Pondicherry

News March 29, 2025

தொலைதூர படிப்புகளுக்கு வரும் 31ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்

image

பல்கலைக்கழக தொலைதூர கல்வி இயக்குநர் அர்விந்த் குப்தா நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் 2025ம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை தற்போது நடந்து வருகிறது. இவற்றில் சேர விரும்பும் மாணவர்கள் வரும் 31ஆம் தேதிக்குள் https://dde.pondiuni.edu.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.ஏதேனும் விளக்கங்களுக்கு, உதவி மையத்தை 0413-2654439 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

News March 29, 2025

சிறுவர் விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

image

புதுச்சேரி இளைஞர் அமைதி மையம் நிறுவனர் அரிமதி இளம்பரிதி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆண்டுதோறும் கலை, இலக்கியம், விளையாட்டு மற்றும் சமூக சேவை ஆகிய துறைகளில் சிறந்து விளங்கும் சிறுவர்களுக்கு அரிமதி தென்னகன் சாதனை விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்தாண்டு விருதுகளுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.விண்ணப்பங்களை வரும் 15ஆம் தேதிக்குள் இளைஞர் அமைதி மையத்துக்கு அனுப்ப வேண்டும் என்றார்.

News March 29, 2025

புதுச்சேரி சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை

image

புதுச்சேரி சைபர் கிரைம் போலீசார் நேற்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், இளைஞர்களை குறி வைத்து, நீங்கள் குழந்தைகளுடைய ஆபாச படம் பார்த்து உள்ளீர்கள் அல்லது பதிவிறக்கம் (download) செய்துள்ளீர்கள் குழந்தைகள் சம்பந்தமான ஆபாச படங்களை உங்கள் நண்பர்களுக்கு பகிர்ந்து உள்ளீர்கள், என கூறி மிரட்டினால் நம்ப வேண்டாம் என புதுவை காவல்துறை எச்சரித்துள்ளனர். உடனே நண்பர்களுக்கும் Share பண்ணீடுங்க.. Share It

News March 29, 2025

வதந்தியை நம்பி திருநள்ளாறில் குவிந்த பக்தர்கள்

image

இன்று வாக்கிய பஞ்சாங்கம் படி திருநள்ளாறில் சனிப்பெயர்ச்சி நடைபெறாது சனிக்கிழமை வழக்கமான பூஜைகள் மட்டுமே நடைபெறும் மற்றபடி சனிப்பெயர்ச்சி பூஜைகள் நடைபெறாது என திருநள்ளாறு கோயில் நிர்வாகம் கடந்த வாரம் அறிவித்திருந்தது. ஆனால் திருக்கணித பஞ்சாங்கப்படி இன்று நடப்பதாக வந்த வதந்தியை நம்பி திருநள்ளாறில் ஏராளமான பக்தர்கள் கூடி ஏமாற்றம் அடைந்தனர். இதுபோல் யாரும் ஏமாறாமல் இருக்க SHARE செய்யவும்..

News March 29, 2025

யுகாதி வாழ்த்து தெரிவித்த புதுவை முதலமைச்சர்

image

புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி, இன்று வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில், தெலுங்கு, கன்னட மொழி பேசும் மக்களால் மகிழ்ச்சியோடும், எழுச்சியோடும் கொண்டாடப்படும் இந்த யுகாதி பண்டிகை, புதிய தொடக்கத்தையும், செழிப்பையும், மகிழ்ச்சியையும், வெற்றியையும் வழங்குவதாக அமையட்டும், எனக் கூறி மேலும் புதுச்சேரி மக்களுக்கு தெலுங்கு, கன்னடம் பேசும் மக்களுக்கு யுகாதி நல்வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

News March 29, 2025

புதுச்சேரி பொதுப்பணித்துறைக்கு தலைமை பொறியாளர் நியமனம்

image

புதுச்சேரி பொதுப்பணித்துறை [சிடிசி] சர்க்கிள் – 1 கண்காணிப்பு பொறியாளராக பணியாற்றி வரும் வீரசெல்வத்திற்கு புதுச்சேரி பொதுப்பணித்துறை தலைமை பொறியாளராக கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. புதுச்சேரி பொதுப்பணித்துறை தலைமை பொறியாளராக இருந்த தீனதயாளன் சமீபத்தில் லஞ்ச புகாரில் சிபிஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டதையடுத்து காலியாக இருந்த அப்பதவிக்கு வீரசெல்வம் நியமிக்கப்பட்டுள்ளார்.

News March 29, 2025

புதுச்சேரி மின்துறையில் 73 காலிப்பணியிடங்கள்!

image

புதுச்சேரி மின்துறையில் இளநிலை பொறியாளர்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு
வெளியாகியுள்ளது. இதில் 73 காலிப்பணியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பொது-30, OBC -8, MBC -13, EBC -1, BCM -1, SC -12, ST -1, EWS -7, மாற்றுத் திறனாளிகள் -3 என ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான கடைசி நாள் மார்ச் 31 ஆம் தேதி ஆகும். மேலும் அறிய <>இங்கு க்ளிக்<<>> செய்யவும். வேலை தேடும் உங்கள் நண்பர்களுக்கு SHARE செய்யவும்..

News March 29, 2025

புதுவையில் லஞ்சம் கேட்ட காவலர் சஸ்பெண்ட்

image

துத்திப்பட்டு அருகே பைக் மீது லாரி மோதி பைக்கில் சென்ற மூவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். விபத்து குறித்து முதல் தகவல் அறிக்கையை வழங்க சப்-இன்ஸ்பெக்டர் பாஸ்கர் லஞ்சம் கேட்டுள்ளார். இதுகுறித்து ஐஜியிடம் அளிக்கப்பட்ட புகாரின் பேரின் புதுச்சேரி தலைமை செயலாளர் ஒப்புதல் பெற்று, எஸ்.ஐ பாஸ்கர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். மேலும் நேற்று எஸ்.ஐ பாஸ்கர் மீது லஞ்ச ஒழிப்புத் துறையினர் வழக்கு பதிவு செய்தனர்.

News March 29, 2025

புதுச்சேரியில் ஐடி பூங்காவுக்கு ஆளுநரிடம் வலுயுறுத்தல்

image

புதுச்சேரியில் கணினித் தகவல் தொழில்நுட்பம் படித்த இளைஞர்கள் வெளிமாநிலங்களில் வேலைக்கு போகாமல் புதுச்சேரியில் இருந்தே பணி ஆற்றும் வகையில் புதுச்சேரியில் தகவல் தொழில் நுட்பப் பூங்கா அமைத்து இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்க வேண்டும் என்று துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதனிடம், பாரதிதாசன் அறக்கட்டளைத் தலைவர் கோ.பாரதி வலியுறுத்தினார். 

News March 29, 2025

துணை ஜனாதிபதியை சந்தித்த எம்.பி.க்கள் 

image

மத்திய பல்கலைக்கழகத்தில் தற்சமயம் உள்ள அனைத்து நிலை படிப்புகளில் புதுச்சேரி மாணவர்களுக்கு 25% இட ஒதுக்கீடு அமுல்படுத்த வேண்டும் என மக்களவை உறுப்பினர் வைத்திலிங்கம், மாநிலங்களவை உறுப்பினர் செல்வகணபதி விரிவாக எடுத்துரைத்து அது சம்பந்தமாக ஒரு கடிதத்தையும் பாண்டிச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தின் வேந்தர் என்ற அடிப்படையிலும் துணை ஜனாதிபதியிடம் வழங்கினார். இதுகுறித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.

error: Content is protected !!