Perambalur

News January 28, 2025

பெரம்பலூர்: விவசாயிகளுக்கு மாவட்ட ஆட்சியர் அழைப்பு

image

பெரம்பலூர் மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 31.01.2025 அன்று பெரம்பலூர் மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் வேளாண்மை சம்மந்தமான நீர்ப்பாசனம், கடன் உதவிகள், இடுபொருட்கள் மற்றும் விவசாயிகள் மேம்பாட்டிற்கான நலத்திட்டங்கள் பற்றிய முறையீடுகள் பற்றி விவாதிக்கப்படும். இதில் விவசாயிகள் தங்களது குறைகளை தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News January 28, 2025

மக்களுடன் முதல்வர் திட்ட சிறப்பு முகாம் ஒத்திவைப்பு

image

பெரம்பலூர், வேப்பந்தட்டை, வேப்பூர், ஆலத்தூர் ஆகிய ஊராட்சி ஒன்றிய பகுதிகளுக்குட்பட்ட ஊராட்சிகளில் ‘மக்களுடன் முதல்வர்’ திட்டத்தின் மூலம் இன்று (ஜன.28) முதல் 31-ஆம் தேதி வரை சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், இன்றைய முகாம் ஒத்திவைக்கப்படுவதாகவும், நாளை (ஜன.29) முதல் 31-ஆம் தேதி வரை நடக்கும் முகாம்கள் திட்டமிட்டபடி நடக்குமென்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. share it…

News January 27, 2025

பெரம்பலூர் மாவட்ட வரலாற்று சிறப்புகள்

image

பெரும் வனப்பகுதி, ரஞ்சன்குடி கோட்டை, சாத்தனூர் கல்மரம், மயிலும் அருவி, சோழ கங்கம் ஏரி என்று பல்வேறு சிறப்புகளைக் கொண்ட ‘பெரும்புலியூர்’ என்றழைக்கப்படும் பெரம்பலூர் மாவட்டத்தை பார்க்கலாம். எங்கும் வனப்பகுதியான இருந்த பெரம்பலூர் புலிகளும், சிறுத்தைகளும், கரடிகளும் வாழ்ந்த ஒரு இடமாகும். அதுமட்டுமின்றி அழகிய மலைகளும், மலைகள் சூழ்ந்த பகுதிகளும் இங்கு நிறைந்து அகழாய்வுகள் ஏற்ற இடமாக தற்போது உள்ளது.

News January 27, 2025

மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் ஒத்திவைப்பு

image

பெரம்பலூர் மாவட்ட ஒன்றியங்களில் “மக்களுடன் முதல்வர் திட்டத்தின்” மூலம் 3 ஆம் கட்ட சிறப்பு முகாம்கள் நாளை (ஜன-28), முதல் ஜன-31 வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதில் (நாளை ) மட்டும் டி.களத்தூர், செஞ்சேரி லாடபுரம், எளம்பலூர், எசனை ஆகிய பகுதிகளில் நடைபெறவிருந்த 5 முகாம்கள் மட்டும் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்படுவதாகவும் மாற்றுத் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News January 27, 2025

ஊராட்சி நிதியில் கையாடல் செய்த செயலாளர் பணியிடை நீக்கம்

image

பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் ஒன்றியத்தில் ஊராட்சி மன்ற செயலாளராக வெவ்வேறு பகுதியில் சுமார் 15 ஆண்டுகளாக பணியாற்றி வரும் பானுமதி (40) என்பவர் கடந்த ஆண்டி டிசம்பர் மாதம் நொச்சிக்குளம் ஊராட்சியில் பணியாற்றும்போது போலியான பில் தயாரித்து ரூ.78 ஆயிரத்தை ஊராட்சி நிதியிலிருந்து கையாடல் செய்துள்ளதாக பணியிடை நீக்கம் செய்து வட்டார வளர்ச்சி அலுவலர் உத்தரவிட்டுள்ளார்.

