India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பெரம்பலூர் மாவட்ட வேலைவாய்ப்பு முகாம் அலுவலகத்தில் இன்று காலை 10 மணி அளவில், தனியார் துறை சார்பில் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது. இதில், ஏராளமானோர் கலந்துகொண்டு பயன்பெற்றனர்.
குன்னம் வட்டத்திற்கு உட்பட்ட வேள்வி மங்கலம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி நிவாரண முகாமினை, பெரம்பலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் கிரேஸ் பச்சாவ் நேற்று இரவு நேரில் சென்று பார்வையிட்டு, முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள நபர்களுக்கு உணவு மற்றும் பால் போர்வைகள் வழங்கினார். இந்நிகழ்வின் போது துறை சார்ந்த அரசு அலுவலர்கள் பலர் உடன் இருந்தனர்.
பெரம்பலூர் மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் கனமழையின் காரணமாக இன்று (டிச.13) பள்ளி மற்றும் கல்லுரிகளுக்கு விடுமுறை அறிவித்து ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக தஞ்சை, மயிலாடுதுறை, திருச்சியை தொடர்ந்து பெரம்பலூர் மாவட்ட பள்ளி மற்றும் கல்லுரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஷேர் செய்யவும்
தமிழ்நாடு அரசின் மாநில நெடுஞ்சாலை துறையால் பராமரிக்கப்படும் சாலைகளில் உள்ள பள்ளங்கள் சேதங்கள், பிற சேவை குறைபாடு குறித்த புகார்களை தீர்க்க “நம்ம சாலை” என்ற தொலைபேசி செயலி தமிழ்நாடு அரசால் உருவாக்கப்பட்டுள்ளது. நெடுஞ்சாலைகள் 24 மணி நேரத்திலும், மாவட்ட சாலைகள் 72 மணி நேரத்திலும் சரி செய்யப் படும். குறைகளை இந்த செயலியில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என மாவட்ட ஆட்சியர் கிரேஸ் பச்சாவ் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவ மாணவிகளுக்கு வரும் 14ஆம் தேதி ஊரக திறனறித் தேர்வு (Trust) நடைபெறுவதாக இருந்தது. தொடர்ந்து கனமான மழை பெய்து வருகிறது. மழை மேலும் அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது போலவே தொடர்ந்ததால் மாணவ மாணவிகளின் நலன் கருதி தேர்வு ஒத்திவைக்கப்பட்டது. தேதி பின்னர் அறிவிக்கப்படும் என இயக்குநர் அறிவித்துள்ளார்.
பெரம்பலூர் – மானாமதுரை சாலையில் மேலமாத்தூர் பகுதியில் ஆட்டோவும் மற்றொரு வாகனமும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் ஒருவர் பலி, நான்கு பேர் படுகாயம். தஞ்சாவூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து குறித்து குன்னம் காவல்துறையினர் விசாரணை செய்து வருகிறது.
பெரம்பலூர் மாவட்டத்தில் வடகிழக்குப் பருவ மழை தொடர்பான தகவல்கள் மற்றும் உதவிகளுக்கு கட்டணமில்லா தொலைபேசி எண்களான 1077 மற்றும் 1800 425 4556 ஆகிய எண்களிலும், வாட்சப் மூலமாக தகவல்களுக்கு 8220165405 என்ற எண்ணிலும் எந்த நேரத்திலும் தொடர்புகொள்ளலாம் என பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் கிரேஸ் பச்சாவ் தெரிவித்துள்ளார்.
பெரம்பலூர் மாவட்டத்தில், மின்சார தொடர்பான சேவைகள் உதவிகள் மற்றும் புகார்களுக்கு மின் நுகர்வோர் சேவை மையம் எண்ணான 94987 94987 என்ற எண்ணை எந்த நேரத்திலும் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட நிர்வாகத்தின் வாயிலாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மழை நேரத்தில் மின் கம்பங்கள் அருகில் நிற்பது, மற்றும் மின்சார வேலைகளை செய்வது ஆகியவற்றை பொதுமக்கள் முற்றிலும் தவிர்க்குமாறும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பெரம்பலூர் மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் கனமழையின் காரணமாக இன்று (டிச.12) பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக தஞ்சை, மயிலாடுதுறை, புதுக்கோட்டையை தொடர்ந்து பெரம்பலூர் மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே மக்கள் அனைவரும் எச்சரிக்கையுடன் இருக்கும்படி அறிவுறுத்தப்படுகிறது. ஷேர் செய்யவும்
பெரம்பலூர் மாவட்ட கிரிக்கெட் சங்கத்தின் சார்பில், பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த மகளிர் கிரிக்கெட் அணி தேர்வு வரும் 14/12/24 காலை 9 மணியளவில் தந்தை ரோவர் கலைக் கல்லூரி மைதானத்தில் நடைபெறும். விருப்பமுள்ள வீராங்கனைகள் 31.08.2012க்கு முன் பிறந்திருக்க வேண்டும் மற்றும் ஆதார் நகலுடன் நேரில் வரலாம். மேலும் தகவல்களுக்கு 9840673348, 9944139234, 9865953023 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம். ஷேர் செய்யவும்
Sorry, no posts matched your criteria.