India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தமிழ்நாடு பாரத சாரண சாரணியர் இயக்க வைரவிழா & கலைஞர்நூற்றாண்டு பெருந்திரளணி (28.01.25 – 03.02.25) திருச்சி மணப்பாறை சிப்காட் வளாகத்தில் நடைபெறுவதால் இன்று (ஜன.22) பெரம்பலூர் மாவட்ட சாரணர் இயக்க லோகோ வெளியிடப்பட்டது. இதனை முதன்மைக் கல்வி அலுவலர் முருகம்மாள் வெளியிட, மாவட்ட ஆணையர் செல்வராஜ் பெற்றுக்கொண்டார். மேலும், மாவட்ட பொறுப்பாளர்கள் மாயக்கிருஷ்ணன், பிரகாஷ், குணாளன் உடனிருந்தனர்.
துறைமங்களத்தைச் சேர்ந்த இளம்பெண்ணிடம் டேட்டிங் ஆப் மூலம் பழகி ரூ.15,90,000-யை வங்கி கணக்குகள் மூலம் பெற்று ஏமாற்றிய நபரை போலீசார் கைது செய்தனர். இதற்கு முன்னதாக வேலை வாங்கி தருவதாக ஆசை வார்த்தை கூறி தனிடம் இருந்து அந்த நபர் பண மோசடி செய்ததாக ஏமாற்பட்ட அந்த இளம்பெண் புகார் அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
வடக்கலூர் கிராமத்தை சேர்ந்த வீரராகவன் என்ற வாலிபர் தனது வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த 6 வயது சிறுமியை மதுபோதையில் பாலியல் தொந்தரவு செய்ய முயன்ற போது சிறுமி சத்தம் போட்டு கூச்சலிட்டார். சிறுமியின் தாயார் தட்டி கேட்ட பொது கட்டையால் அடித்து தாக்கினான். இதை பார்த்த பொதுமக்கள் அவனுக்கு தர்ம அடி கொடுத்தனர். மேலும் போக்ஸோ வழக்கு விசாரணை நடத்தி வருகின்றனர்.
ரேஷன் அட்டைகளில் பெயர் சேர்த்தல், நீக்கல், பிழை திருத்தம் செய்தல் போன்ற கோரிக்கைகளின் மீது உடனுக்குடன் தீர்வு காண்பதற்கு, சிறப்புப் பொது விநியோகத் திட்ட குறை தீர்க்கும் முகாம், நொச்சியம், வி.களத்தூர், எழுமூர் (கிழக்கு), சாத்தனூர் உள்ளிட்ட கிராமங்களில் 25-ந்தேதி காலை 10 மணியளவில் முகாம் தொடங்கி நடைபெற உள்ளது என்று பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். இந்த தகவலை ஷேர் பண்ணுங்க..
பாடாலூரில் உள்ள ஸ்பென் பிட் கார்மெண்ட்ஸ் அலகில் Tailor, Checker, Helper, Ironer ஆகிய பணிகளுக்கு வேலையாட்கள் தேவைப்படுவதால், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மூலமாக வேலைவாய்ப்பு முகாம் 30.01.2025 அன்று Finefit கார்மெண்ட்ஸ் நிறுவனத்திலேயே காலை 9.00 முதல் 3.00 மணி வரை நடைபெற உள்ளது.மேலும் விவரங்களுக்கு 9025027058,9843190666,9444094136 ஆகிய எண்களில் தொடர்புகொள்ள மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தல்.
குன்னம் தாலுகாவிற்குட்பட்ட, வேப்பூர் அரசு மருத்துவமனையில், பொதுமக்களுக்கு வழங்கப்படும் மருத்துவ சேவைகள் மற்றும் அடிப்படை வசதிகள் குறித்து இன்று (21.01.2025) மாவட்ட ஆட்சித்தலைவர் கிரேஸ் பச்சாவ் நேரில் ஆய்வு மேற்கொண்டார். இந்நிகழ்வின்போது, துறைசார்ந்த அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டத்தில் “உங்களை தேடி உங்கள் ஊரில்” என்ற திட்டத்தின் வாயிலாக மக்கள் குறைதீர் கூட்டம் நாளை (ஜன.22) நடைபெற உள்ளது என மாவட்ட கலெக்டர் கிரேஸ் பச்சாவ் அழைப்பு விடுத்துள்ளார். தமிழக முதலமைச்சரால் அறிவிக்கப்பட்ட உங்களை தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் வாயிலாக நாளை மனுக்கள் பெறப்பட உள்ளது. குன்னம் சுற்றியுள்ள அனைத்து அலுவலகங்களிலும் மனுக்கள் கொடுக்கலாம்.
பெரம்பலூர் மாவட்டத்தில் ஆவின் பால் விற்பனையகம் அமைக்க தமிழக அரசு மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலம், நிதி உதவி வழங்கப்படுகிறது. அதன் அடிப்படையில் கலெக்டர் கிரேஸ் மாற்றுத்திறனாளிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார். இதன் அடிப்படையில் ரூ.55 ஆயிரம் வழங்கப்படுகிறது. பயன்பெற மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை, ஆதார் அட்டை, பாஸ்போர்ட் சைஸ் போட்டோ, கல்வி சான்றிதழுடன் அணுகவும்.
பெரம்பலூர் மாவட்டத்தில் அரசு திட்டங்களை சேகரித்தல் மற்றும் கண்காணிப்பு அலகில் இளம் வல்லுநராக பணியாற்ற கணினி, அறிவியல் தகவல் தொழில்நுட்பம் உள்ளிட்டவைகள் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இதில் தொகுப்பூதியமாக ரூ.50,000 வழங்கப்படும் எனவும், தகுதியுடையவர்கள் http//:perambalur nic.in இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் எனவும் ஆட்சியர் கிரேஸ் பச்சாவ் தெரிவித்துள்ளார்.
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு துணை மின் நிலையங்களில் இன்று (ஜன.21) மாதாந்தர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. இதனால் அனுகூர், திருப்பெயர், எஸ்.புதூர், ஆலம்பாடி, சின்னார், முருக்கன்குடி, வலிகண்டபுரம், சர்க்கரை ஆலை, கிழுமாத்தூர், ஓலைப்பாடி, ஏலுமோர், பூலாம்பாடி, பெரியவடகரை, பெருமாத்தூர், அத்தியூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மின் நிறுத்தம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.