.2024 அன்று ஜிப்மரில் வெளிபுற நோயாளிகள் பிரிவு இயங்காது. இந்த தேதியில் நோயாளிகள் வெளிபுற சிகிச்சை பிரிவுக்கு வருவதை தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும் அவசரபிரிவு சேவை, 16 தேதி வழக்கம் போல் மருத்துவமணை இயங்கும்.
புதுச்சேரி முருங்கப்பாக்கம் துளுக்கானத்தம்மன் நகரைச் சார்ந்த முருகன் என்பவரது மகன் செல்வன் ஜெகதீஷ் கடந்த சில தினங்களுக்கு முன்பு பாண்டி மெரினா கடற்கரையில் போட்டோ எடுத்துக்கொண்டிருந்த போது எதிப்பாராத விதமாக ராட்சத அலையில் சிக்கி உயிரிழந்தார்.
இதனைத் தொடர்ந்து உயிரிழந்த செல்வன் ஜெகதீஷின் பெற்றோருக்கு நிவாரணமாக இன்று சட்டப்பேரவையில் முதல்வர் ரங்கசாமி 5 லட்சத்திற்கான காசோலையை வழங்கினார்.
மகாகவி சுப்பிரமணிய பாரதியார் நினைவு தினத்தை முன்னிட்டு புதுச்சேரி துணைநிலை ஆளுநர் மாளிகை அருகே அமைந்துள்ள பாரதியாரின் திரு உருவ சிலைக்கு இன்று புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கைலாசநாதன் மற்றும் முதலமைச்சர் ரங்கசாமி சபாநாயகர் செல்வம் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர். இதுபோன்று பல்வேறு சமூக அமைப்பினரும் பாரதியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.
மகாகவி சுப்பிரமணிய பாரதியார் நினைவு நாள் புதுச்சேரி அரசு சார்பில் இன்று அனுசரிக்கப்பட்டது. இதனையொட்டி பாரதி பூங்காவில் அமைந்துள்ள அவரது திருவுருவச்சிலைக்கு புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன், முதலமைச்சர் ரங்கசாமி, சட்டப்பேரவைத் தலைவர் செல்வம், அமைச்சர்கள் லட்சுமிநாராயணன், திருமுருகன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
புதுச்சேரி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சாமிநாதன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், புதுச்சேரி மாநிலத்தில் உள்ள பல்வேறு அரசு அலுவலகங்களில், உயர் அதிகாரிகள் வாடகை கார்களை பயன்படுத்தி ஆண்டுக்கு பல கோடி ரூபாய் மக்கள் வரிப்பணத்தை விரயம் செய்து வருகிறார்கள். புதுச்சேரி ஆளுநர் இந்த விஷயத்தில் உடனடியாக தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி, காரைக்கால் மற்றும் ஏனாம் பிராந்தியங்களில் வரும் 17 ஆம் தேதியும், மாகி பிராந்தியத்தில் வரும் 16 ஆம் தேதியும் மிலாது நபி கொண்டாடப்பட உள்ளது. ஏற்கனவே அறிவிக்கப்பட்ட மிலாது நபி விடுமுறை புதுச்சேரி, காரைக்கால் மற்றும் ஏனாம் பிராந்தியங்களுக்கு வரும் 17 ஆம் தேதியும், மாகி பிராந்தியத்திற்கு வரும் 16 ஆம் தேதியும் மாற்றம் செய்து உள்துறை சார்பு செயலர் ஹிரன் நேற்று உத்தரவிட்டார். ஷேர் செய்யவும்
புதுவையில் டெங்கு காய்ச்சலை எதிர்த்துப் போராடுவதற்கு ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு அதிகாரமளிக்கும் ஒரு விரிவான திட்டமான, “டிரீம்ஸ் 24” பள்ளிகளில் கல்வி, விழிப்புணர்வு மற்றும் கண்காணிப்பு முயற்சியின் மூலம் டெங்குவை குறைக்கும் திட்டத்தை முதலமைச்சர் ரங்கசாமி அவர்கள் இன்று தொடங்கி வைத்தார். இதில் சபாநாயகர் செல்வம், அரசு கொறடா உட்பட பலர் உடன் இருந்தனர்.
புதுச்சேரி சிறந்த காவல் நிலையமாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஒதியஞ்சாலை காவல் நிலையத்தில் ஆய்வாளர் செந்தில்குமார் உதவி ஆய்வாளர் பிரபு ஆகியோரை இன்று சந்தித்து புதுச்சேரி பத்திரிக்கையாளர் சங்கத்தின் சார்பில் மாநில தலைவர் பாரதி தலைமையில் நினைவு பரிசும், சால்வையை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர். இதில் கௌரவ தலைவர் ரவி ஜான் செயலாளர் மருது வடிவேல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
புதுச்சேரியில் உயர்த்தப்பட்டுள்ள மின்கட்டண உயர்வை ரத்து செய்ய கோரியும், ப்ரீபெய்டு மீட்டர் திட்டத்தை கைவிட கோரியும், மின்துறையை தனியார் மயம் ஆக்குவதை கைவிட கோரியும் இந்தியா கூட்டணி சார்பில் வருகிற 18ஆம் தேதி முழு அடைப்பு போராட்டம் நடத்துவது என கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் இன்று நடைபெற்ற இந்தியா கூட்டணி தலைவர்கள் ஆலோசனை கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டு அறிவிக்கப்பட்டது.
Sorry, no posts matched your criteria.