India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பெரம்பலூா் மாவட்டத்தில் 51 ஆயிரம் போ் உறுப்பினா்களாகப் செய்துள்ளதாக ஆட்சியா் கிரேஸ பச்சாவ் தெரிவித்துள்ளார். மாவட்ட தொழிலாளா் ஆணையா் அலுவலகத்தின் கட்டுமானத் தொழிலாளா்கள் 42,454 பேரும், அமைப்புசாரா 6,995 ஆட்டோ ஓட்டும் 1,796 பேரும் மொத்தம் 51,245 பதிவு செய்துள்ளனா் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆலத்தூர் தாலுகா நாட்டார்மங்கலம் கிராமத்தை சேர்ந்த கண்ணையன் நீதிபதியாக பணியாற்றி வந்த நிலையில், கடந்த 3ஆம் தேதி காலமானார். அவரது இறுதிச்சடங்கின் போது மர்ம நபர்கள் நீதிபதியின் மற்றொரு வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் ரூ.20,000 ஆயிரத்தை திருடி சென்றனர். அதேபோன்று செஞ்சேரியில் உமேஷ் என்பவரது வீட்டில் 4 பவுன் தங்க சங்கிலி, 11/4 பவுன் நகை, ரூ.6,800 திருடி சென்றுள்ளனர்.
பெரம்பலூர் மாவட்டத்தில் வேளாண்மை பொறியியல் துறையின் மூலம் பவர் டில்லர் மற்றும் விசைக்கலை எடுக்கும் கருவி (பவர் வீடர்) விவசாயிகளுக்கு மானிய விலையில் வழங்கப்பட உள்ளது. மேலும் விவரங்களுக்கு வேளாண்மை பொறியியல் துறையின் மாவட்ட செயற்பொறியாளர் அலுவலகம் அல்லது வருவாய் கோட்ட அளவில் உதவி செயற்பொறியாளர் அலுவலகம் வட்டார அளவில் உதவி செயற் பொறியாளர்களை தொடர்பு கொண்டு பயன்பெறுமாறு கலெக்டர் இன்று தகவல்.
பெரம்பலூர் நகர், துறைமங்கலம் நான்கு ரோடு அருகில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் சார்பில், பெறப்பட்ட ரூ.23.50 லட்சம் மதிப்பிலான அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய நிவாரண பொருட்களை மாவட்ட ஆட்சியர் கிரேஸ் பச்சாவ் இன்று விழுப்புரம் மாவட்டத்தில் ஃபெஞ்சல் புயல் மற்றும் மழைகளால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அனுப்பி வைத்தார். நிகழ்ச்சியின் போது துறை சார்ந்த அரசு அலுவலர்கள் பலர் உடன் இருந்தனர்.
குன்னம் வட்டம் கரம்பியம் கிராமத்தில் மின்சாரம் தாக்கி இளைஞர் உயிரிழந்தார். கரம்பியம் கிராமத்தில் நேற்று இரவு 7:30 மணி அளவில் மருதமுத்து என்பவர் குளிக்க சென்றுள்ளார். அப்போது கதவுக்கு இடையே செல்லும் மின் இணைப்பு உரசி தேய்ந்ததால் அவர் உள்ளே சென்றபோது மின் இணைப்பை தொட்டதால் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
வேப்பந்தட்டை வட்டம், அரும்பாவூர் பெரிய ஏரிக்கரை உடைந்து நீர் வெளியேறியதால் சுமார் 500 ஏக்கர் பரப்பளவிலான நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி சேதமடைந்தன. இதையடுத்து மாவட்ட ஆட்சியர் கிரேஸ் பச்சாவ், சார் ஆட்சியர் கோகுல் ஆகியோர் அப்பகுதிக்கு சென்று ஏரிக்கரை உடைப்பை பார்வையிட்டு, உடனடியாக அதை சீரமைக்க உத்தரவிட்டனர். உடைப்பை உடனடியாக சரிசெய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.
பெரம்பலூர் மாவட்டம் மங்களமேடு நன்னை கழனிவாசல் உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளில் நாளை (04-12-2024) மின் நிலையங்களில் பராமரிப்பு பணி மேற்கொள்கிறார்கள். இதனால் நாளை காலை 9:30 மணி முதல் 4.30 மணி வரை மின்தடை ஏற்படும் என மின்வாரியத்துறை அறிவித்துள்ளது.
பெரம்பலூர் சிறு குறு நடுத்தர நிறுவனங்களுக்கு பதிவுச் சான்றிதழ் அரசு அங்கீகாரத்துடன் பதிவு செய்ய.udayamregistration.gov.in என்ற இணையதளம் மூலம் தானாகவே பதிவு சான்றிதழ் பெற்றுக் கொள்ளலாம். நிறுவனங்களை ஒழுங்கு படுத்தப்பட அரசு அங்கீகாரம் மானியம் பெற சான்றிதழ் கட்டாயம் வேண்டும். தொடர்பான விழிப்புணர்வு கூட்டம் நாளை காலை 11 மணி அளவில் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறுகிறது. ஆட்சியர் கிரேஸ் பச்சாவ் அறிவிப்பு.
வேப்பந்தட்டை வட்டார பகுதிகளான தளுதாழை, அரும்பாவூர், அ. மேட்டூர், கொட்டாரகுன்று, மலையாளப்பட்டி, சின்னட்டுலு, கோரையாறு, பூஞ்சோலை உள்ளிட்ட பகுதிகளில் பயிரிடப்பட்டிருந்த 500 ஏக்கருக்கும் அதிகமான மக்காச்சோள வயல்களில் சோளம் சாய்ந்து நாசமானது. வயல்களில் தேங்கிய மழைநீரால் சோளம் அழுகிய நிலையில் காணப்படுகிறது.
பெரம்பலூர் மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக பெரம்பலூரில் 45 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. அதேபோல் எறையூர் 38 சென்டி மீட்டர் வாக்களத்தூர் 37 சென்டி மீட்டர் தழுதுவளை நாற்பத்தி ஏழு சென்டி மீட்டர் லப்பைகுடிக்காடு 41 செண்டிமீட்டர் வேப்பந்தட்டை 48 சென்டிமீட்டர் மழை பரவலாக பெய்துள்ளது. அதிகாலை முதல் பரவலாக மழை பெய்து வருகிறது.
Sorry, no posts matched your criteria.