News January 27, 2025

மக்காச்சோள பயிருக்கு காப்பீடு செய்ய 31-ஆம் தேதியே கடைசி நாள்

image

பெரம்பலூர் மாவட்டத்தில் 2024-2025-ஆம் ஆண்டு பிரதமரின் பயிர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் இறவை மக்காச்சோளம் பயிரை பயிர் காப்பீடு செய்யலாம். இந்த பயிர் காப்பீடு செய்வதற்கு பீரிமியம் தொகை ஏக்கருக்கு ரூ.345 ஆகும். அதன்படி பெரம்பலூர் மாவட்டத்தில் இறவை மக்காச்சோளம் பயிரை சாகுபடி செய்யும் விவசாயிகள் பயிர் காப்பீடு செய்வதற்கு ஜன.31-ந்தேதியே கடைசி நாள் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். ஷேர் பண்ணுங்க.

News January 26, 2025

சமபந்தி விருந்தில் பங்கேற்ற மாவட்ட ஆட்சியர்

image

இந்தியத்திருநாட்டின் குடியரசு நாள் விழாவை முன்னிட்டு பெரம்பலூர் ஸ்ரீமதன கோபால சுவாமி திருக்கோவிலில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் நடத்தப்பட்ட பொதுமக்களுடன் அமர்ந்து உணவருந்தும் சம்பந்தி விருந்தில் பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் கிரேஸ் பச்சாவ் பங்கேற்று அனைவருடனும் உணவு சாப்பிட்டார்.

News January 26, 2025

தனியார் கல்லூரியில் வாக்காளர் உறுதிமொழி

image

பெரம்பலூர் மாவட்டத்தில் அமைந்துள்ள தனலட்சுமி சீனிவாசன் தனியார் கல்லூரியில் நேற்று (ஜனவரி 25) மாலை தேசிய வாக்காளர் உறுதிமொழி ஏற்கும் நிகழ்வு நடைபெற்றது. வாக்காளர் உறுதிமொழி நிகழ்வை கல்லூரியின் வேந்தர் சீனிவாசன் தொடக்கி வைத்தார். கல்லூரியின் மாணவர்கள் ஏராளமானவர்கள் கலந்து கொண்டு (VOTE) என்ற வடிவில் நின்று வாக்காளர் உறுதிமொழியை ஏற்றனர்.

News January 26, 2025

நொச்சிக்குளம் ஊராட்சி செயலர் பணியிடை நீக்கம் 

image

நொச்சிக்குளம் ஊராட்சியில் கிராம சபை கூட்டத்தை நடத்தவிடாமல் ஊராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் பூட்டிவிட்டு, ஊராட்சி செயலர் பானுமதியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து ஆலத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர் சேகர் நேரில் சென்று விசாரணை மேற்கொண்டதில், பராமரிப்பு பணிகளில் ரூ.78,000 கையாடல் செய்துள்ளதாக புகார் எழுந்தது. இதையடுத்து அவரை வட்டார வளர்ச்சி அலுவலர் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.

News January 26, 2025

தமிழ்ச்செம்மல் விருதாளர்களுக்கு மாவட்ட ஆட்சியர் வாழ்த்து

image

பெரம்பலூர் மாவட்டத்தில் இன்று 26-01-2025 குடியரசு தினவிழா சிறப்பாக நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் கொடி ஏற்றி, அணிவகுப்பு மரியாதை ஏற்றுக் கொண்டார். பின்னர் தமிழ்ச் செம்மல் விருதாளர்களுக்கு சிறப்பு செய்தார். தமிழ்ச் செம்மல் மாயகிருஷ்ணன் அவர்களுக்கு மாவட்ட கண்காணிப்பாளர் அவர்கள் சால்வை அணிவித்தும், மாவட்ட ஆட்சியர் அவர்கள் நினைவுப் பரிசு வழங்கியும் வாழ்த்து தெரிவித்தார்.

error: Content is protected !!