India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ஜனவரி, பிப்ரவரி மாதங்கள் குளிர்காலம் என்பதால் தற்போது பெரம்பலூர் மாவட்டத்தில் வழக்கத்தைவிட குளிரும், பனியும் அதிகமாக நிலவி வருகிறது. கடந்த சில நாட்களாக மாலை நேரத்திலேயே குளிர் தொடங்கி, காலை சூரியன் உதித்தும் பனி மூட்டமாக இருந்து வருகிறது. இதனால் பொதுமக்களும் வீட்டினுள் முடங்கியுள்ளனர். மேலும், பனிமூட்டம் காரணமாக வாகன ஓட்டிகள் வாகனங்களில் முகப்பு விளக்குகளை எரியவிட்டு செல்கின்றனர்.
தமிழ்நாடு புவியியல் துறை 2022 ஆம் ஆண்டு நிலவரப்படி மக்கள்தொகை குறைவாக உள்ள மாவட்டங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதன்படி பெரம்பலூர் மாவட்ட மக்கள்தொகை 6 லட்சமாக குறைந்து, முதல் இடத்தில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
பெரம்பலூரில் கடந்த 2020-ஆம் ஆண்டு, சிறுமி ஒருவருக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் அரும்பாவூரை சேர்ந்த தன்ராஜ் (37), அவருக்கு உடந்தையாக இருந்த சிறுமியின் தாயார் தீபா (42) ஆகியோர் போக்சோவின் கீழ் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் குற்றம் நிரூபிக்கப்பட்டதால் தன்ராஜிற்கு 6 வருடம், உடந்தையாக இருந்த சிறுமியின் தாயார் தீபாவிற்கு 5 வருட கடுங்காவல் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது.
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள கிராமங்களைச் சேர்ந்த ஆண்களுக்கான செல்போன் பழுது நீக்குதல் இலவச பயிற்சி குறித்து ஜன.20 ஆம் தேதி முதல் 30 நாட்களுக்கு இலவசமாக அளிக்கப்பட உள்ளது. விருப்பமுள்ளவர்கள் எளம்பலூர் சாலையில் உள்ள ஐஓபி(IOB) வங்கியின் மாடியில் உள்ள கிராமிய சுய வேலைவாய்ப்பு பயிற்சி மைய இயக்குனரிடம் 18ஆம் தேதி மாலை 5 மணிக்குள் பதிவு செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெரம்பலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டல் மையத்தில், தற்போது TNPSC GROUP IV / VAO தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் வரும் 8ஆம் தேதி முதல் பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த வேலை நாடுநர்கள் பயன்பெறும் பொருட்டு இப்போட்டித் தேர்விற்காக இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்படவுள்ளது. இந்த அறிய வாய்பினை வேலை நாடுநர்கள் பயன்படுத்திக்கொண்டு பயனடையுமாறு கலெக்டர் கிரேஸ் பச்சாவ் தெரிவித்துள்ளார்.
பெரம்பலூர் மாவட்டத்தில் 311 ரேஷன் கடைகளில் 1.90 லட்சம் குடும்ப அட்டைதாரா்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்புகள் விநியோகிக்கப்பட உள்ளதாக மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவ் தெரிவித்தார். ஜன.3 முதல் 13 ஆம் தேதி வரை பொங்கல் பரிசுத் தொகுப்புகளை ரேஷன் கடைகளில் விநியோகம் செய்யத் திட்டமிட்டு அதற்கான பணிகள் நடைபெறுகின்றன. இதுவரை, அட்டைதாரா்களுக்கு டோக்கன் விநியோகம் செய்யப்பட்டுள்ளது.
பேரறிஞர் அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், மாவட்ட அளவிலான மிதிவண்டி போட்டிகள், பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவாயில் அருகில் பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு நாளை (ஜன.04) காலை 6 மணி அளவில் நடைபெறும் என மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.
பெரம்பலூரில் ஆண், பெண் இருபாலருக்குமான நெடுந்தூர ஓட்டப் போட்டி ஜன.05-ஆம் தேதி நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியர் கிரேஸ் பச்சாவ் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், 2025-ஆம் ஆண்டுக்கான அறிஞர் அண்ணா நெடுந்துர ஓட்டப் போட்டிகள் ஆண்கள் மற்றும் பெண்களுக்கான இரு பிரிவுகளில், ஜன.5-ஆம் தேதி காலை 6 மணியளவில் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வேப்பந்தட்டை ஒன்றியத்துக்கு உட்பட்ட தொண்டமாந்துறையில் வரும் 8ஆம் தேதி மக்கள் தொடர்பு திட்ட முகாம் மாவட்ட ஆட்சியர் கிரேஸ் பச்சாவ் தலைமையில் நடைபெற உள்ளது. அதற்காக பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெறும் பணி நடைபெற்று வருகிறது. எனவே தொண்டமாந்துறை மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் கிராம நிர்வாக அலுவலகத்தில் அதற்கு முன்னதாக மனுக்களை தருமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பெரம்பலூர், தாட்கோ மூலம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணவர்களுக்கு குரூப்-2, 2ஏ தேர்வுகளுக்கும், இத்தேர்வுகளில் முதல்நிலை தேர்வில் தேர்ச்சி பெற்று முதன்மை தேர்வுக்கும் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இதற்கு தேர்ச்சி பெற்றவர்களும், 21-32 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும். இப்பயிற்சி வகுப்பில் சேர www.tahdco.com என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் கிரேஸ் பச்சாவ் தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.