India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பெரம்பலூர் தாலுகாவிற்குட்பட்ட கீழ்க்கணவாய் கிராமத்தைச் சேர்ந்த திமுக நிர்வாகி வழக்கறிஞர் வெள்ளைச்சாமி அண்மையில் இயற்கை எய்தியதை தொடர்ந்து இன்று (23.12.2024) அவரது இல்லத்திற்கு திமுக துணைப் பொதுச்செயலாளரும், நீலகிரி தொகுதி எம்.பியுமான இராசா நேரில் ஆறுதல் கூறினார். இந்நிகழ்வின் போது, எம்எல்ஏ பிரபாகரன், திமுக மாவட்டப் பொறுப்பாளர் ஜெகதீசன் உட்பட பலர் இருந்தனர்.
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று (23.12.2024) மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது. அப்போது ₹.2.56 லட்சம் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை 19 பயனாளிகளுக்கு மாவட்ட ஆட்சியர் கிரேஸ் பச்சாவ் வழங்கினார்.
குன்னம் வட்டம் கீழப்புலியூர் கிராமத்தில் நாகமுத்து மாரியம்மன் கோவிலில் நேற்று இரவு கோவில் பூட்டை உடைத்து அம்மன் 1 பவுன் நகை, ரூ.25,000 உண்டியல் பணத்தையும் மர்ம நபர்கள் சிலர் திருடி சென்றனர். கோவிலின் அருகே உள்ள சிசிடிவி காட்சி மூலம் குன்னம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
சிறுவயலூர் கிராமத்தை சேர்ந்தவர் ரவி. இவர் சிறுவயலூர் பகுதியில் பசு மாடு மற்றும் 2 கன்று குட்டிகளை கொட்டகைக்கு உள்ளே கட்டிவிட்டு, இன்று காலை வழக்கம் போல் பால் கறப்பதற்காக வயலுக்கு சென்று பார்த்த போது, கொட்டகைக்குள் மின்னல் தாக்கி பசு மாடு மற்றும் 2 கன்று குட்டிகள் இறந்து கிடந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
வேப்பந்தட்டை பகுதியில் உள்ள பாஸ்புட் கடை அருகே அரசால் தடை செய்யப்பட்ட கேரளா லாட்டரி சீட்டுகளை ஆன்லைன் மூலம் விற்றுக் கொண்டிருந்த ராமச்சந்திரன் (38) என்ற நபரை போலீசார் கைது செய்து, அவரிடமிருந்து கேரளா ஆன்லைன் லாட்டரி விற்பனை செய்ய பயன்படுத்திய போனை பறிமுதல் செய்து அரும்பாவூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
தொடர் கனமழை காரணமாக து.களத்தூர் வழி தேனூர் கிராமம் தொட்டியப்பட்டி செல்லும் வழியில் ஆறு பெருக்கெடுத்து ஓடுகிறது. தரைப்பாலம் மூழ்கியதால், போக்குவரத்து தடைப்பட்டது. மக்களும் அந்த வழியாக செல்ல முடியவில்லை. எனவே, இப்பகுதியில் பாலம் கட்ட ஏற்பாடு செய்ய வேண்டும் என்று தேனூர் கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வேப்பூர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி மு.ப்ரீத்தி 2024 அக்டோபர் மாதம் நடைபெற்ற தமிழ் இலக்கிய திறனறித் தேர்வில், மாநில அளவில் 91 மதிப்பெண்கள் பெற்று 750 பேரில் 151வது இடம் பிடித்து தேர்வாகியுள்ளார். அவருக்கு பள்ளித் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
பெரம்பலூர் அடுத்த எறையூர் கிராமத்தில் உள்ள குழந்தைகள் தத்தெடுப்பு நிறுவனத்தின் செயல்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் கிரேஸ் பச்சாவ் இன்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த நிறுவனத்தில் பாதுகாப்பு உபகரணங்கள் தயாராக இருக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு எடுத்துரைத்தார். மேலும் குழந்தைகளை அனைவரையும் கொஞ்சி மகிழ்ந்தார்.
தமிழ் மொழி இலக்கிய திறனாய்வுத் தேர்வில் மாநில அளவில் வெற்றி பெற்றவர்கள் விவரம் நேற்று வெளியிடப்பட்டது. அதன்படி பெரம்பலூர் மாவட்டத்தில் ஒன்பது பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் தனியார் பள்ளியில் மூன்று பேரும், அரசுப் பள்ளியில் ஆறு பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். அவர்களுக்கு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மற்றும் மாவட்டக் கல்வி அலுவலர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
பெரம்பலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் இன்று (21.12.2024) காலை 6.30 மணி நிலவரப்படி 107 மி.மீ மழை பதிவாகியுள்ளது. பெரம்பலூர் 12 மி.மீ, எறையூர் 11 மி.மீ, கிருஷ்ணாபுரம் 6 மி.மீ, தழுதாழை 23 மி.மீ, வேப்பந்தட்டை 6 மி.மீ, பாடலூர் 29 மி.மீ, செட்டிகுளம் 20 மி.மீ மொத்தமாக பெரம்பலூர் மாவட்டத்தில் 107 மி.மீ மழை அளவு பதிவாகியுள்ளது.
Sorry, no posts matched your criteria.