India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
புதுச்சேரி வருமான வரித்துறை அலுவலகத்தில் விளையாட்டு வீரர்களுக்கான காலியிடங்களுக்கு அறிவிப்பு இன்று வெளியிடப்பட்டுள்ளது. வருமான வரி ஆய்வாளர் 11, வரி உதவியாளர் 11, எம்.டி.எஸ் 11 என மொத்தம் 33 இடங்கள் உள்ளன. இதில் விளையாட்டு வாரியாக கிரிக்கெட் 3, வாலிபால் 3, செஸ் 3, தடகளம் 3, நீச்சல் 3, கபடி 2 உட்பட 33 இடம் உள்ளது. மேலும் sports.tnincometax.gov.in இணையதளத்தில் விவரங்கலாள் குறித்து தெரிந்துகொள்ளலாம்.
புதுவை லெனின் வீதியில் உள்ள இந்தியன் வங்கி ஊரக சுயவேலை வாய்ப்பு பயிற்சி நிறுவனத்தில் ஏ.சி. பிரிட்ஜ் சர்வீஸ் மற்றும் ரிப்பேர் பயிற்சிக்கான விண்ணப்பங்கள் வழங்கப்படுகின்றன. 8ம் வகுப்பு படித்துள்ள, புதுவையை சேர்ந்த 18 முதல் 45 வயது வரையுள்ள ஆண்கள் மட்டுமே விண்ணப்பிக்கலாம். பயிற்சி முகாம் வரும் 30ம் தேதி துவங்கப்படுகிறது. மேலும் விபரங்களுக்கு 0413 – 2246500 என்ற தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
அரசு முறைப் பயணமாக புதுச்சேரி வந்துள்ள மத்திய உள்துறை அமைச்சகச் செயலாளர் கோவிந்த் மோகன், கூடுதல் செயலர் அசுதோஸ் அக்னிஹோத்ரி ஆகியோர் மரியாதை நிமித்தமாக துணைநிலை ஆளுநர் கைலஷ்நாதனை ஆளுநர் மாளிகையில் இன்று சந்தித்துப் பேசினர். அப்போது புதுச்சேரி தலைமைச் செயலர் சரத் சௌகான், துணைநிலை ஆளுநரின் செயலர் நெருஞ்செழியன் ஆகியோர் உடன் இருந்தனர்.
மத்திய உள்துறை செயலாளர் கோவிந்த் மோகன் கூடுதல் செயலாளர் அசுதோஷ் அக்னிகோத்ரி ஆகியோர் அரசு முறை பயணமாக புதுவைக்கு வந்துள்ளனர். இன்று சட்டப்பேரவைக்கு வந்த அவர்களிடம் புதுச்சேரியில் ஏர்போர்ட் விரிவாக்கம், புதிய சட்டப்பேரவை கட்டிடம் கட்ட, மருத்துவ பல்கலைக்கழகம் மற்றும் தேசிய சட்டப் பல்கலைக்கழகம் அமைக்க ரூ.5,828 கோடி தேவை என்று மத்திய உள்துறை செயலரிடம் முதல்வர் ரங்கசாமி மனு அளித்துள்ளார்.
புதுச்சேரி நகர பகுதியில் சுற்றுலா பயணிகளுக்கு கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. பெரியக்கடை சப் இன்ஸ்பெக்டர் முருகன் தலைமையிலான போலீசார் நேற்று சின்ன வாய்க்கால் வீதி சந்திப்பு அருகே சந்தேகத்திற்கு இடமாக நின்றிருந்த 4 பேரை பிடித்து, விசாரித்தனர். நடத்திய சோதனையில், சிறிய பிளாஸ்டிக் பைகளில் கஞ்சா மறைத்து வைத்து விற்பனை செய்வது தெரியவந்தது. அவர்களை கைது செய்தனர்.
புதுச்சேரி அரசு பள்ளிக் கல்வித்துறை சார்பாக மாநில அளவிலான பள்ளி மாணவ – மாணவியருக்கான விளையாட்டுப் போட்டிகள் காரைக்காலில் உள் விளையாட்டரங்கில் கடந்த 2 நாட்களாக நடைபெற்றது. இன்று மாலை, இதற்கான பரிசளிப்பு விழா அமைச்சர் திருமுருகன் தலைமையில் நடைபெற்றது. 576 மாணவ மாணவிகள் கலந்து கொண்ட இப்போட்டியில் கைப்பந்து, கைஉந்து போட்டி, கால்பந்து மற்றும் சதுரங்க போட்டிகள் நடைபெற்றன.
புதுச்சேரியில் இன்று பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வருகை புரிந்த பாஜக மேல் இட பொறுப்பாளர் நிர்மல் குமார் சுரானாவை இந்திரா காந்தி சிலை அருகே உள்ள புதுச்சேரி பாரதிய ஜனதா கட்சியின் தலைமை அலுவலகத்தில் உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் மற்றும் காமராஜர் நகர் தொகுதி பாஜக சட்டமன்ற உறுப்பினர் ஜான் குமார் ஆகியோர் சந்தித்து பொன்னாடை போற்றி வரவேற்றனர்.
புதுச்சேரியில் கடந்த சில நாட்களாக மக்கள் அதிகளவில் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக வருகின்றனர். நேற்று ஒரே நாளில் மட்டும் புதுச்சேரியில் 23 பேருக்கும், காரைக்காலில் 14 பேருக்கும் டெங்கு காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்கள் தவிர, புதுச்சேரியில் வசிக்கும் தமிழக பகுதியை சேர்ந்தவர்கள் 14 பேருக்கும் டெங்கு காய்ச்சல் பாதிப்பு இன்று கண்டறியப்பட்டுள்ளது.
அரசு முறைப் பயணமாக புதுச்சேரி வந்துள்ள மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை மரியாதை நிமித்தமாக ஆளுநர் மாளிகையில் துணைநிலை ஆளுநர் கைலஷ்நாதன், முதலமைச்சர் ரங்கசாமி ஆகியோர் மத்திய நிதி அமைச்சரை பூங்கொத்து அளித்து வரவேற்றனர். இந்நிகழ்வில் தலைமைச் செயலர் சரத் சௌகான், அமைச்சர்கள் சட்டமன்ற உறுப்பினர்கள் உடன் இருந்தனர்.
புதுச்சேரி எல்லைப்பிள்ளை சாவடியில் நகர அமைப்பு குழுமம் உள்ளது இங்கு பணிபுரியும் பெண்களுக்கு ஏற்படும் பாலியல் தொந்தரவு குறித்து புகார் அளிக்க நாலு பேர் கொண்ட உள் புகார் குழு அமைக்கப்பட்டுள்ளது. குழு தலைவராக விஜயலட்சுமி உறுப்பினராக சாந்தினி லாவண்யா தினேஷ் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை நகர அமைப்பு குழு கண்காணிப்பாளர் இன்று பிறப்பித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.