India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
புதுவை அரசு கல்வித்துறை & விளையாட்டு துறை சார்பில், 17 &19 வயதிற்கு உட்பட்ட மாணவர்களுக்கான மண்டல அளவிலான விளையாட்டு போட்டிகள் நேற்று துவங்கியது. புதுவை, காரைக்கால், மாகி, ஏனாம் பகுதிகளை சேர்ந்த 500க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். போட்டிகள் புதுவை உப்பளம் இந்திரா காந்தி விளையாட்டு மைதானம், கதிர்காமம் அரசு பள்ளி, புதுவை பல்கலைக்கழகம், அமலோற்பவம் பள்ளி ஆகிய இடங்களில் நடந்து வருகிறது.
புதுவைக்கு வார இறுதி நாட்கள் மற்றும் விடுமுறை நாட்களில் வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம். தமிழகத்தை போல்
வெயில் தாக்கமும் இல்லை. இதனால் வெளி மாநிலங் களில் இருந்து புதுவைக்கு வழக்கத்தை விட கூட்டம் அதிகமாக காணப்படுகிறது . சுற்றுலா பயணிகள் வருகை எதிரொலியாக கடற்கரை, பாண்டி மெரினா, ஊசுட்டேரி படகு உள்ளிட்ட ஆன்மிக சுற்றுலா தலங்களிலும் மக்கள் கூட்டம் அலைமோதி வருகிறது.
புதுவை நெட்டப்பாக்கம் சொரப்பூர் கிராமத்தில் அமைந்துள்ள லட்சுமி நாராயண பெருமாள் கோவிலில் ராம நவமி உற்சவம் துவங்கி, தினமும் சாமிக்கு சிறப்பு பூஜைகள் நடந்து வருகிறது. 12வது நாளான நேற்று காலை திவ்ய பிரபந்த சேவையும், இரவு சீதா கோதண்டராமன் திருக்கல்யாணம் உற்சவமும் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
வெப்ப காலத்தில் ஏற்படும் நோய்களை சமாளிக்கவும் அவற்றுக்கு உரிய சிகிச்சை அளிக்கவும் புதுவையில் உள்ள அனைத்து மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் போதிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மக்கள் அதிக சூரிய வெப்பத்தால் உருவாகும் அயர்ச்சி மற்றும் பக்கவாதத்தை தடுத்து பாதுகாப்பாக இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து கொள்ளும்படி சுகாதாரத்துறை இயக்குனர் அறிவுறுத்தியுள்ளார்.
புதுவை கடற்கரை சாலையில் சிற்றுண்டி கடை வைத்து நடத்தி வரும் சமூக ஆர்வலரான அருண் தன்னுடைய வாகனத்தில் ஐஸ் பெட்டியில் மோர், நன்னாரி சர்பத், இளநீர், குடிநீர், லெமன் ஜூஸ் ஆகியவற்றுடன் வெயிலில் பணிபுரியும் துப்புரவு பணியாளர்கள், போக்குவரத்து போலீசார் ஆகியோருக்கு அவர்கள் பணிபுரியும் இடத்துக்கே சென்று அவர்கள் விரும்பிய குளிர்பானங்களை இலவசமாக கொடுத்து வருகிறார்.
புதுவை அரசு பள்ளிக் கல்வி இயக்ககத்தின் ஜவஹர் சிறுவர் இல்லத்தில் இலவச கோடை வகுப்புகள் மே 2 முதல் தொடங்குகிறது. இந்த ஆண்டு, கோடை விடுமுறையை முன்னிட்டு, ஜவகர் சிறுவர் இல்லத்தில் குழந்தைகளுக்காக பல்வேறு கலைகளை கற்பிக்க சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தங்கள் குழந்தைகளை சேர்க்க விரும்புவோர் 0413 – 2225751 தொலைபேசி எண்ணுக்கு தொடர்பு கொள்ளலாம் என கல்வித்துறை இயக்குனர் பிரியதர்ஷினி தெரிவித்துள்ளார்
புதுவை வ.உ.சி. வீதியில் புதுவை அருங்காட்சியகத்தில் ஷேக்ஸ்பியர் படைப்புகள் குறித்த கண்காட்சி நடைபெற்று வருகிறது.இந்த கண்காட்சியில் ஷேக்ஸ்பியரின் துன்பியல் (டிராஜிடி ) நாடகங்களுக்கான படங்கள், அவரது வாழ்க்கை, கல்வி, திருமண வாழ்க்கை காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. இந்த கண்காட்சியானது ஏப்ரல் 29 வரை நடைபெறுகிறது என்று அருங்காட்சியகம் ஆராய்ச்சி நூலக மேலாளா் மனோரஞ்சினி திருநாவுக்கரசு தெரிவித்தாா்
காரைக்காலில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்று முடிவுற்ற நிலையில் அனைத்து வாக்குப்பதிவு இயந்திரங்களும் அறிஞர் அண்ணா அரசு கல்லூரி வளாகத்தில் அமைந்துள்ள பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டது. இந்த நிலையில் காரைக்கால் மாவட்ட ஆட்சியர் மணிகண்டன் நேற்று பாதுகாப்பு குறித்து அங்கு அமைக்கப்பட்டுள்ள சி.சி.டிவி கேமராவை பார்வையிட்டு பல்வேறு பாதுகாப்புகள் குறித்தும் ஆய்வு மேற்கொண்டார்கள்.
தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் கோடை விடுமுறை தொடங்கி நிலையில் புதுச்சேரி மாநிலத்தில் உள்ள அரசு பள்ளிகளுக்கு வரும் 29 ஆம் தேதி முதல் ஜுன் 5ஆம் தேதி வரை பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை அளித்து புதுச்சேரி மாநில பள்ளிக்கல்வித்துறை சார்பில் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு மாநிலத்தில் உள்ள மதுக்கடைகள் அனைத்தும் தேர்தல் நடத்தை விதிமுறைகளின் படி இரவு 10 மணிவரை மட்டுமே இயக்க வேண்டும் என மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில் தேர்தல் வாக்குப்பதிவு முடிவடைந்து விட்டதால் மதுக்கடைகள் அனைத்தும் வழக்கம் போல் இரவு 11 மணி வரை செயல்பட புதுச்சேரி மாநில கலால் துறை சார்பில் உத்தரவிட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.