Perambalur

News April 29, 2024

பெரம்பலூர் மாவட்டத்தில் கடும் வெயில்

image

தமிழகத்தில் கோடை வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் உள்ள 19 மாவட்டங்களுக்கு 4 நாட்கள் அதிகமாக வெப்பம் தாக்கக் கூடும் என்பதால் மஞ்சள் அலார்ட் விடுத்துள்ளது. அதன்படி, பெரம்பலூர் மாவட்டத்தில் உச்சி வெயில் நேரங்களில் பொதுமக்கள் யாரும் வெளியே வர வேண்டாம் என மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.

News April 29, 2024

பெரம்பலூர் சிறப்பு வாய்ந்த ரஞ்சன்குடி கோட்டை!

image

பெரம்பலூரில் அமைந்துள்ள கிபி.14ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ரஞ்சன்குடிகோட்டை விஜயநகர பேரரசின் நாயக்க மன்னர்களால் கட்டப்பட்டது. பின் ஆற்காடு நவாப் வழி வந்தவர்களின் ஆக்கிரமிப்பில் இருந்தது. தற்போது இந்திய தொல்பொருள் அளவை கழகத்தின் பராமரிப்பில் உள்ளது. கற்கோட்டையான இதில் 3 அடுக்கு அரண்களும், மாளிகை, குடியுருப்பு கட்டடங்கள், மசூதி, சுரங்க அறைகள் ஆகியவை உள்ளன.

News April 29, 2024

பெரம்பலூர் சிறப்பு வாய்ந்த ரஞ்சன்குடி கோட்டை!

image

பெரம்பலூரில் அமைந்துள்ள கிபி.14ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ரஞ்சன்குடிகோட்டை விஜயநகர பேரரசின் நாயக்க மன்னர்களால் கட்டப்பட்டது. பின் ஆற்காடு நவாப் வழி வந்தவர்களின் ஆக்கிரமிப்பில் இருந்தது. தற்போது இந்திய தொல்பொருள் அளவை கழகத்தின் பராமரிப்பில் உள்ளது. கற்கோட்டையான இதில் 3 அடுக்கு அரண்களும், மாளிகை, குடியுருப்பு கட்டடங்கள், மசூதி, சுரங்க அறைகள் ஆகியவை உள்ளன.

News April 29, 2024

பெரம்பலூர் மாவட்ட நீதித்துறையில் வேலை!

image

பெரம்பலூர் மாவட்ட நீதித்துறையில் 7 காலியிடங்கள் உள்ளன. கல்வித் தகுதி: 10ஆம் வகுப்பு தேர்ச்சி. வயது வரம்பு: ஜூலை 1ஆம் தேதி 2024 அன்று 32 வயதுக்குள் இருக்க வேண்டும். பணி இடங்கள் தொடர்பான கூடுதல் விவரங்களை https://www.mhc.tn.gov.in/recruitment/notification_dist தளத்தின் மூலம் அறிந்து கொள்ளலாம். இதற்கான விண்ணப்பங்களை மே 27ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

News April 29, 2024

வேப்பந்தட்டை அருகே பைக் எரிப்பு

image

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை வட்டம் மாவிலங்கை கிராமத்தில் சின்னச்சாமி என்பவரின் குடும்பத்தினர் விவசாய தோட்டத்தில் குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில், நேற்று(ஏப்.28) காரில் வந்த மர்ம நபர்கள் வீட்டின் முன்பு நின்ற பைக்கை பெட்ரோல் ஊற்றி தீ வைத்து எரித்துச் சென்றனர். சம்பவம் குறித்த புகாரில் பேரில் கை களத்தூர் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை செய்து வருகின்றனர்.

News April 28, 2024

மாற்றுத்திறனாளி வீரர் அசத்தல்

image

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி வட்டம் திருக்களம்பூர், அண்ணா நகர் கிராமம் பூச்சொரிதல் திருவிழா முன்னிட்டு திருக்களம்பூர் விளையாட்டு மைதானத்தில் இன்று மது ஒழிப்பு விழிப்புணர்வுக்கான 5 கி.மி தொலைவுக்கான மினி மாரத்தான் போட்டி நடைபெற்றது.
இப்போட்டியில் பெரம்பலூர் வட்டம் மேலப்புலியூர் மாற்றுதிறனாளி நபர் எஸ்‌‌.கலைச்செல்வன் பங்கேற்று தமது திறமையை வெளிப்படுத்தினார்

News April 28, 2024

பெரம்பலூர்: சிறப்பு சலுகைகள்

image

பெரம்பலூர் நகராட்சியில் தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் 2023 விதி 268(2) இன் படி கால கெடுவுக்குள் வரி செலுத்துவோர் 2024-25 ஆண்டிற்கான அரையாண்டு சொத்து வரியை (ஏப் 30 )தேதி (ம) இரண்டாவது அரையாண்டு சொத்து வரியை (அக் 31) தேதிக்குள் கணினி வழியில் செலுத்துவோருக்கு ஊக்கத்தொகை 5 % சலுகை பொதுமக்களுக்கு வழங்கப்படும் என பெரம்பலூர் நகராட்சி ஆணையர் ராமர் தெரிவித்துள்ளார்.

News April 28, 2024

பெரம்பலூரில் தர்பூசணி விற்பனை அமோகம்

image

பெரம்பலூர் மாவட்டத்தில் தற்பொழுது மார்ச் மாதத்தில் இருந்து வரலாறு 100 % மேல் வெப்பநிலை அதிகரித்து வருவதால் இங்கு நகர்ப்புறம் புதிய பேருந்து நிலையம் பகுதிகளில் சாலையோரம் மற்றும் சிறு வியாபாரிகள் தர்பூசணி பழங்களை அண்டை மாவட்டத்தில் இருந்து கொள்முதல் செய்து விற்பனைக்காக குவித்துள்ளனர். பொதுமக்களும் வெயிலை சமாளிக்க தர்பூசணி போன்ற பழங்களை அதிகமாக வாங்கிச் செல்வதால் விலை உச்சத்தில் உள்ளது.

News April 27, 2024

விளையாட்டு வீரர்களுக்கு பயிற்சி

image

பெரம்பலூர் மாவட்டத்தில் விளையாட்டு வீரர்களுக்கு கோடைகால சிறப்பு பயிற்சி வரும் ஏப்ரல் 29/4/2024 முதல் 13/5/2024 வரை நடைபெறவுள்ளது. இதற்கு ஆர்வமுள்ள பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்கள் 18-வயதிற்கு கீழ் உள்ள அனைவரும் கலந்து கொள்ளலாம். விளையாட்டு அரங்கில் நுழைவு கட்டணமாக ரூ:200 செலுத்தி பதிவு செய்து கொள்ளலாம். மேலும், விபரங்களுக்கு 7401703516 என்ற எண்ணை தொடர்பு கொள்ள மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

News April 27, 2024

பெரம்பலூர்: தந்தையை கொன்ற மகன் – எஸ்ஐ மீது நடவடிக்கை

image

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை பகுதியை சேர்ந்தவர் குழந்தைவேலு. இவரது மகன் சக்திவேல் கடந்த சில நாட்களுக்கு முன்பு, சொத்து தகராறில் தந்தை என பாராமல் குழந்தைவேலுவை அடித்துக்கொன்றார் . இது குறித்த வீடியோ வெளியானதை தொடர்ந்து வழக்கு போடாமல் காலம் கடத்தியதாக கைகளத்தூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் பழனிச்சாமியை, ஆயுதப்படைக்கு மாற்றம் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சியாமளாதேவி உத்தரவிட்டுள்ளார்.

error: Content is protected !!