Perambalur

News December 11, 2024

பெரம்பலூர் நாம் தமிழர் கட்சியிலிருந்து 5 பேர் நீக்கம்

image

பெரம்பலூர் சட்டமன்றத் தொகுதியைச் சேர்ந்த வை.வேலுசாமி, அ. முத்துக்குமார், ம.கலியமூர்த்தி, க.கனகராஜ், இரா.ராஜேந்திரன் ஆகியோர் கட்சியின் கட்டுப்பாட்டை மீறி செயல்பட்டதன் காரணமாக, ஒழுங்கு நடவடிக்கைக் குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் அவர்கள் வகித்துவந்த பொறுப்பிலிருந்தும், அடிப்படை உறுப்பினரிலிருந்தும் நீக்கி அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று அறிவித்துள்ளார்.

News December 11, 2024

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

image

பெரம்பலூர் மாவட்டத்தில் உணவுப்பொருள் வழங்கள் சம்பந்தமான பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் 14.12.2024 அன்று நடைபெற உள்ளது. அதன்படி பெரம்பலூர் வட்டம் புது நடுவலூர் கிராமத்திலும், வேப்பந்தட்டை வட்டம் அனுக்கூர் கிராமத்திலும், குன்னம் வட்டம் சித்தலி (மேற்கு) கிராமத்திலும், ஆலத்தூர் வட்டம் சிறுகன்பூர் (மேற்கு) கிராமத்திலும் முகாம் நடைபெற உள்ளது என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News December 10, 2024

பெரம்பலூர்: விருது பெற விண்ணப்பிக்கலாம் கலெக்டர் தகவல்

image

கபிர் புரஸ்கார் விருது காவல் தீயணைப்பு துறை உள்ளிட்ட துறையில் இருப்பவர்கள் இவ்விருதினை பெற விண்ணப்பிக்காலம். கடைசி நாள் 15-12-2024. 3 பிரிவில் ரூ20000,10000,5000, பரிசு வழங்கப்படும். பரிசு வழங்கும் நாள் 26-01-2025.http://awards.tn.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். என இன்று மாவட்ட ஆட்சியர் கிரேஸ் பச்சாவ் அறிவிப்பு.

News December 10, 2024

கார்த்திகை விழாவிற்கு அமைச்சருக்கு அழைப்பிதழ்

image

பெரம்பலூர் மாவட்டம் எளம்பலூர் பிரம்மரிஷிமலையில் வருடந்தோறும் திருக்கார்த்திகை தீபத்திருவிழா அன்று மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்படுவது வழக்கம். வெகுவிமரிசையாக நடைபெறும் இந்ததீபத் திருதிருவிழாவில்ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்வர். அதன்படி வரும் 13ஆம் தேதி 42 வது ஆண்டாக நடைபெறும் தீபத்திருவிழாவிற்கான அழைப்பிதழை அமைச்சர் நேருவிடம் தவசி சுவாமிகள் கொடுத்து வரவேற்றார்.

News December 10, 2024

கிணற்றில் மிதந்த ஆண் சடலம்

image

பாடலூர் கிராமத்திற்கு அருகே உள்ள பெருமாள் மலை அடிவாரத்தில் உள்ள பாழடைந்த கிணற்றில் நேற்று மாலை ஆண் ஒருவர் பிணமாக கிடந்தார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த மக்கள் உடனடியாக பாடலூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் கிணற்றில் மிதந்த உடலை மீட்டு பிரதே பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்தவர் யார் என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.

News December 9, 2024

பெரம்பலூர் மாவட்டத்தில் இன்று முதல் தொடக்கம்

image

பெரம்பலூர் மாவட்டத்தில் இன்று திங்கள்கிழமை (09-12-2024) முதல் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வுகள் தொடங்கின. பெரம்பலூர் மாவட்டத்தில் அரையாண்டு தேர்வுகள் இன்று தொடங்கி (23-12-2024) திங்கள்கிழமை வரை 14 நாட்கள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

News December 9, 2024

பெரம்பலூரில் தனியார் வேலை வாய்ப்பு முகாம்

image

பெரம்பலூர் மாவட்டத்தில் தனியார் துறை நிறுவனங்களும், தனியார் துறையில் பணிபுரிய விருப்பம் உள்ள மனுதாரர்களும் நேரடியாக சந்திக்கும் வேலை வாய்ப்பு முகாம், பெரம்பலூர் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் 13.12.2024 அன்று நடைபெற உள்ளது. இதில் விருப்பமுள்ள வேலை வாய்ப்பில்லா இளைஞர்களும், தனியார் துறை நிறுவனங்களும் கலந்து கொண்டு பயன்பெறுமாறு ஆட்சியர் தெரிவித்துள்ளார். ஷேர் செய்யவும்

News December 9, 2024

பெரம்பலூரில் மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம்

image

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பெரம்பலூர் கோட்டத்திற்குட்பட்ட மின் நுகர்வோர்களின் குறைதீர் கூட்டம் பெரம்பலூர் செயற்பொறியாளர் மின்வாரிய அலுவலகத்தில் நாளை (டிச.10) காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறுகிறது. பெரம்பலூர் மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் மின் நுகர்வோர்கள் கலந்துகொண்டு தங்களது குறைகளை நேரில் முறையிட்டு பயன்பெறலாம்.

News December 9, 2024

நள்ளிரவில் சுற்றி திரிந்த பெண்ணால் பரபரப்பு

image

மங்களமேடு அருகே உள்ள சிறுகுடல் கிராமத்தில் சில நாட்களுக்கு முன்பு 7 வீடுகளில் தொடர் திருட்டு நடைபெற்றது. இதையடுத்து, சிசிடிவி கேமரா பதிவுகளை கொண்டு போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இந்நிலையில், நேற்று முன்தினம் இப்பகுதியில் நள்ளிரவில் பெண் ஒருவர் சுற்றி வருவதை பார்த்த அப்பகுதி மக்கள் அவரை சந்தேகத்தின் பேரில் போலீசிடம் ஒப்படைத்தனர். விசாரணையில் அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பது தெரியவந்தது.

News December 8, 2024

வாக்காளர் பட்டியல் சுருக்கத்திருத்த பட்டியல் மேலாய்வு

image

பெரம்பலூர் மாவட்டத்திற்கான வாக்காளர் பட்டியல் பார்வையாளர்/ எழுது பொருள் மற்றும் அச்சுத்துறை ஆணையர் ஷோபனா, வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கத் திருத்த முகாமில் பெறப்பட்ட விண்ணப்பங்களில் வாக்குப்பதிவு அலுவலர், உதவி வாக்கு பதிவு அலுவலர், வாக்குச்சாவடி நிலைய அலுவலர்களால், விண்ணப்பங்களின் நிலை குறித்து இன்று (டிச-8) மாவட்ட ஆட்சியர் கிரேஸ் பச்சாவுடன் இணைந்து மேலாய்வு மேற்கொண்டார்.

error: Content is protected !!