India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள 121 கிராம ஊராட்சிகளிலும், ஊராட்சித் தலைவர்கள் தலைமையில் நாளை கிராம சபை கூட்டம் நடைபெற உள்ளதாக ஆசிரியர் கிரேஸ் பச்சாவ் தெரிவித்துள்ளார். உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு ஊராட்சி தலைவர் தலைமை வகித்து தேவைகளை கேட்டறிந்து அரசின் நலத்திட்டங்களை வழங்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் கிரேஸ் பச்சாவ் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
பெரம்பலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் 2020ஆம் ஆண்டு சிறுமிக்கு பாலியல் தொந்தரவு செய்ததாக மணி என்பவர் மீது போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர். இவ்வழக்கு விசாரணை முடிந்த நிலையில், நேற்று இறுதி அறிக்கை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அதில் குற்றம் நிரூபிக்கப்பட்டதால், 10 வருடம் சிறை தண்டனையும் ரூ.1 லட்சம் அபராதமும் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பெரம்பலூர் மாவட்டத்தில் இளம் வாக்காளர்களை வாக்காளர் பட்டியலில் அதிக எண்ணிக்கையில் சேர்ப்பதற்கான சிறப்பு முகாம், இன்று காலை 10.15 மணிக்கு பெரம்பலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் கிரேஸ் பச்சாவ் தலைமையில், துறையூர் சாலையில் உள்ள தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழக கல்லூரியில் உள்ள கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது என மாவட்ட நிர்வாகத்தின் மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஷேர் செய்யவும்
பெரம்பலூர் மாவட்டத்தில் சம்பா நெற்பயிர் காப்பீட்டுக்கான காலவரம்பு 30.11.2024 இன்று வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. காப்பீடு செய்யாத விவசாயிகள் காப்பீடு செய்து பயன்பெறலாம். ஏற்கனவே பதிவு செய்த விவசாயிகள் மீண்டும் பதிவு செய்ய வேண்டாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே விவசாயிகள் நிர்ணயம் செய்யப்பட்ட காலக்கெடுவுக்குள் காப்பீடு செய்து பயன்பெறுமாறு கலெக்டர் இன்று தகவல் தெரிவித்துள்ளார்.
வேப்பந்தட்டை ஒன்றியம் கை.களத்தூர் பேருந்து உடைக்கப்பட்டதாக 23 ஆண்டுகளுக்கு முன் பதியப்பட்ட வழக்கில் முன்னாள் விசிக மாவட்ட அமைப்பாளர்கள் பொன். பால்ராஜ் (எ) பாவணன், முன்னாள் மாவட்ட செயலாளர் சி. தமிழ்மாணிக்கம் உள்ளிட்ட 21 விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் வழக்கு 23 ஆண்டுகளுக்கு பிறகு முடிவடைந்து இன்று (21/11/2024) விடுதலை அடைந்தனர்.
பெரம்பலூர் மாவட்ட கிரிக்கெட் சங்கத்தின் சார்பில், கிரிக்கெட் வீரர்களை தேர்ந்தெடுக்கும் பொருட்டு நாளை(22-11-2024) 12:00 மணிக்கு தந்தை ஹேண்ட்ஸ் ரோவர் கல்லூரியில் நடைபெறுகிறது. விருப்பமுள்ள மாணவர்கள் தங்கள் வயது வரம்பு சான்றிதழ் மற்றும் ஆதார் நகலுடன் வரவும். மேலும் தகவலுக்கு 9865953023/6369549621 என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்.
பெரம்பலூரில் ஜவஹர்லால் நேரு, மகாத்மா காந்தியின் பிறந்த நாளை முன்னிட்டு, தமிழ் வளர்ச்சித் துறை சார்பில், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டி நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். வெற்றிபெறும் மாணவர்களுக்கு பரிசும் பாராட்டு சான்றிதழும் வழங்கப்படும். பங்கேற்க விருப்பமுள்ள மாணவ, மாணவிகள் பள்ளி தலைமை ஆசிரியரிடம் அனுமதி பெற்று பங்கேற்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. SHAREIT
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இன்று காலை 10 மணிக்கு ஆண்களுக்கான நவீன கருத்தடை சிகிச்சை குறித்த விழிப்புணர்வு வாரத்தை முன்னிட்டு விழிப்புணர்வு வாகனத்தை மாவட்ட ஆட்சித் தலைவர் கிரேஸ் பச்சாவ் கொடியசைத்து தொடங்கி வைக்க உள்ளார் என மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் நேற்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு முதலமைச்சரால் அறிவிக்கப்பட்ட “உங்களை தேடி, உங்கள் ஊரில்” திட்டத்தின் படி, பெரம்பலூர் மாவட்டத்தில் வட்ட அளவில் மாவட்ட ஆட்சியர் மற்றும் அனைத்து மாவட்ட முதல் நிலை அலுவலர்கள் கிராமங்களில் தங்கி, அரசு அலுவலகங்களை ஆய்வு செய்தும், மக்களின் குறைகளைக் கேட்டறிந்து மனுக்கள் பெற்றும் வருகின்றார்கள். பெரம்பலூரில் இத்திட்டம் இன்று தொடங்க உள்ளது என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
பெரம்பலூர் மாவட்டத்தில் கலைஞர் கடன் உதவி திட்டத்தின் கீழ் குரு தொழில் உற்பத்தி நிறுவனங்களுக்கு நடைமுறை மற்றும் மூலதன கடன்கள் வழங்கப்பட உள்ளது. மேலும் விவரங்களுக்கு பெரம்பலூர் எளம்பலூர் ரோடு முருகன் கோவில் அருகில் தாய்கோ வங்கி கிளை மேலாளரை நேரிலோ அல்லது 9344159168, 04328 275633 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொண்டு பயனடையுமாறு கலெக்டர் இன்று தகவல் தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.