Perambalur

News March 25, 2024

வேப்பந்தட்டையில் தேர்தல் விளம்பரம்

image

வேப்பந்தட்டை வட்டார பகுதிகளில் பொதுமக்களிடம் 2024 ஏப்ரல் 19 அன்று நடைபெற இருக்கும் மக்களவை பொது தேர்தலில் அனைவரும் தவறாமல் வாக்களிக்க வேண்டும் என்றும், தேர்தல் தொடர்பான புகார்கள் அளிக்கவும் மற்றும் உதவிகள் பெறவும் விளம்பர நோட்டீசை வேப்பந்தட்டை வட்டாட்சியர் மாயகிருஷ்ணன் மற்றும் தேர்தல் துணை வட்டாட்சியர் பிரேமராணி இன்று பொதுமக்களிடம் வழங்கினர்.

News March 25, 2024

தேர்தல் திருவிழா : வேட்பு மனு தாக்கல்

image

மக்களவை தேர்தலையொட்டி, வேட்புமனு தாக்கல் மார்ச் 20ல் தொடங்கிய நிலையில் மார்ச் 27ம் தேதி நிறைவுபெறுகிறது. இந்நிலையில், இன்று (மார்ச் 25) திமுக, அதிமுக, பாஜக, தேமுதிக, காங். உள்ளிட்ட முக்கிய கட்சி வேட்பாளர்கள் 40 தொகுதிகளிலும் தங்களது வேட்புமனுக்களை தாக்கல் செய்வர் என எதிர்பார்க்கப்படுகிறது. அவ்வாறு தாக்கல் செய்யும்போது வேட்பாளருடன் 5 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

News March 24, 2024

பெரம்பலூர் : பங்குனி உத்திர திருத்தேரோட்டம்

image

பெரம்பலூர் ஸ்ரீ மரகதவல்லி தாயார் சமேத ஸ்ரீமதனகோபாலசாமி திருக்கோவிலில் பங்குனி உத்திரப் பெருந்திருவிழா முன்னிட்டு கடந்த 16ம் தேதி மங்கள வாத்தியம் முழங்க கொடியேற்றப்பட்டது.
இதனை தொடர்ந்து விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருத்தேரோட்டம் இன்று நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்து சுவாமி தரிசனம் செய்தனர்.

News March 24, 2024

திமுக வேட்பாளர் குறித்து ஆலோசனை கூட்டம்

image

தி.மு.க. வேட்பாளர் அருண் நேரு வெற்றி குறித்து,
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம், பெரம்பலூர் மாவட்ட திமுக அலுவலகத்தில் திமுக துணைப் பொதுச் செயலாளர் ஆ.இராசா தலைமையில் மார்ச் 23ம் தேதி மாலை 5 மணியளவில் நடைபெற்றது.

News March 24, 2024

நாம் தமிழர் வேட்பாளர் அறிவிப்பு

image

நாம் தமிழர் கட்சி சார்பில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களை அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிமுகம் செய்து வைத்தார். அதன்படி, பெரம்பலூரில் இரா. தேன்மொழி போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு மைக் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

News March 24, 2024

பெரம்பலூர் : ரூ. 61 ஆயிரம் பறிமுதல்

image

பெரம்பலூர் வட்டம், குரும்பலூரில் உள்ள பெரம்பலூர் அரசு கலை அறிவியல் கல்லூரி அருகில் தேர்தல் கண்காணிப்பு குழுவினர் இன்று காலை வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தபோது, ரூ 61,000 பணத்தை உரிய ஆவணங்கள் ஏதுமில்லாமல் எடுத்து வந்த கடலூர் மாவட்டத்தை சேர்ந்த செந்தில் ராஜா என்பவரிடமிருந்து பணம் பறிமுதல் செய்தனர்..

News March 23, 2024

சார் ஆட்சியரிடம் வாழ்த்துகள் பெற்ற வீரர்கள்

image

தேனியில் நடைபெற்ற மாநில அளவிலான பாராலிம்பிக் நீச்சல் போட்டியில் பெரம்பலூர் மாற்றுத்திறனாளி வீரர்கள் மேலப்புலியூர் கலைச்செல்வன், மங்களமேடு அம்பிகாபதி, ஆதனூர் ஜீவா, புது அம்மாபாளையம் ரம்யா ஆகிய 4 பேர் 11 தங்கம், 1 வெள்ளி என 12 பதக்கங்களை பெற்று சாதனைப் படைத்தனர். நேற்று பெரம்பலூர் சார் ஆட்சியர் கோகுலிடம் பதக்கங்கள், சான்றிதழை காண்பித்து வாழ்த்துகளையும். பாராட்டுகளையும் பெற்றனர்.

News March 23, 2024

பெரம்பலூரில் பங்குனி உத்திர திருவிழா

image

பெரம்பலூர் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ளஸ்ரீ மரகதவல்லி தாயார் சமேத ஸ்ரீமதனகோபால சுவாமி பெருமாள் கோவிலில் பங்குனி உத்திர பெருந்திருவிழாவினை முன்னிட்டு, விழாவின் முக்கிய நிகழ்வான 7ம்நாள் திருக்கல்யாணம் நேற்று மாலை 6 மணி அளவில் மங்கள வாத்திய முழங்க பக்தர்கள் கோவிந்தா முழக்கமிட திருக்கல்யாணம் வெகு விமர்சியாக நடைபெற்றது இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

News March 22, 2024

பெரம்பலூர்: கிராம சபை கூட்டம் ரத்து

image

ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி-26 குடியரசு தினம், மார்ச் -22 உலக தண்ணீர் தினம், மே-1 தொழிலாளர் தினம், ஆகஸ்ட் -15 சுதந்திர தினம், அக்டோபர் -2 காந்தி ஜெயந்தி, நவம்பர் -1 உள்ளாட்சி தினம் ஆகிய 6 தினங்களில் கிராம ஊராட்சியில் கிராம சபை கூட்டம் நடைபெறுவது வழக்கம். மார்ச் -22 இன்று நடைபெற வேண்டிய கிராம சபை கூட்டம் தேர்தல் நடத்தை விதி முறைகள் காரணமாகவும், தேர்தல் பணி காரணமாக பெரம்பலூர் மாவட்டத்தில் நடைபெறவில்லை.

News March 22, 2024

பெரம்பலூர்: வேட்பு மனு வாங்கி சென்ற 23 பேர்!

image

தமிழ்நாட்டில் 18வது மக்களவை தேர்தல் அடுத்த மாதம் ஏப்ரல் 19ம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில் கடந்த 20ம் தேதி பெரம்பலூர் மக்களவை தொகுதியில் வேட்பு மனு தாக்கல் தொடங்கியதில் இருந்து, நேற்று(மார்ச் 21) வரை யாரும் மனு தாக்கல் செய்யவில்லை. ஆனால் கடந்த 2 நாட்களில் 23 பேர் வேட்பு மனு வாங்கி சென்றுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

error: Content is protected !!