India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பெரம்பலூர் மாவட்டத்தில் இன்று திங்கள்கிழமை (09-12-2024) முதல் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வுகள் தொடங்கின. பெரம்பலூர் மாவட்டத்தில் அரையாண்டு தேர்வுகள் இன்று தொடங்கி (23-12-2024) திங்கள்கிழமை வரை 14 நாட்கள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பெரம்பலூர் மாவட்டத்தில் தனியார் துறை நிறுவனங்களும், தனியார் துறையில் பணிபுரிய விருப்பம் உள்ள மனுதாரர்களும் நேரடியாக சந்திக்கும் வேலை வாய்ப்பு முகாம், பெரம்பலூர் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் 13.12.2024 அன்று நடைபெற உள்ளது. இதில் விருப்பமுள்ள வேலை வாய்ப்பில்லா இளைஞர்களும், தனியார் துறை நிறுவனங்களும் கலந்து கொண்டு பயன்பெறுமாறு ஆட்சியர் தெரிவித்துள்ளார். ஷேர் செய்யவும்
தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பெரம்பலூர் கோட்டத்திற்குட்பட்ட மின் நுகர்வோர்களின் குறைதீர் கூட்டம் பெரம்பலூர் செயற்பொறியாளர் மின்வாரிய அலுவலகத்தில் நாளை (டிச.10) காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறுகிறது. பெரம்பலூர் மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் மின் நுகர்வோர்கள் கலந்துகொண்டு தங்களது குறைகளை நேரில் முறையிட்டு பயன்பெறலாம்.
மங்களமேடு அருகே உள்ள சிறுகுடல் கிராமத்தில் சில நாட்களுக்கு முன்பு 7 வீடுகளில் தொடர் திருட்டு நடைபெற்றது. இதையடுத்து, சிசிடிவி கேமரா பதிவுகளை கொண்டு போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இந்நிலையில், நேற்று முன்தினம் இப்பகுதியில் நள்ளிரவில் பெண் ஒருவர் சுற்றி வருவதை பார்த்த அப்பகுதி மக்கள் அவரை சந்தேகத்தின் பேரில் போலீசிடம் ஒப்படைத்தனர். விசாரணையில் அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பது தெரியவந்தது.
பெரம்பலூர் மாவட்டத்திற்கான வாக்காளர் பட்டியல் பார்வையாளர்/ எழுது பொருள் மற்றும் அச்சுத்துறை ஆணையர் ஷோபனா, வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கத் திருத்த முகாமில் பெறப்பட்ட விண்ணப்பங்களில் வாக்குப்பதிவு அலுவலர், உதவி வாக்கு பதிவு அலுவலர், வாக்குச்சாவடி நிலைய அலுவலர்களால், விண்ணப்பங்களின் நிலை குறித்து இன்று (டிச-8) மாவட்ட ஆட்சியர் கிரேஸ் பச்சாவுடன் இணைந்து மேலாய்வு மேற்கொண்டார்.
பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த அங்கமுத்து நேற்று மொபட்டில் திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது தேவையூர் அருகே வளைவில் திரும்பிய போது, ஆரணிக்கு சென்ற அருணின் கார் அங்கமுத்து மீது மோதியதில், காயமடைந்து ரத்த வெள்ளத்தில் கடந்தார். பின்னர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
பெரம்பலூர் மாவட்டத்தில் நாளை (டிச.9) 10,11 மற்றும் 12 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வு தொடங்குகிறது. இந்த தேர்வில் மாணவர்கள் சிறந்த முறையில் தேர்ச்சி பெற வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்துள்ளார். இந்த தேர்வை எளிதாக எதிர்கொள்ள அமைச்சர் சிவசங்கர் மாணவர்களுக்கு சிறப்பு கையேடு வழங்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
பெரம்பலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் உள்ள கழிப்பறையில், சுமாா் 50 வயது மதிக்கதக்க ஆண் ஒருவா் உயிரிழந்து கிடந்தது தெரியவந்தது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பெரம்பலூா் போலீஸாா் இறந்தவரின் உடலை கைப்பற்றி, அங்குள்ள பிரேத கூடத்துக்கு அனுப்பிவைத்தனா். வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனர்.
கடை வாடகை மீதான 18% ஜிஎஸ்டியை குறைக்க வேண்டும். ஆண்டுதோறும் 6 சதவித சொத்து உயா்வு ஆகியவற்றை திரும்பப் பெறவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியறுத்தி, ஜனவரி 11ஆம் தேதி தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளோம் என வணிக சங்கத்தின் பேரமைப்பு தலைவர் ஏ.ம் விக்ரமராஜா நேற்று பெரம்பலூரில் நடந்த வணிகர் சங்க பேரமைப்பு விழாவில் தெரிவித்துள்ளார்.
மங்களமேடு அடுத்த ரஞ்சன்குடி கிராமத்தைச் சேர்ந்த அங்கமுத்து இன்று மோட்டார் சைக்கிளில் திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது தேவையூர் அருகே புதுக்கோட்டையில் இருந்து ஆரணிக்கு சென்ற கார் மோதியதில் பலத்த காயம் அடைந்த அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
Sorry, no posts matched your criteria.