Perambalur

News August 14, 2024

கலெக்டர் தலைமையில் நடைபெற்ற ஒருங்கிணைப்புக் கூட்டம்

image

தேசிய குடற்புழுநீக்க தினத்தை முன்னிட்டு, (ஆக-23 மற்றும் ஆக-30)ஆகிய தேதிகளில்,1 முதல் 19 வயதிற்க்குட்பட்ட குழந்தைகள்,பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு மாத்திரைகள் வழங்கப்படவுள்ளன. இதன்படி மாவட்டத்திலுள்ள அனைத்து அங்கன்வாடிகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மேற்காணும் தேதிகளில் முகாம்கள் நடத்துவது தொடர்பாக ஒருங்கிணைப்புக் கூட்டம் இன்று நடைபெற்றது.

News August 14, 2024

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

image

பெரம்பலூர் மாவட்ட நகர் ஊரமைப்பு அலுவலக எல்லைக்குள் அமையும் அனுமதியற்ற கல்வி நிறுவன கட்டடங்களை வரன்முறைப்படுத்த 31.01.2025 வரை கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க விரும்புபவர்கள் www.tcp.org.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பம் பதிவு செய்யலாம் பெரம்பலூர் மாவட்ட மக்கள் இந்த வாய்ப்பினை தவறாது பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியர் இன்று தகவல் தெரிவித்துள்ளார்.

News August 14, 2024

பெரம்பலூர் ஆட்சியர் ஆய்வு 

image

பெரம்பலூருக்குட்பட்ட துறைமங்கலம், பெரம்பலூர், அம்மாபாளையம் ஆகிய பகுதிகளில் ஆதிதிராவிடர் நல விடுதியில் உள்ள அடிப்படை வசதிகளை குறித்து மாவட்ட ஆட்சியர் கிரேஸ் பச்சாவ் என்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். குறைகள் ஏதாவது இருப்பின் உடனடியாக சரி செய்ய வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இந்நிகழ்வில் அரசு அதிகாரிகள், அலுவலர்கள், விடுதிக்காப்பாளர்கள் என பலர் உடன் இருந்தனர்.

News August 13, 2024

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

image

பெரம்பலூர் மாவட்டத்தில் இயங்கி வரும் தமிழ்நாடு மாநில வாணிப கழகத்தின்(டாஸ்மாக்) அனைத்து அரசு மதுபான சில்லரை விற்பனை கடைகள், மதுபான சில்லரை விற்பனை கடைகளுடன் இணைந்த மதுக்கூடங்கள் மற்றும் FL3 உரிமம் பெற்ற தனியார் மதுபானக்கூடங்கள் ஆகிய அனைத்திற்கும் இந்திய சுதந்திர தினத்தினை முன்னிட்டு 15.08.2024 அன்று ஒருநாள் மட்டும் உலர்தினமாக விடுமுறை அறிவிக்கப்படுகிறது என கலெக்டர் இன்று தகவல்

News August 13, 2024

பெரம்பலூர் ஆட்சியர் ஆய்வு 

image

பெரம்பலூருக்குட்பட்ட துறைமங்கலம், பெரம்பலூர், அம்மாபாளையம் ஆகிய பகுதிகளில் ஆதிதிராவிடர் நல விடுதியில் உள்ள அடிப்படை வசதிகளை குறித்து மாவட்ட ஆட்சியர் கிரேஸ் பச்சாவ் என்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். குறைகள் ஏதாவது இருப்பின் உடனடியாக சரி செய்ய வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இந்நிகழ்வில் அரசு அதிகாரிகள், அலுவலர்கள், விடுதிக்காப்பாளர்கள் என பலர் உடன் இருந்தனர்.

News August 13, 2024

வேப்பந்தட்டையில் முகாமில் எம்.பி. பங்கேற்பு

image

வேப்பந்தட்டையில் நடைபெற்ற மக்களுடன் முதல்வர் திட்ட முகாமில் மாவட்ட ஆட்சியர் கிரேஸ் பச்சாவ் மற்றும் பெரம்பலூர் நாடாளுமன்ற உறுப்பினர் அருண் நேரு பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் பிரபாகரன் ஆகியோர் பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டு விரைவாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர்.

News August 13, 2024

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் ஆய்வு

image

பெரம்பலூர் மாவட்டம், பெரம்பலூர் நகராட்சி, ஆலம்பாடி செல்லும் சாலையில் அன்னை நகர் பகுதியில் செயல்பட்டு வரும் குழந்தைகள் இல்லத்தினை மாவட்ட ஆட்சியர் கிரேஸ் பச்சாவ் இன்று நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். அப்பொழுது குழந்தைகளிடம் கல்வி, பாதுகாப்பு உள்ளிட பலவற்றை கேட்டறிந்தார்.

News August 13, 2024

பெரம்பலூரில் குறுவட்ட அளவிலான விளையாட்டு போட்டி

image

பெரம்பலூரில் வட்டார அளவிலான குறுவட்ட விளையாட்டு போட்டி தனியார் பள்ளி விளையாட்டு மைதானத்தில் இன்று நடைபெற்றது. கொக்கோ, டென்னிஸ் ஆகிய போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்கள் மாவட்ட அளவிலான போட்டிக்கு தேர்வு செய்யப்படுவார்கள். இப்போட்டியில் 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர்.

News August 13, 2024

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

image

பெரம்பலூரில் தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகளின் 2024-2025 ஆம் ஆண்டிற்கான பொது குழு கூட்டம், 121 ஊராட்சிகளில் உள்ள கிராம சேவை மையத்தில், ஆகஸ்ட் 15ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில், மகளிர் குழு உறுப்பினர்கள், கிராம வறுமை ஒழிப்பு சங்கம், சமூக செயல்பாட்டு குழுக்கள் ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு பிரதிநிதிகள் கலந்து கொள்ளுமாறு ஆட்சியர் கேட்டுக்கொண்டார்.

News August 12, 2024

மாவட்ட காவல் அலுவலகத்தில் உறுதிமொழி ஏற்பு

image

பெரம்பலூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஷ்யாமளாதேவி தலைமையில் பெரம்பலூர் மாவட்ட காவல்துறையினர் மற்றும் அமைச்சு பணியாளர்கள் ஆகியோர் போதைப் பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழியை ஏற்றுக்கொண்டனர். இதேபோன்று மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் உறுதி மொழி ஏற்றுக்கொண்டனர்.

error: Content is protected !!