Perambalur

News May 17, 2024

அரசு பேருந்து நடத்துநர் கையை கடித்த விசிக பிரமுகர்

image

வேப்பந்தட்டை தாலுகா, அரும்பாவூர் பேருந்து நிலையத்தில் 2 பேருந்துகள் பயணிகளை ஏற்றி இறக்கியது. அப்போது பேருந்துக்கு பின்னால் டூவீலரில் வந்த விசிக பிரமுகர் ரசித் அலி வழிவிடுமாறு கூறவே, அரசு பேருந்து நடத்துநர் ராஜேந்திரனுக்கும், ரசித்துக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் நடத்துநர் கையை ரசித் கடித்துள்ளார். நடத்துநர் சிகிச்சை பெறும் நிலையில் சம்பவம் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

News May 17, 2024

பெரம்பலூர்: மழைக்கு வாய்ப்பு!

image

பெரம்பலூர் மாவட்டத்தில் இன்று (மே.17) மாலை 4 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதனால் பெரம்பலூரில் லேசான இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழைப்பொழிவு பதிவாககூடும் எனத் தெரிவித்துள்ளது. இன்று காலை முதலே தமிழகத்தின் பல இடங்களில் மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.

News May 16, 2024

பெரம்பலூர்: இன்று முதல் விண்ணப்பிக்க அறிவிப்பு

image

பெரம்பலூர் மாவட்டத்தில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தோல்வியடைந்த மற்றும் தேர்வுக்கு வருகை புரியாத மாணவர்களுக்கு துணை தேர்வு வரும் 2024 ஜூன், ஜூலை மாதங்களில் நடைபெறும் தேர்விற்கு (மே.16) இன்று முதல் ஜூலை 1 வரை காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரை மாவட்ட கல்வி வாரியாக அமைக்கப்பட்டுள்ள சேவை மையங்களில் விண்ணப்பித்துக் கொள்ளலாம் என பெரம்பலூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.

News May 16, 2024

தந்தையை தாக்கிய வழக்கில் மகனின் ஜாமின் மனு தள்ளுபடி

image

பெரம்பலூர், கிருஷ்ணாபுரத்தில் ரைஸ் மில் அதிபர் குழந்தைவேல், அவரது மகன் சக்திவேல் இடையேசொத்து தகராறு இருந்தது. இதனால் தந்தையை, மகன் தாக்கியுள்ளார்.இத்தாக்குதல் வீடியோ சமூகவலை தளங்களில் வெளியாகி பரபரப்பு ஏற்பட்டது. இதனால்வி.களத்தூர் போலீஸார் சக்திவேலை சிறையில் அடைத்தனர். ஜாமின் கேட்டு சக்திவேல் நேற்று மனு தாக்கல் செய்தார் மனுவை தள்ளுபடி செய்து பெரம்பலூர் நீதி மன்றம் உத்தரவிட்டது.

News May 16, 2024

பெரம்பலூர் மழைக்கு வாய்ப்பு

image

பெரம்பலூர் மாவட்டத்தில் இன்று (மே.16) நண்பகல் 1 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதனால் லேசான இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழைப்பொழிவு பதிவாககூடும் எனத் தெரிவித்துள்ளது.

News May 16, 2024

பெரம்பலூரின் அழகிய கோரையாறு அருவி!

image

பெரம்பலூர், வேப்பந்தட்டை அருகில் உள்ள பச்சைமலை மீது அமைந்துள்ளது கோரையாறு அருவி. இந்த நீர்வீழ்ச்சியில், மலை உச்சியிலிருந்து தண்ணீர் கொட்டும் இடத்தில் 60 அடி ஆழம் கொண்ட நீர் தேக்கமும் உள்ளது. சிறிய அளவு மழை பெய்தாலும் இந்த அருவியில் நீர்கொட்டும். குறிப்பாக அக்டோபர் இறுதியிலிருந்து இதன் சீசன் ஆரம்பித்துவிடும். இந்த மழைநீர் கோரையாறு, தொண்டமாந்துறை வழியாக கல்லாற்றில் கலக்கிறது.

News May 16, 2024

பெரம்பலூரில் மழை பெய்யும்

image

தமிழக பகுதிகளில் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்குச் சுழற்சி காரணமாக பெரம்பலூர் உள்ளிட்ட பல மாவட்டங்களில் இன்று காலை 10 மணி வரை இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. சில நாட்களாக வாட்டி வந்த வெயில் காரணமாக, இம்மழையால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

News May 16, 2024

அரசு ஐடிஐ-யில் சேர விண்ணப்பிக்கலாம்

image

பெரம்பலூர் மாவட்டத்தில் வேலைவாய்ப்பு (ம) பயிற்சித் துறையின் கீழ், பெரம்பலூர், ஆலத்தூர், குன்னம் அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் (ம) 3-தனியார் தொழிற்பயிற்சி நிலையங்கள் இயங்கி வருகின்றன. இவற்றில் தற்போது 2024-25ம் கல்வியாண்டிற்கான பயிற்சியாளர் சேர்க்கை நடைபெறுகிறது. இதற்கு <>-1<<>> என்ற இணையத்தில் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் கற்பகம் தகவல் தெரிவித்துள்ளார்.

News May 15, 2024

அரசு ஐடிஐ-யில் சேர விண்ணப்பிக்கலாம்

image

பெரம்பலூர் மாவட்டத்தில் வேலைவாய்ப்பு (ம) பயிற்சித் துறையின் கீழ், பெரம்பலூர், ஆலத்தூர், குன்னம் அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் (ம) 3-தனியார் தொழிற்பயிற்சி நிலையங்கள் இயங்கி வருகின்றன. இவற்றில் தற்போது 2024-25ம் கல்வியாண்டிற்கான பயிற்சியாளர் சேர்க்கை நடைபெறுகிறது. இதற்கு <>https://skilltraining.tn.gov.in/<<>> என்ற இணையத்தில் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் கற்பகம் தகவல் தெரிவித்துள்ளார்.

News May 15, 2024

சிறந்த தொழில் முனைவோர் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

image

பெரம்பலூர் மாவட்டத்தில் 2023 2024ம் ஆண்டில் சிறப்பாக செயல்பட்ட குறு சிறு (ம) நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு சிறந்த தொழில் முனைவோர் விருது வழங்கப்பட உள்ளதால் விருப்பமுள்ள தொழில் நிறுவனங்கள் awards.fametn.com என்ற இணையத்தில் மே 20-க்கும் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு பெரம்பலூர் மாவட்ட தொழில் மைய பொது மேலாளரை அணுகலாம் என ஆட்சியர் கற்பகம் தகவல் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!