India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பெரம்பலூர் மாவட்டத்தில் அதிக அளவில் சின்னவெங்காயம் சாகுபடி செய்யப்படுகிறது. இம்மாவட்டத்தில் 17 ஆயிரம் ஏக்கரில் சின்னவெங்காயம் சாகுபடி செய்யப்படுகிறது. தமிழகத்தில் இதுதான் அதிகமாகும். ஆற்றுப்பாசனமே இல்லாத மானாவரி பூமியான பெரம்பலூர் மாவட்டத்தில் சராசரியாக ஏக்கருக்கு 4000 கி வெங்காயம் மகசூல் செய்யப்படுகிறது. அந்த வகையில் ஆண்டுக்கு 80,000 மெட்ரிக் டன் சின்ன வெங்காயம் இங்கு விளைவிக்கப்படுகிறது.
பெரம்பலூர் பழைய பேருந்து நிலையம் அருகில் தனியார் கூட்ட அரங்கில் (மே.26) நேற்று (2008-2011) ஆம் ஆண்டு குரும்பலூர் பாரதிதாசன் அரசு கலைக் கல்லூரியில் படித்த கல்லூரி மாணவ, மாணவிகள் 13 ஆண்டுகளுக்கு பிறகு சந்திப்பு கூட்டம் நடைபெற்றது. இதில் கல்லூரியின் நினைவுகளை பகிர்ந்து கொண்டு நட்பை பரிமாறிக் கொண்டனர். இந்நிகழ்ச்சியில் சுற்றுவட்டாரப் பகுதிகளை இருந்து முன்னாள் கல்லூரி மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர்.
பெரம்பலூர் மாவட்டத்தில் வேளாண்மை உதவி இயக்குநர் கௌதமன், அப்துல் ரகுமான் தலைமையில் 4 வேளாண் அலுவலர்களின் குழு (மே 23, 24) ஆகிய தேதிகளில் பெரம்பலூர், வேப்பந்தட்டை, ஆலத்தூர், வேப்பூர் ஆகிய வட்டாரங்களில் உள்ள 68 உரக்கடைகளில் ஆய்வு மேற்கொண்டனர். அஸ்ரீதில் உர கட்டுப்பாடு ஆணையை மீறிய 38 உரக்கடைகளுக்கு தடை விதித்தனர். ஆய்வில் பெரம்பலூர் வேளாண்மை உதவி இயக்குனர் ராதாகிருஷ்ணன் உடன் இருந்தார்.
பெரம்பலூர் மாவட்டத்தில் வேளாண்மை உதவி இயக்குநர் கௌதமன், அப்துல் ரகுமான் தலைமையில் 4 வேளாண் அலுவலர்களின் குழு (மே 23, 24) ஆகிய தேதிகளில் பெரம்பலூர், வேப்பந்தட்டை, ஆலத்தூர், வேப்பூர் ஆகிய வட்டாரங்களில் உள்ள 68 உரக்கடைகளில் ஆய்வு மேற்கொண்டனர். அஸ்ரீதில் உர கட்டுப்பாடு ஆணையை மீறிய 38 உரக்கடைகளுக்கு தடை விதித்தனர். ஆய்வில் பெரம்பலூர் வேளாண்மை உதவி இயக்குனர் ராதாகிருஷ்ணன் உடன் இருந்தார்.
வேப்பந்தட்டை, விஜயபுரத்தை சேர்ந்தவர் கண்ணன் (50). இவர் விஜயபுரம் அதிமுக கிளை கழக பிரதிநிதியாக இருந்து வந்தார். இவருக்கு திருமணமாகி 3 மகன்கள் உள்ளனர். இந்நிலையில் கண்ணன் தீராத வயிற்றுவலியால் அவதிப்பட்டதாக தெரிகிறது. இதனால் மனமுடைந்த கண்ணன் நேற்று வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் கண்ணனின் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்கு அனுப்பி வைத்து விசாரிக்கின்றனர்
பெரம்பலூர் நகராட்சிக்குட்பட்ட 15வது வார்டு பகுதியில் அண்மைக்காலமாக தெருநாய்கள் தொல்லை அதிகரித்துள்ளதாகவும். இதனால் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை இரவு நேரங்களில் தெருக்களில் நடப்பதற்கே அச்சமாக உள்ளதாகவும், இரவு நேரங்களில் பணிகளுக்குச் சென்று வருவதில் சிரமம் உள்ளதாகவும் இப்பகுதி மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர். இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
பெரம்பலூரில் உள்ள ஸ்ரீஅகிலாண்டேஸ்வரி சமேத ஸ்ரீ பிரம்மபுரீஸ்வரர் கோவிலில் நேற்று நாயன்மார்கள் மண்டபத்தில் எழுந்தருளி அருள் பாலித்து வரும் திருஞானசம்பந்தர் குருபூஜை விழா நடைபெற்றது. இதில் பல்வேறு வாசனை திரவியங்களுடன் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றதை தொடர்ந்து மங்கள வாத்தியம் முழங்க மகா தீபாரதனை காண்பித்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இதில் திரளான சிவனடியார்கள் கலந்து கொண்டனர்.
பெரம்பலூர் மாவட்ட இசைப் பள்ளியில் 2024-25 ஆம் ஆண்டுக்கான மாணவர்கள் சேர்க்கை நடைபெறுகிறது. இப்பள்ளியின் குரல் இசை, நாதஸ்வரம், தவில், தேவாரம் ஆகிய பிரிவுகளில் சேர தமிழ் எழுத படிக்கத் தெரிந்தால் போதும். மற்ற பாடப்பிரிவுகளுக்கு 7 ஆம் வகுப்பு தேர்ச்சியுடன் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். மேலும், தகவலுக்கு 94433 77570 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.
பெரம்பலூர் மாவட்ட இசைப் பள்ளியில் ( 2024-25) ஆம் ஆண்டுக்கான மாணவர்கள் சேர்க்கை நடைபெறுகிறது. இப்பள்ளியின் குரல் இசை, நாதஸ்வரம், தவில், தேவாரம் ஆகிய பிரிவுகளில் சேர தமிழ் எழுத படிக்கத் தெரிந்தால் போதும். மற்ற பாடப்பிரிவுகளுக்கு 7 ஆம் வகுப்பு தேர்ச்சியுடன் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். மேலும், தகவலுக்கு 9443377570 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.
பெரம்பலூர், செஞ்சேரி கிராமத்தைச் சேர்ந்த நவீன் சச்சின், தமிழ்வாணன், மூவரும் திருச்சி நோக்கி இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது நெடுங்கூர் என்ற இடத்தில் அரசு விரைவு பேருந்து மீது மோதியது. இதில் பின்னால் அமர்ந்திருந்த நவீன் ( 21) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மற்ற இருவரையும் சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து போலீசார் விபத்து குறித்து விசாரித்து வருகின்றனர்.
Sorry, no posts matched your criteria.