India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மணவெளி பகுதியில் எழுந்தருளியுள்ள அருள்மிகு ஸ்ரீ பஞ்சபாண்டவர் சமேத ஸ்ரீ திரௌபதி அம்மன் ஆலய பிரம்மோற்சவ விழா நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று மாலை தீமிதி திருவிழா நடைபெற்றது. மேலும் இவ்விழாவில் சபாநாயகர் ஏம்பலம் செல்வம் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் பாஸ்கர் ஆகியோர் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்த தருணம். மேலும் இந்த தீமிதி திருவிழாவில் ஊர் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
புதுச்சேரியில் கடந்த சில நாள்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. இதனால், பகலில் மக்கள் நடமாட்டம் குறைந்துள்ளது. கடற்கரைகள், சாலைகள் மற்றும் பேருந்து நிலையம், சந்தைப் பகுதிகளில் மக்கள் கூட்டம் குறைந்தே காணப்படுகிறது. இந்த நிலையில் புதுச்சேரியில் இன்று 100 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவானதாக வானிலை மைய வட்டாரங்கள் சார்பில் தெரிவித்துள்ளது.
புதுச்சேரி அதிமுக மாநில செயலாளர் அன்பழகன் இன்று முதல்வர் ரங்கசாமியை சந்தித்தார். அப்போது, தமிழகத்தில் அதிமுக ஆட்சியில் மீன்பிடி தடைக்காலத்திற்கு ரூ.8000 மழைக்கால நிவாரண உதவியாக ரூ.6000 என ஒவ்வொரு மீனவர்களுக்கும் வழங்கப்பட்டது. ஆனால் புதுவையில் தமிழகத்தை விட குறைந்த மானிய உதவி வழங்கப்பட்டு வருகிறது. எனவே தமிழகத்தில் போல் இங்கும் மானிய உதவி வழங்க வேண்டும் எனக் கோரிக்கை மனு கொடுத்தார்.
சென்னையில் உடல் பருமன் குறைப்பு அறுவை சிகிச்சையின் போது உயிர் இழந்த புதுச்சேரியை சேர்ந்த இளைஞர் ஹேம சந்திரன் மறைவிற்கு காரணமான மருத்துவர் மற்றும் மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்க தமிழக அரசிற்கு புதுச்சேரி அரசின் சார்பில் வலியுறுத்த கோரி புதுச்சேரி முதல்வர் ரங்கசாமியை இன்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் சலீம் மற்றும் இளைஞர் குடும்பத்தினர் சந்தித்து கோரிக்கை விடுத்தனர்.
ஸ்ரீ அரபிந்தோ அசிரமம் ஒரு ஆன்மீக மையமாகும். அரசியல், பத்திரிக்கையாளராக இருந்த அரவிந்தர் 1920 ஆம் ஆண்டில் புதுச்சேரிக்கு வந்து ஆன்மீகத்தில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். 1926 ஆல் அவரின் ஆசிரமம் உருவாக்கப்பட்டு, 1934 இல் பெரிதாக வளர்ச்சியைக் கண்டது. இந்த ஆசிரமத்தில் 400 க்கும் மேற்பட்ட கட்டடங்களில் பக்தர்கள் வாழ்கின்றனர். தற்போது சுற்றுலா பயணிகளும் ஆன்மீகவாதிகளும் இவ்விடத்திற்கு வந்து செல்கின்றனர்.
புதுவை கடற்கரை சாலை அருகே உள்ள பாரதி பூங்காவில் பல்வேறு தரப்பு மக்கள் போட்டோ எடுத்தும் செல்பி எடுத்தும் மகிழ்ந்து வருகின்றனர். இந்த நிலையில் பூங்காவில் போட்டோ ஷூட் மற்றும் வீடியோ எடுக்க நகராட்சியில் வருவாய் பிரிவை அணுகி அனுமதி பெற வேண்டும் எனவும் ரூ.500 கட்டணம் செலுத்த வேண்டும் அப்போதுதான் அனுமதி வழங்கப்படும் என பூங்காவின் நுழைவு வாயில் முன்பு நகராட்சி சார்பில் விளம்பர பலகை வைக்கப்பட்டுள்ளது.
புதுவையில் நாளுக்கு நாள் வெயிலின் உக்கிரம் அதிகரித்து வருகிறது. வெயிலில் இருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள இரு சக்கர வாகன ஓட்டிகள் தொப்பி, கண்ணாடி போன்றவற்றை அணிந்து செல்கின்றனர். அந்த வகையில் கால்நடைகளும் அடிக்கிற வெயிலுக்கு இரை தேடாமல் நிழலை தேடி பசு மாடுகள் அலைகின்றன.
நாடு முழுவதும் வரும் 5ம் தேதி நீட் தேர்வு நடைபெற உள்ள நிலையில் புதுச்சேரியில் 11 மையங்களில் நடக்கும் நீட் தேர்வினை 5 ஆயிரம் மாணவர்கள் எழுத உள்ளனர். இதற்கான ஏற்பாடுகள் முழு வீச்சில் நடந்து வருகிறது. இந்தாண்டு புதுச்சேரி தேர்வு மைய நடைமுறையில் மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது. அந்தந்த மாநில மாணவர்கள் அந்தந்த மாநிலங்களில் தேர்வு எழுத ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அரியாங்குப்பம் தொகுதியில் உள்ள அருள் மிகு ஶ்ரீ செடிலாடும் செங்கழு நீர் மாரியம்மன் கோவிலில் தேரோட்டம் இன்று நடைபெறுகிறது. அதனை முன்னிட்டு நேற்று கொடியேற்றம் நடைபெற்றது. இதில் சிறப்பு அலங்காரத்தில் செங்கழுநீர் அம்மன் பக்தர்களுக்கு அருள் காட்சி அளித்தார். இந்நிகழ்வில் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் பாஸ்கர் மற்றும் பொது மக்கள் திரளாக கலந்து கொண்டனர்.
காரைக்கால் அடுத்த திருப்பட்டினத்தை சேர்ந்தவர் பிரேம்குமார். இவர் இந்திய திபெத் எல்லைக் காவல் படையில் பணியாற்றி வந்தார். இந்த நிலையில் கடந்த 30ஆம் தேதி இந்தியா – சீனா எல்லை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த போது பிரேம்குமார் உடல் நலக்குறைவு ஏற்பட்டு மரணம் அடைந்துள்ளார். மரணம் அடைந்த பிரேம்குமார் உடல் நாளை முழு அரசு மரியாதையுடன் திருப்பட்டினம் பகுதியில் நல்லடக்கம் செய்யப்படுகின்றது.
Sorry, no posts matched your criteria.