Perambalur

News January 12, 2025

பெரம்பலூர் தேசிய நெடுஞ்சாலையில் விபத்து

image

பெரம்பலூர் மாவட்டம், தண்ணீர் பந்தல் அருகே,இன்று (ஜன-11) மாலை -6.30 மணியளவில், முன்னால் சென்ற இருசக்கர வாகனத்தின் மீது பின்னால் வந்த கார் மோதியதில் இருசக்கர வாகனத்தில் வந்த ஸ்மித் (வயது16) மற்றும் காரில் வந்த துர்கா (வயது 35) என்பவரும் இறந்துவிட்டனர். மேற்படி விபத்தில் காயம் அடைந்தவர்கள் பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.

News January 11, 2025

பெரம்பலூர்: டாஸ்மாக் கடைகள் 2-நாட்கள் விடுமுறை

image

பெரம்பலூர் மாவட்டத்தில் இயங்கி வரும் தமிழ்நாடு மாநில வாணிப கழகத்தின்(டாஸ்மாக்) அனைத்து அரசு மதுபான சில்லரை விற்பனை கடைகள், விற்பனை கடைகளுடன் இணைந்த மதுக்கூடங்கள் மற்றும் FL3 உரிமம் பெற்ற தனியார் மதுபானக்கூடங்கள் ஆகிய அனைத்திற்கும் திருவள்ளுவர் தினம் ஜன.15 மற்றும் குடியரசு தினம் ஜன.26 ஆகிய 2-நாட்கள் உலர்தினமாக (DRY DAY) விடுமுறை அறிவிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். ஷேர் பண்ணுங்க

News January 11, 2025

10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு உயர்கல்வி வழிகாட்டி

image

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மாணவ, மாணவியர் விடுதிகளில் உள்ள 10ஆம் வகுப்பு, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு உயர் கல்வி பயில்வதற்கு வழிகாட்டி நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் தலைமையிலும், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் முன்னிலையிலும் அரசு விடுதி மாணவர்களுக்கு சிறப்பு நெறிமுறை வழங்கப்பட்டது.

News January 11, 2025

ஸ்டூடியோ பூட்டை உடைத்து கேமரா திருட்டு

image

பெரம்பலூர் புறநகர் பகுதியான துறைமங்கலம் நியூ காலனியை சேர்ந்த பிரபு என்பவர் போட்டோ ஸ்டூடியோ வைத்து நடத்தி வருகிறார். இவரது கடையில் நேற்று முன்தினம் (ஜன.09) கதவின் பூட்டு உடைக்கப்பட்டு கேமரா உள்ளிட்ட கருவிகள் மற்றும் ரூ.2500 பணம் ஆகியவை திருடப்பட்டிருப்பது சிசிடிவி கேமரா மூலமாக தெரியவந்துள்ளது. இந்நிலையில் புகார் கொடுக்கப்பட்டதை அடுத்து தற்போது பெரம்பலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News January 10, 2025

பெரம்பலூர் ஆட்சியர் தலைமையில் ஆலோசனைக்கூட்டம்

image

பெரம்பலூர் மாவட்டத்தில், குடியரசு தின விழா சிறப்பாக கொண்டாடுவது தொடர்பான முன்னேற்பாடு பணிகள் குறித்து அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் இன்று (10.01.2025) மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், பெரம்பலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் கிரேஸ் பச்சாவ் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் வடிவேல் பிரபு உள்ளிட்ட அனைத்துதுறை முதன்மை அலுவலர்கள் பங்கேற்றனர்.

News January 10, 2025

கிணற்றில் தவறி விழுந்த சிறுவன் பலி

image

பெரம்பலூர் மாவட்டம், எழுமூர் கிராமத்தில் சங்கர் என்பவரின் மகன் மோகித் (8) சிறுவன் கிராமத்தில் உள்ள சங்கரன் என்பவரின் வயலில் விளையாடி கொண்டிருந்தபோது, அருகில் கொய்யாக்காய் மரத்தில் பறிப்பதற்காக ஏரி தவறி விழுந்து பலி. இந்த விபத்து குறித்து காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர். சிறுவன் உயிர் இழந்த சம்பவம் அப்பகுதியில் பெருந்து சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

News January 9, 2025

போதை ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

image

பெரம்பலூர் அருகே தந்தை ரோவர் வேளாண்மை கல்லூரியில் பெரம்பலூர் மாவட்ட காவல்துறை மதுவிலக்கு அமலாக்க பிரிவு சார்பில் போதை பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்ட காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் (மதுவிலக்கு  அமலாக்கப்பிரிவு) பாலமுருகன் சிறப்புரையாற்றி போதை ஒழிப்பின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார். போதைப் பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்ச்சி பாடல்களும் பாடப்பட்டன.

News January 9, 2025

பசுமைத்திட்ட பள்ளியாக து.களத்தூர் பள்ளி தேர்வு

image

பசுமைப் பள்ளிக்கூடத் திட்டத்தின் கீழ் முதலமைச்சரின் பசுமைத் தமிழ்நாடு திட்டத்தின் குறிக்கோளை நடைமுறைப்படுத்துவதற்கு தேவையான சூழல் மேம்பாட்டு பணிகளை மேற்கொள்ள 2024-2025 ஆம் ஆண்டில் தமிழகத்தில் தேர்வு செய்யப்பட்ட 100 பள்ளிகளில் பெரம்பலூர் மாவட்டத்தில் து.களத்தூர் பள்ளியும் தேர்வு செய்யப்பட்டுள்ளது. ரூ.20,000 பரிசு வழங்கப்பட உள்ளது.

News January 8, 2025

பெரம்பலூர் : எஸ்.பி அலுவலகத்தில் சிறப்பு முகாம்

image

பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆதர்ஷ் பசேரா தலைமையில் இன்று (ஜன.08) பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் சிறப்பு மனு முகாம் நடைபெற்றது. இந்த சிறப்பு மனு முகாமில் பொதுமக்களிடம் இருந்து 22 மனுக்கள் பெற்றப்பட்டு சம்மந்தப்பட்ட காவல் நிலையத்திற்கு நடவடிக்கை மேற்கொள்ள அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்தார்.

News January 8, 2025

 சிறந்த ஜூனியர் ரெட்கிராஸ் மாணவர்களுக்கான தேர்வு

image

ஜூனியர் ரெட்கிராஸ் சார்பில் இன்று (ஜன.08) காலை 10 மணி அளவில் சிறந்த ஜூனியர்களை தேர்வுசெய்வதற்கான எழுத்து தேர்வு பெரம்பலூர் அ.மே.நி.பள்ளியில் நடைபெற்றது. இதில், ரெட்கிராஸ் செயலர் ராதாகிருஷ்ணன், நிர்வாக குழு உறுப்பினர் மாயக்கிருஷ்ணன், கன்வீனர் மற்றும் பொறுப்பாளர்கள் தேர்வை நடத்தினர். தேர்வு எழுதிய 181 மாணவர்களில், 50 பேர் தேர்வு செய்யப்பட்டு ஜன.29 அன்று விருது வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

error: Content is protected !!