Perambalur

News April 27, 2024

பெரம்பலூர் மாவட்டத்திற்கு ரிப்போர்ட்டர்கள் தேவை

image

தமிழில் முன்னனி Short News செயலியான Way2News-ல் பகுதி நேரமாக மாவட்டம், தாலுகா வாரியாக பணியாற்ற அனுபவம் வாய்ந்தவர்கள் அல்லது உங்கள் பகுதியில் நடைபெறும் நிகழ்வுகளை தொகுத்து வழங்கும் திறன் உடையவர்கள் வரவேற்கப்படுகிறார்கள். விருப்பம் உள்ளவர்கள் 8340022122 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளவும்.

News April 26, 2024

சிறுவர்கள் பைக் ஓட்டினால் பெற்றோருக்கு சிறை!

image

பெரம்பலூர் கவுல்பாளையம் கிராமத்தை சேர்ந்த 2 சிறுவர்கள் நேற்று(ஏப்.25) பைக் ஓட்டிச் சென்று விபத்து ஏற்பட்டு உயிரிழந்தனர். இதையடுத்து மோட்டார் வாகனச் சட்டம் 1988 – 199A பிரிவு படி, 18 வயது பூர்த்தி அடையாத சிறுவர்கள் வாகனத்தை இயக்கியது தெரியவந்தது. இது போன்று அலட்சியமாக உள்ள பெற்றோர், பாதுகாவலர்களுக்கு 3 ஆண்டு சிறை தண்டனை, ரூ.25,000 அபதாரம் விதிக்கப்படும் என ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

News April 25, 2024

சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோவில் தனிச்சிறப்பு!!

image

பெரம்பலூர், சிறுவாச்சூர் என்னும் கிராமத்தில் அமைந்துள்ளது மதுரகாளியம்மன் கோவில். 1000 வருடம் பழமையான இக்கோவிலில் அழகிய வேலைப்பாட்டுடன் கூடிய தங்க தேர் உள்ளது. இக்கோவிலின் சிறப்பாக, நேர்த்திக்கடன் செலுத்துபவர்கள், அரிசியை எடுத்து வந்து அதை கோவிலில் ஊரவைத்து, உரலில் இட்டு இடித்து மாவிளக்கேற்றுவர். இதற்கு உதவ ஆட்களும் உள்ளனர். பல புராணகால கதைகளையும் இக்கோவில் கொண்டுள்ளது.

News April 25, 2024

பெரம்பலூர்: பன்றிகளுக்கு நோய் தடுப்பூசி முகாம்

image

பெரம்பலூர் கால்நடை பராமரிப்பு துறையின் கீழ் 2024-25ம் ஆண்டிற்கான மத்திய அரசு திட்டத்தின் கீழ், கால்நடை நலன் நோய் கட்டுப்பாட்டு திட்டம் (LHDPC) மூலம் பன்றிக்காய்ச்சல் நோய் தடுப்பூசி போடும் பணி நேற்று(24-4-2024) முதல் மே 23 வரை அரசு கால்நடை மருத்துவமனையில் நடைபெறுகிறது. இதற்காக 700 டோஸ் மருந்துகள் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. முகாமினை பன்றி வளர்ப்போர் பயன்படுத்திகொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

News April 25, 2024

பெரம்பலூர் மாவட்டத்திற்கு மஞ்சள் அலர்ட்!

image

பெரம்பலூர் மாவட்டத்தில் இன்று (ஏப்.25) வெப்பம் அதிகரித்து காணப்படும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதிக வெப்ப அலை வீசக்கூடும் என்பதால் பெரம்பலூர் மாவட்டத்திற்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எனவே, பெரம்பலூர் மாவட்ட மக்கள் நண்பகல் 12 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை வெளியில் செல்வதை தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

News April 25, 2024

குன்னம்: புதிய நிர்வாகிகள் பொறுப்பேற்பு

image

குன்னம் வட்டம் மேலமாத்தூர் அருகே வரிசைபட்டி கிராமத்தில் உள்ள ஸ்ரீ வரதராஜ கல்வி குழுமத்தின் புதிய அறங்காவலர் மற்றும் உறுப்பினர்கள் நேற்று(ஏப்ரல் 24)  மாலை பதவியேற்றுக் கொண்டனர். விழாவில் கல்விக் குழுமத்தில் நிர்வாக தலைவராக ராஜாராமன் அறக்கட்டளையின் நிர்வாக அலுவலராக ராம்பிரசாத் ஆகியோர் பொறுப்பேற்றுக் கொண்டனர். முன்னாள் நிர்வாக அலுவலர்கள் அனைத்து ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.

News April 25, 2024

பெரம்பலூர் : கடிதம் அனுப்பும் போராட்டம்

image

மத வெறுப்பு பிரச்சாரத்தை மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி மீது நடவடிக்கை எடுக்க கோரி மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் இன்று கட்சியின் மாவட்ட தலைவர் சுல்தான் மொய்தீன் தலைமையில், பெரம்பலூரில் தலைமை அஞ்சலகத்திலிருந்து தேர்தல் ஆணையத்திற்கு விரைவு கடிதத்தின் மூலம் நூற்றுக்கு மேற்பட்ட கடிதங்களை அனுப்பி வைத்தனர். இந்த கடிதம் அனுப்பும் போராட்டத்தில் கட்சி நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

News April 25, 2024

பாடலூர் சிவன் கோவிலில் திருக்கல்யாண உற்சவம்

image

ஆலத்தூர் வட்டம் பாடாலூரில் ஸ்ரீ காமாட்சி அம்மன் சமேத கைலாசநாதர் கோவிலில் (ஏப்ரல் 23) நேற்று சித்ரா பௌர்ணமி நாளில் சுவாமிக்கு ஆராதனை அபிஷேகங்கள் நடைபெற்று ஸ்ரீ காமாட்சி அம்மன் கைலாசநாதருக்கு திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. கோவில் மண்டபத்தில் சுற்று வட்டார கிராம மக்கள் ஒன்று கூடி சீர்வரிசையுடன் வந்து சாமி தரிசனம் செய்தனர். வழிபட்டனர் பின்னர் அன்னதானம் வழங்கப்பட்டனர்.

News April 25, 2024

பெரம்பலூர் மாவட்டத்திற்கு மஞ்சள் எச்சரிக்கை!

image

பெரம்பலூர் மாவட்டத்தில் இன்று வெப்பம் அதிகரித்து காணப்படும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதிக வெப்ப அலை வீசக்கூடும் என்பதால் பெரம்பலூர் மாவட்டத்திற்கு மஞ்சள் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. எனவே, பெரம்பலூர் மாவட்ட மக்கள் நண்பகல் 12 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை வெளியில் செல்வதை தவிர்க்கமாறு அறுவுறுத்தப்பட்டுள்ளது.

News April 24, 2024

ஆண்களை விட பெண்கள் அதிகம்

image

பெரம்பலூர் மக்களவைத் தொகுதியில் மொத்தம் 14, 46, 352 வாக்காளர்கள் உள்ள நிலையில் 11,19, 881 பேர் மட்டும் வாக்களித்துள்ளனர். இதில் ஆண்களை விட பெண்களே அதிகமாக வாக்களித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதில் 77.43% சதவீதம் வாக்குப்பதிவு பெற்று தமிழகத்தில் 39 தொகுதிகளில் 6 வது இடத்தை பெரம்பலூர் மக்களவை தொகுதி பெற்றுள்ளது என மாவட்ட தேர்தல் அலுவலர் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!