Perambalur

News September 26, 2024

பெரம்பலூரில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

image

தமிழ்நாடு மாநில ஊரக நகர்ப்புற வாழ்வாதார இயக்கம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டுதல் மையம் இணைந்து நடத்தும் தனியார் வேலை வாய்ப்பு முகாம் வரும் (28/9/24) சனிக்கிழமையன்று மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற உள்ளது. இதில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் தக்க சான்றிதழ்களுடன் வந்து கலந்து கொண்டு பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் அழைப்பு விடுத்துள்ளார்.

News September 26, 2024

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட அறிவிப்பு

image

பெரம்பலூர் மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் வரும் 27/9/24 அன்று மாவட்ட ஆட்சியரக கூட்ட மன்றத்தில் நடைபெற இருப்பதாக ஆட்சியர் கிரேஸ் பச்சாவ் தெரிவித்துள்ளார். இக்கூட்டத்தில் வேளாண்மை கருவிகள், நீர் பாசனம் வேளாண் இயந்திரங்கள், வேளாண்மை கடன் மற்றும் வேளாண்மை மேம்பாட்டிற்கான நலத்திட்டங்கள் பற்றிய முறையீடு சம்பந்தமாக விவாதிக்கப்படும். விவசாயிகள் கலந்து கொண்டு பலன் பெற அறிவுறுத்தப்பட்டுள்ளது.

News September 25, 2024

பெரம்பலூர் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பேர் தற்கொலை

image

N.புதூரை சேர்ந்த சின்னதுரை மனைவி கலா, அவர்களது மகன் சிவக்குமார் ஆகிய 3 பேரும் இவர்களது வீட்டின் அருகே உள்ள நீர்ஓடை ஒன்றில் பூச்சிக்கொல்லி மருந்தை குடித்துவிட்டு இறந்து கிடந்துள்ளனர். இதுகுறித்து பொதுமக்கள் கொடுத்த தகவலின் பேரில் வி.களத்தூர் போலீசார் அவர்களது உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணையில் கடன் தொல்லையால் தற்கொலை கொண்டதாக தெரிந்தது.

News September 25, 2024

கூத்தூர் பகுதியில் நாளை மின்தடை

image

கூத்தூர் துணைமின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதில் அரியலூர் மேற்கு பகுதி புஜங்காராயநல்லூர், ஜமீன் பேரையூர், கூத்தூர், கூடலூர், குளத்தூர், ராமலிங்கபுரம், ரசுலாபுரம், அல்லிநகரம், உசேன் நகரம், மேலமாத்தூர், வெண்மணி, திம்மூர் மேத்தால் ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் பராமரிப்பு பணிகள் முடியும் வரை மின்சார விநியோகம் இருக்காது என உதவி செயற்பொறியாளர் தகவல்.

News September 25, 2024

மரக்கன்றுகள் நடும் விழாவினை கலெக்டர் எம் எல் ஏ துவக்கி வைத்தனர்

image

பெரம்பலூர் அரசு பெண்கள் உயர்நிலைப் பள்ளியில் வனத்துறையின் சார்பில் பசுமை தமிழ்நாடு நாளினை முன்னிட்டு நடத்தப்பட்ட 1000 மரக்கன்றுகள் நடும் பணியினை மாவட்ட ஆட்சித்தலைவர் கிரேஸ் பச்சாவ் பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் பிரபாகரன் ஆகியோர் இன்று தொடங்கி வைத்தார்கள். இந் நிகழ்ச்சிகள் அரசுத்துறை அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

News September 25, 2024

பெரம்பலூர் போலீசார் அதிரடி சோதனை

image

பெரம்பலூர் மாவட்டத்தில் குற்றம் நடவாமல் தடுக்கும் முன்னேற்றத்திற்கு நடவடிக்கையாக மாவட்ட எஸ்பி ஆதர்ஷ் பசேரா உத்தரவின்படி ஏ.டி.எஸ்.பி மதியழகன் தலைமையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு பெரம்பலூர் உட்கோட்ட டிஎஸ்பி ஆரோக்யராஜ் மாவட்டத்தில் குற்ற செயல்களில் ஈடுபடும் வழக்கமான குற்றவாளிகள், ரவுடிகள், சந்தேக நபர்கள் ஆகியோரின் வீடுகளுக்கு சென்று நேற்று அதிரடி சோதனை நடத்தினர்.

News September 24, 2024

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

image

பெரம்பலூர் மாவட்ட கலை பண்பாட்டு துறை சார்பில் மாவட்ட அளவிலான போட்டிகள் (குரலிசை, பரதநாட்டியம், ஓவியம்,கிராமிய நடனம்) செப்டம்பர் 29ஆம் தேதி பெரம்பலூர் மதனகோபாலபுரம் மாவட்ட அரசு இசைப்பள்ளி நடைபெற உள்ளது. மேலும் விவரங்களுக்கு பெரம்பலூர் மாவட்ட சவகர் சிறுவர் மன்ற திட்ட அலுவலர் 9659507773 என்ற அலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு பயன்பெறுமாறு கலெக்டர் இன்று தகவல் தெரிவித்துள்ளார்.

News September 24, 2024

பெரம்பலூர் மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு

image

பெரம்பலூர் மாவட்ட வனத்துறையின் சார்பில் பசுமை தமிழ்நாடு நாளினை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் கிரேஸ் பச்சாவ், பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் பிரபாகரன் ஆகியோர் இன்று பெரம்பலூர் அரசு பெண்கள் உயர்நிலைப்பள்ளி அருகில் ஆயிரம் மரக்கன்றுகள் நடும் பணியினை தொடங்க வைக்க உள்ளதாக என மாவட்ட நிர்வாகம் நேற்று தகவல் தெரிவித்துள்ளது.

News September 23, 2024

பெரம்பலூர் காங்கிரஸ் கட்சியினர் எஸ்பியிடம் மனு

image

பெரம்பலூர் மாவட்ட காங்கிரஸ் கட்சியின் சார்பில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியை அவதூறாகவும், அவரது உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் விதமாகவும் பேசி வரும் BJP தலைவர் தர்விந்தர் சிங் மர்வா, உத்திரபிரதேச அமைச்சர் ரகுராஜ் சிங், ரயில்வே இணை அமைச்சர் ரவ்னீத் பிட்டு, தமிழ்நாடு பிஜேபி பொறுப்பு குழு தலைவர் H.ராஜா ஆகியோர்கள் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டி எஸ்பி யிடம் மனு அளித்தனர்.

News September 23, 2024

பெரம்பலூர் மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் 446 மனுக்கள்

image

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் மாவட்ட ஆட்சித்தலைவர் கிரேஸ் பச்சாவ் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் பொதுமக்களிடமிருந்து 446 மனுக்கள் பெறப்பட்டன. பெறப்பட்ட அனைத்து மனுக்களுக்கும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.

error: Content is protected !!