India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பெரம்பலூர் மாவட்டத்தில் அரசின் பல்வேறு துறைகளின் சார்பில் 11,721 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி முதலமைச்சர் விழாப் பேரூரை ஆற்றவுள்ளார்கள். இந்நிகழ்வில் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், அரசு அலுவலர்கள், கட்சி பிரதிநிதிகள் என பலர் கலந்து கொள்ள உள்ளதாக பெரம்பலூர் ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
பெரம்பலூர் மாவட்டத்தில் அரசின் பல்வேறு துறைகளின் சார்பில் 11,721 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி முதலமைச்சர் விழாப் பேரூரை ஆற்றவுள்ளார்கள். இந்நிகழ்வில் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், அரசு அலுவலர்கள், கட்சி பிரதிநிதிகள், பொதுமக்கள் என பலர் கலந்து கொள்ள உள்ளதாக பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் கிரேஸ் பச்சாவ் தெரிவித்துள்ளார்.
திருச்சி, பொன்மலை பகுதியை சேர்ந்த ஹரிஹரன் (27) இவர் பெரம்பலூர் மாவட்டம் திருவளக்குறிச்சியில் தனியாருக்கு சொந்தமான கிரசரில் சூப்பர்வைசராக வேலை செய்து வந்தார். அப்போது கிரஷர் உற்பத்தி செய்த ஜல்லி கற்கள் லாரிகளில் ஏற்றுவதற்காக லோடர் எந்திரத்தில் இருந்து ஜல்லிக்கற்கள் லாரிகளில் ஏற்றப்பட்டு கொண்டிருந்தன. இதில் தடுமாறிய ஹரிஹரன் லோடர் எந்திரத்தின் மீது விழுந்து, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
பெரம்பலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் கிரேஸ் பச்சாவ், 71 வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழாவை முன்னிட்டு பெரம்பலூர் நகரில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் கூட்டுறவு வார விழா கொடியினை நவம்பர் 14 ஆம் தேதி நாளை காலை 9:30 மணிக்கு ஏற்றி வைக்க உள்ளார் என மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் நவம்பர் 13ஆம் தேதியான இன்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை அரியலூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களில் நடைபெற உள்ள பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள வருகை தர உள்ளதால், பாதுகாப்பு காரணம் கருதி 14.11.2024 மற்றும் 15.11.2024 ஆகிய இரண்டு நாட்கள் ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்படுகிறது என பெரம்பலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் கிரேஸ் பச்சாவ் தெரிவித்துள்ளார். ஷேர் செய்யவும்
பெரம்பலூர் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல் மற்றும் திருத்தம் செய்தல் உள்ளிட்ட பணிகளுக்காக வரும் 16.11.2024 (சனிக்கிழமை). 17.11.2024 (ஞாயிற்றுக்கிழமை) 23.11.2024 (சனிக்கிழமை) மற்றும் 24.11.2024 ஞாயிற்றுக்கிழமை ஆகிய விடுமுறை நாட்களில் சிறப்பு முகாம்கள் நடைபெறவுள்ளது என மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட கலெக்டருமான கிரேஸ் பச்சாவ் இன்று அறிவித்துள்ளார்.
வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில், தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனை தொடர்ந்து பெரம்பலூர் மாவட்டத்திலும் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பெரம்பலூர் மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். SHARE NOW.
பெரம்பலூர் மாவட்டத்திற்கு வருகின்ற (15-11-2024) வெள்ளிக்கிழமை அன்று கழக நிகழ்ச்சியில் திமுக கழக தலைவர் தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் கலந்து கொள்வதையொட்டி, பெரம்பலூரில் உள்ள திருமணம் மண்டபத்தில் முன்னேற்பாட்டு பணிகள் குறித்து பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் பிரபாகரன் நவம்பர் 12ஆம் தேதியான இன்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
வெங்கலம் கிராமத்தில் உள்ள அம்பேத்கர் திருவுருவ சிலையை சனிக்கிழமை இரவு மர்ம நபர் கையை உடைத்துள்ளார். இதனை கண்டித்து அப்பகுதியில் உள்ள அம்பேத்கர் கிராம பொதுமக்கள் ஞாயிற்றுக்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த வழக்கில் அரும்பாவூர் காவல் துறையினர் விசாரணையில் அப்பகுதியைச் சேர்ந்த கிரிதாஸ் என்ற இளைஞரை போலீசார் கைது செய்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெரம்பலூர் மாவட்டத்தில் முன்னாள் படை வீரர் (ம) சார்ந்தோர்களுக்கான பாதுகாப்பு ஓய்வூதிய குறை தீர்ப்பு முகாம் 14.11.2024 அன்று தஞ்சாவூரில் நடைபெற உள்ளது. இம்முகாம் தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையத்தின் எதிரில் உள்ள ராமசாமி திருமண மண்டபத்தில் 14.11.2014 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும் இதில் விருப்பமுள்ளவர்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு கலெக்டர் இன்று தகவல் அளித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.