India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பெரம்பலூர்: மேலப்புலியூர் கலைசெல்வன்,
ஆதனூர் ஜுவா , மங்கலமேடு அம்பிகா, புது அம்மாபாளையம் ரம்யா ஆகிய மாற்றுத்திறனாளி வீரர்கள் 2024 மார்ச்-30 அன்று நடைபெற உள்ள தேசிய அளவிலான நீச்சல் போட்டியில் பங்கேற்க மத்திய பிரதேச மாநிலம் குவாலியர் செல்லவுள்ளனர். இதில் வீரர்கள் மேலப்புலியூர் கலைச்செல்வன் மற்றும் ஆதனூர் ஜீவா பெரம்பலூர் முதன்மைக்கல்வி அலுவலர் மணிவண்ணன் உட்பட பலரிடம் வாழ்த்துகள் பெற்றனர்.
மக்களவை தேர்தலை ஒட்டி திராவிட முன்னேற்றக் கழக முதன்மைச் செயலாளரும், அமைச்சருமான கே.என்.நேரு இன்று(மார்ச் 29) வணிகர் சங்க பேரமைப்பு மற்றும் பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதி வியாபாரி சங்கப் பிரதிநிதிகளிடம் தமிழக முதல்வரின் சாதனைகளை எடுத்துரைத்து வியாபாரிகளும் பொதுமக்களும் உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்குமாறு வேண்டுகோள் விடுத்தார்.
மக்களவே தேர்தல் – 2024 அடுத்த மாதம் ஏப்ரல் 19ம் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி அரசியல் கட்சிகள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர். அதன்படி, அதிமுக சார்பில் பெரம்பலூர் தொகுதியில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்துள்ள சந்திரமோகன், பெரம்பலூர் தொகுதி முழுவதும் 29.03.2024 அன்று முதல் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட உள்ளார்.
பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதி தேர்தலை முன்னிட்டு மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியர் கற்பகம் வழிகாட்டுதலின் படி பல்வேறு முன்னேற்பாடு பணிகள் நடைபெற்று வருகின்றன. தற்போது மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்குசாவடி மைய கட்டிடத்தில் வாக்கு பதிவு நாள் அன்று தேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்கள் மற்றும் வாக்காளர்கள் மையத்தை தெரிந்து கொள்ள சுவரில் சட்டமன்ற தொகுதி எண், பாகம் எண் எழுதும் பணி நடைபெற்றது.
வேப்பந்தட்டை வட்டம், பெரம்பலூர் – ஆத்தூர் சாலையில் உள்ள வெங்கனூர் பகுதியில் தேர்தல் கண்காணிப்பு குழுவினர் இன்று வாகன தணிக்கையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.
அப்போது ரூ. 79,000 பணத்தை உரிய ஆவணங்கள் ஏதுமில்லாமல் காரில் எடுத்து வந்த விஜயபுரத்தை சேர்ந்த முருகேசன் என்பவரிடமிருந்து அதிரடியாக பறிமுதல் செய்தனர்.
வேப்பந்தட்டை வட்டம் விசுவக்குடி கிராமத்தில் ரபியா, அப்துல் ஃபாரிக் ஆகியோருக்கு சொந்தமாக 70 ஆடுகள் உள்ளன. இந்நிலையில் நேற்று(மார்ச் 26) மேச்சலுக்கு ஆடுகளை ஓட்டிச் சென்றபோது 11 ஆடுகள் ஒன்றின் பின் ஒன்றாக மர்மமான முறையில் இறந்தன. இதனை அடுத்து ஆடுகள் உயிரிழந்தது குறித்து காரணத்தை அரசு அதிகாரிகள் ஆய்வு நடத்தி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.
சிதம்பரம் (தனி) மக்களவைத் தொகுதியில் இண்டி கூட்டணி சார்பில் போட்டியிடும் விசிக வேட்பாளர் தொல்.திருமாவளவன் இன்று (மார்ச் 27) தனது வேட்புமனுவை தலைமைத் தேர்தல் அலுவலரிடம் தாக்கல் செய்தார். அப்போது அவருடன் அமைச்சர்கள் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், சிவசங்கர் ஆகியோர் உடனிருந்தனர். மார்ச் 20ஆம் தேதி தொடங்கிய வேட்புமனு தாக்கல் இன்றுடன் (மார்ச் 27) நிறைவடைகிறது.
ஆலத்தூர் தாலுகா, நாரணமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் ராமசாமி(60). விவசாயியான இவர் குடும்ப பிரச்னை காரணமாக, தனது விவசாய நிலத்தில் உள்ள மாட்டு கொட்டகையில் தூக்குப்போட்டு கொண்டார். இதை பார்த்த அவரது மகன், ராமசாமியை மீட்டு பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று அவர் உயிரிழந்தார். இது குறித்து பாடாலூர் போலீசார் வழக்குபதிந்து விசாரித்து வருகின்றனர்.
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக முதல் தளத்தில் தேர்தல் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. 24 மணிநேரமும் செயல்படும் வகையில் தேர்தல் நடத்தை விதிமீறல் தொடர்பான புகார்களை தெரிவிக்க விரும்புவோர் 1800-425-9188 என்ற கட்டணமில்லா தொலைபேசியிலும், 04328-299166 மற்றும் 299255 என்ற எண்களிலும் தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் நேற்று(மார்ச் 26) தகவல் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் களைக்கட்டியுள்ள நிலையில், பெரம்பலூர் பாஜக வேட்பாளராக பாரிவேந்தர் போட்டியிடுகிறார். இந்நிலையில், ரூ.126 கோடி என் சொந்த நிதியில் இருந்து தொகுதிக்காக செலவு செய்துள்ளதாக கூறிய பாரிவேந்தர், மீண்டும் தன்னை தேர்ந்தெடுத்தால் 1200 மாணவர்களை எஸ்ஆர்மில் இலவசமாக படிக்க வைப்பதாக வாக்குறுதி அளித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.