India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
புதுவை பாகூர் பகுதியைச் சேர்ந்த 7 வயது சிறுமியை அதே பகுதியைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் (65) பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது. இதுகுறித்து, பாகூர் போலீசில் புகார் அளிக்கப்பட்டு ராதாகிருஷ்ணன் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இதையடுத்து, பணம் கொடுத்து குற்றத்தை மறைக்க முயன்றதாக ராதாகிருஷ்ணன் மகன் கிருஷ்ணனை பாகூர் போலீசார் கைது செய்துள்ளனர்.
புதுச்சேரியில் ஒதிஞ்சாலை, சோனாம்பாளையம் சந்திப்பு சாலையில், இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையில் போலீசார் நேற்று இரவு வாகன சோதனை செய்தனர். அந்த வழியாக, போதையில் பைக் ஓட்டி வந்தவர்களை பிடித்து அபராதம் விதித்தனர். மேலும், பைக்கில் ஆவணங்கள் இல்லாமல் வந்தவர்கள், மொபைல் போன் பேசியபடியும், ஒரு பைக்கில் மூன்று பேர் உட்கார்ந்து வந்தவர்களை போலீசார் பிடித்து அபராதம் விதித்தனர்.
புதுச்சேரி சாரம் பகுதி அவ்வை திடல் அருகே கதா் கிராமத் தொழில் வாரிய அலுவலகம் உள்ளது. இதில், தலைமைச் செயல் அதிகாரியாக நரேந்திரன் உள்ளாா் மூலப்பொருள் வழங்கல் உள்ளிட்ட கோரிக்கைகளுக்காக கடந்த ஆகஸ்ட்டில் போராட்டத்தில் ஈடுபட்ட ஊழியா்கள் சிலருக்கு பணியிட மாறுதல், பணியிடை நீக்கம் செய்தனர். தலைமைச் செயல் அதிகாரியின் செயலைக் கண்டித்து ஊழியா்கள் நேற்று தலைமை அதிகாரி அறையில் அவரை உள்ளே வைத்துப் பூட்டினா்.
புதுச்சேரி லெனின் வீதியில், இந்தியன் வங்கி ஊரக சுயவேலை வாய்ப்பு பயிற்சி நிறுவனம் இயங்கி வருகிறது. பல்வேறு பயிற்சிகள் வழங்கப்பட்டு வரும் இந்த நிறுவனத்தில், பெண்களுக்கு அழகுக்கலை பயிற்சி விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. விண்ணப்பிக்க வரும் 10ம் தேதி கடைசி நாளாகும். இப்பயிற்சி 14ம் தேதி துவங்குகிறது. பயிற்சியில் சேர, 18 வயது முதல் 45 வயது வரை உள்ள பெண்கள் 8ம் வகுப்பு படித்திருக்க வேண்டும்.
புதுச்சேரி குருமாம்பேட் துணை மின் நிலைய பாதையில் பராமரிப்பு பணி காரணமாக நாளை 3.10.2024 வியாழக்கிழமை காலை 9:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை மேட்டுப்பாளையம் போக்குவரத்து நகரம், ஹரி நமோ நகர், பிரியதர்ஷினி நகர், ராஜா அண்ணாமலை நகர், சிவாஜி நகர், காமராஜர் நகர், குரு நகர், ராஜிவ் நகர், ஆதிகேசவர் நகர், இந்திரா நகர் ஆகிய பகுதிகளில் மின்தடை ஏற்படும் என மின்துறை தெரிவித்துள்ளது
புதுச்சேரி மாநில மதிப்பீட்டு குழுவின் கூட்டம் குழுவின் தலைவர் சட்டமன்ற உறுப்பினர் நாஜிம் அவர்கள் தலைமையில் இன்று நடைபெற்றது.புதுச்சேரி சட்டப்பேரவை தலைவர் செல்வம் கூட்டத்தை துவக்கி வைத்தார். இந்த கூட்டத்தில் சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் சுகாதாரத் துறையில் உள்ள பல்வேறு நிலைகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.
காரைக்கால் அடுத்த திருநள்ளாறு சேர்ந்த ராஜ்குமார். இவர் 16 வயது சிறுமியுடன் பழகி, கடந்த ஆண்டு திருமணம் செய்து சரமாரியாக தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இது தொடர்பாக சிறுமியின் தாயார் காவல் நிலையத்தில் புகார் அதன்பேரில் போலீஸார் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர். பின்னர் நீதிமன்றத்தில் ராஜ்குமாருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.7 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.
செவாலியே சிவாஜி கணேசன் பிறந்த நாள் புதுச்சேரி அரசு சார்பில் இன்று கொண்டாடப்பட்டது. இதனையொட்டி கிழக்குக் கடற்கரைச் சாலை – கருவடிக்குப்பம் சாலை சந்திப்பில் அமைந்துள்ள அவரது திருவுருவச்சிலைக்கு புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி, சட்டப்பேரவைத் தலைவர் செல்வம், அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
புதுச்சேரி சைபர் கிரைம் எஸ்.பி. கலைவாணன் நேற்று கூறியதாவது: உங்கள் வங்கி கணக்கை நாங்கள் பயன்படுத்திக் கொள்கிறோம், உங்கள் வங்கி கணக்கிற்கு எவ்வளவு பணம் வருகிறதோ அதற்கு இரண்டு சதவீதம் கமிஷன் தருகிறோம் என்று யாரும் உங்களுடைய வங்கி கணக்கை கேட்டால் கொடுக்க வேண்டாம். பெரும்பாலும் இணைய வழி மோசடிக்காரர்கள் இதுபோன்று மற்றவர்களுடைய வங்கிக் கணக்கை மோசடி செய்யப்பட்ட பணத்தைப் பெற பயன்படுத்துகின்றனர் என்றார்.
தெற்கு ரெயில்வே இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் திருச்சி கோட்டத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்படுகின்றன. அதன்படி, விழுப்புரத்தில் இருந்து புதுச்சேரி செல்லும் மின்சார ரயிலும், புதுச்சேரியில் இருந்து விழுப்புரம் வரும் மின்சார ரயிலும் வரும் 7 மற்றும் 9-ஆம் தேதிகளில் முழுவதுமாக ரத்து செய்யப்படுகின்றன.
Sorry, no posts matched your criteria.