India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், இன்று (28.10.2024) நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து குறைகளை கேட்டறிந்து, கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சித்தலைவர் கிரேஸ் பச்சாவ் பெற்றுக்கொண்டார். இந்த குறைதீர்நாள் கூட்டத்தில் பல்வேறு துறைகளைச் சேர்ந்த அலுவலர்கள் உடனிருந்தனர்.
ஆலத்தூர் ஒன்றியம், சாத்தனூர் கிராமத்தில் புகழ்பெற்ற தேசிய கல்மரப் பூங்கா உள்ளது. இது பெரம்பலூர் நகரத்திலிருந்து 23 கிமீ தொலைவில் உள்ளது. இது 1940ஆம் ஆண்டு புவியியலாளர் எம்.எஸ்.கிருஷ்ணனால் கண்டுபிடிக்கப்பட்டது. 120 மில்லியன் ஆண்டு பழங்கால மரம் கல்லாக மாறியிருக்கலாம் என நம்பப்படுகிறது. பெரம்பலூர் மக்கள் குடும்பத்துடன் சுற்றுலா செல்வதற்கு ஏற்ற இடமாக இது கருதப்படுகிறது. ஷேர் செய்யவும்
பெரம்பலூா், புதுக்குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் புதுக்குறிச்சி, காரை, சிறுகன்பூா், கொளக்காநத்தம், பாடாலூா், சாத்தனூா், சா.குடிக்காடு, அயினாபுரம், அணைப்பாடி, இரூா், தெற்கு மாதவி, ஆலத்தூா் கேட், வரகுபாடி, நல்லூா் ஆகிய பகுதிகளில் இன்று (28.10.24) காலை 9 மணி முதல் பராமரிப்பு பணிகள் முடியும் வரை மின் விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஷேர் செய்யவும்
பாடாலூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. புதுக்குறிச்சி துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளான காரை, சிறுகன்பூர், கொளக்காநத்தம், பாடாலூர், சாத்தனூர், இரூர், வரகுபாடி, ஆலத்தூர்கேட், தெரணி பாளையம், நல்லூர் திருவளக்குறிச்சி ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது என உதவி செயற்பொறியாளர் ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.
பெரம்பலூர் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு தேர்வாணையத்தின் சார்பில் நடத்தப்படும் ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகள் தேர்வு நடைபெற்றது. அச்சமயம் தேர்வு மையத்திற்கு மாவட்ட ஆட்சியர் கிரேஸ் பச்சாவ் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின்போது துணை ஆட்சியர் கோகுல் மற்றும் துறை சார் அதிகாரிகளும் உடனிருந்து செயல்பட்டனர்.
தமிழகம் முழுவதும் இன்று ஞாயிற்றுக்கிழமை 27-10-2024, தீபாவளி பண்டிகை முன்னிட்டு, ரேஷன் கடைகள் வழக்கம் போல் இயங்கும் என்று அமைச்சர் பெரியகருப்பன் அறிவித்துள்ளார். எனவே, பெரம்பலூர் மாவட்டத்தில் பொதுமக்கள் அனைவரும் ரேஷன் கடைகள் விடுமுறை இல்லை என்பதை நினைவில் கொண்டு, நியாய விலைப் பொருட்களை பெற்றுக் கொள்ளலாம். பண்டிகை கால கூட்ட நெரிசலை குறைப்பதற்காக இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
வேப்பூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட, பரவாய் மற்றும் நன்னை ஆகிய கிராமங்களில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் சார்பில் கலைஞரின் கனவு இல்ல திட்டம், ஊரக வீடுகள் பழுது நீக்கும் திட்டம் மற்றும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டங்களின் கீழ் நடைபெற்று வரும் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் இன்று 26.10.2024 ஆய்வு மேற்கொண்டார்.
களரம்பட்டி கிராமத்தின் ஏரிக்கரையில் அமைந்துள்ள கோவிலுக்குள் ஒரு தரப்பினர் பட்டியலின மக்களை உள்ளே விட தடை விதித்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், பட்டியலின மக்கள் இதனை எதிர்ப்பு தெரிவித்து பெரம்பலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்தனர். அதன் பின்னர், இரு தரப்பினரையும் அழைத்து வட்டாட்சியர் அலுவலர் காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.
முதியோர் ஓய்வூதிய திட்டம் பெரம்பலூர் கூட்டுறவுத்துறை சார்பில் துறைமங்கலம் நியாயவிலை கடை எண் 1ல் தீபாவளிக்கு முதியோருக்கு இலவச வேஷ்டி, சேலை வழங்கி சிறப்பித்தார் விழாவில் மாவட்ட ஆட்சியர் கிரேஸ் பச்சாவ் பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் திரு. பிரபாகரன் ஆகியோர் விழாவை தொடங்கி வைத்தனர். விழாவில் துறைமங்கல கிராம முதியோர் மற்றும் கூட்டுறவுத்துறை அதிகாரிகள் பங்கேற்றார்கள்.
செங்கல்பட்டில் இருந்து சிவகாசிக்கு பட்டாசு வாங்க சென்ற நபரை வழிமறித்து ரூ.10லட்சம் வழிப்பறி செய்ததாக போலீசார் நடத்திய விசாரணையில், சந்துரு, அப்துல்,அஜீஸ், கமலக்கண்ணன் ஆகியோரை பிடித்து விசாரித்ததில், ரூ.10 லட்சம் பணம் கொள்ளையடித்தனரா என்று கேட்டபோது, ரூ.1,000 தான் என தெரிவித்துள்ளனர். பின்னர், புகார் அளித்தவரிடம் போலீசார் விசாரித்த போது தவறாக மாத்தி கூறிவிட்டேன் என தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.