Perambalur

News August 23, 2024

பெரம்பலூர் மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு

image

தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில், மழைநீர் சேகரிப்பு குறித்த விழிப்புணர்வு குறும்பட பிரச்சார வாகனத்தினை இன்று ஆட்சியர் கொடியசைத்து தொடங்கி வைக்க உள்ளார். தொடர்ந்து பெரம்பலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில், மாவட்ட சுகாதாரப் பணிகள் துறையின் சார்பில் மாணவர்களுக்கு குடற்புழு நீக்க மாத்திரை வழங்கும் பணியை ஆட்சியர் தொடங்கி வைக்க உள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

News August 22, 2024

பெரம்பலூரில் நாளை நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டம்

image

திருநெல்வேலி வழக்கறிஞர் சரவணராஜா படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து, குற்றவாளியை கைது செய்யவும், வழக்கறிஞர் பாதுகாப்பு சட்டத்தை இயற்றவும், நாளை ஒருநாள் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து நீதிமன்றத்திலும், பணி புறக்கணிப்பில் ஈடுபட உள்ளதாக பெரம்பலூரில் இன்று மாலை வழக்கறிஞர் வள்ளுவன் நம்பி தலைமையில் நடந்த, சங்க நிர்வாக குழுவின் அவசர கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

News August 22, 2024

குன்னம் வட்டார பகுதிகளில் திடீர் ஆய்வு

image

குன்னம் அரசு பிற்படுத்தப்பட்டோர் மாணவியர் விடுதியில், மாணவியர்கள் தங்கும் அறை, சமையலறை, இரவு வழங்கப்படும் உணவின் தரம் மற்றும் அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு மற்றும் நீர்வளத்துறை சார்பில் ரூ 1.76 கோடி மதிப்பீட்டில் ஆய்க்குடி ஏரி மதகு புனரமைக்கப்பட்டுள்ளதையும் தடுப்புசுவர் கட்டப்பட்டுள்ளதையும் வரத்துவாய்க்கால் தூர்வாரப்பட்டுள்ளதையும் பெரம்பலூர் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் அட்சியர் ஆய்வு செய்தனர்.

News August 22, 2024

பெரம்பலூர் கிரானைட் குவாரியில் திடீர் ஆய்வு

image

தமிழ்நாடு அரசின் முதன்மைச் செயலாளர்/ மினரல் கார்ப்பரேஷன் நிறுவன மேலாண்மை இயக்குநர் மற்றும் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் அனில் மேஷ்ராம், மாவட்ட ஆட்சியர் கிரேஸ் பச்சாவ் ஆகியோர் குன்னம் வட்டத்திற்குட்பட்ட சித்திளி கிராமத்தில் உள்ள கிரானைட் குவாரியில் குவாரியின் ஒப்பந்த கால அளவு எவ்வளவு, இக்குவாரின் மூலமாக எடுக்கப்படும் கிரானைட் கற்கள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

News August 22, 2024

பெரம்பலூர் எம்பி தொடங்கி வைப்பு

image

தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் சார்பில், வேப்பந்தட்டை ஒன்றியத்திற்குட்பட்ட 15 கிராமங்களுக்கு குடிநீர் வழங்கும் வகையில், தேவையூர் ஊராட்சியில் ரூ.30 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள கூட்டுக்குடிநீர் திட்டத்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக பெரம்பலூர் எம்பி அருண்நேரு மற்றும் எம்எல்ஏ பிரபாகரன் ஆகியோர் இன்று தொடங்கி வைத்தனர்.

News August 22, 2024

பெரம்பலூர் டிஎஸ்பி பணியிட மாற்றம்

image

தமிழகத்தில் சென்னை, பெரம்பலூர், விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த டிஎஸ்பிக்கள் இன்று பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதன்படி பெரம்பலூர் மாவட்டத்தில் சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் துறையில் டிஎஸ்பியாக பணிபுரிந்த வல்லவன், சென்னைக்கு பணியிட மாற்றம் செய்து டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.

News August 22, 2024

பெரம்பலூர் எம்பியிடம் மனு

image

பெரம்பலூர் எம்பி அருண் நேரு மற்றும் சட்டமன்ற உறுப்பினர் பிரபாகரன், அன்னமங்கலம் சுற்றியுள்ள விஸ்வகுடி, முகமது பட்டணம் மற்றும் பிள்ளையார் பாளையம் ஊர் பொதுமக்களை சந்தித்து இன்று நன்றியை தெரிவித்தனர். மேலும் ஊர் பொதுமக்கள் தங்கள் கிராமங்களுக்கு தேவையான வசதிகளை செய்து தர மனு அளித்தனர். இந்நிகழ்வில் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகளும் பலர் பங்கேற்றனர்.

News August 22, 2024

மாணவர்களுடன் அமர்ந்து சாப்பிட்ட மாவட்ட ஆட்சியர்

image

உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் மாவட்ட ஆட்சித் தலைவர் கிரேஸ் பச்சாவ், வேப்பந்தட்டை வட்டம், வாலிகண்டபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தினை ஆய்வு செய்து மாணவ, மாணவிகளுடன் அமர்ந்து சாப்பிட்டார். பள்ளி சிறார்களுடன் உரையாடினார். இந்நிகழ்வில் ஆசிரியர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர்.

News August 22, 2024

பெரம்பலூரில் காலியாக உள்ள ஊரக வளர்ச்சித்துறை அலுவலகம்

image

தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்கம் சார்பில் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும், ஓய்வூதியம் வழங்க வேண்டும், தமிழக அரசின் புதிய திட்டங்களுக்கு தனி அலுவலர்கள் நியமிக்க வேண்டும் உள்ளிட்ட 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 2 நாட்கள் தற்செயல் விடுப்பு எடுக்கும் போராட்டம் நடைபெறுகிறது. இதனால் பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காலியாக உள்ள ஊரக வளர்ச்சித்துறை அலுவலகம்.

News August 21, 2024

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் ஆய்வு

image

உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ், வேப்பந்தட்டை வாலிகண்டபுரத்தில் உள்ள நியாய விலை கடையில் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் அரிசி, சக்கரை, பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் இருப்பு நிலை மற்றும் தரம் குறித்தும், மின்னணு குடும்ப அட்டை மற்றும் கைரேகை பதிவு செய்யும் இயந்திரத்தனையும் மாவட்ட ஆட்சித் தலைவர் கிரேஸ் பச்சாவ் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

error: Content is protected !!