Perambalur

News April 14, 2024

சீமான் தீவிர பிரச்சாரம்

image

பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் தேன்மொழியை ஆதரித்து கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட குளித்தலை, துறையூர், நம்பர்1 டோல்கேட் ஆகிய பகுதிகளில் (மைக்) ஒலிவாங்கி சின்னத்திற்கு தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார். இதில் கட்சியின் பெரம்பலூர் நிர்வாகிகள் தொண்டர்களுடன் கலந்து கொண்டனர். 

News April 13, 2024

பெரம்பலூர் மாவட்டத்தில் மழை

image

தென் தமிழகபகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி அடுத்த 3 மணி நேரத்தில் (7மணி வரை) பெரம்பலூர் மாவட்டத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

News April 13, 2024

பெரம்பலூரில் இன்று முக்கிய தலைவர்கள் பிரச்சாரம்

image

பெரம்பலூர் மக்களவைத் தொகுதியில் திமுக, அதிமுக, ஐஜேகே, நாம் தமிழர் உட்பட 23 வேட்பாளர்கள் களம் காண்கின்றனர். இந்நிலையில் இன்று(13.4.24) அதிமுக வேட்பாளர் சந்திரமோகனை ஆதரித்து எடப்பாடி பழனிச்சாமியும், நாம் தமிழர் வேட்பாளர் தேன்மொழியை ஆதரித்து சீமான் நெ.1 டோல்கேட் பகுதியில் பிரச்சாரம் மேற்கொள்ளவுள்ளனர். இதனால், தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.

News April 12, 2024

கலெக்டர் தலைமையில் உறுதிமொழி ஏற்பு

image

பெரம்பலூர்: அம்பேத்கர் பிறந்தநாளை முன்னிட்டு சமத்துவ நாள் உறுதிமொழியினை கலெக்டர் க.கற்பகம் தலைமையில் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் அரசுத்துறை அலுவலர்கள் எடுத்துக்கொண்டனர். இந்நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் மு.வடிவேல்பிரபு, மாவட்ட ஆட்சியர் அலுவலக மேலாளர் ந.சிவா உட்பட பலர் உடனிருந்தனர்.

News April 12, 2024

அடுத்த 3 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்பு

image

பெரம்பலூர் மாவட்டத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு லேசானது முதல் மிதமானது வரை மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்னிந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக மணிக்கு 30-40 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News April 12, 2024

பெரம்பலூர் மாவட்டத்திற்கு மழை

image

தமிழகத்தில் அடுத்த சில நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, பெரம்பலூர் மாவட்டத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது. கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வந்த நிலையில், தற்போது மழை பெய்ய வாய்ப்புள்ளதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

News April 12, 2024

ஒரே நாளில் சூடுபிடிக்கும் பிரச்சாரம்

image

பெரம்பலூர் மக்களவைத் தொகுதியில் திமுக, அதிமுக, ஐஜேகே, நாம் தமிழர் உட்பட 23 வேட்பாளர்கள் களம் காண்கின்றனர். இந்நிலையில் நாளை (13.4.24) பரிவேந்தரை ஆதரித்து பிரதமர் மோடியும், சந்திரமோகனை ஆதரித்து எடப்பாடி பழனிச்சாமியும், தேன்மொழியை ஆதரித்து சீமான் நெ.1 டோல்கேட் பகுதியில் பிரச்சாரம் மேற்கொள்ளவுள்ளனர். 3 முக்கியத் தலைவர்கள் ஒரே நாளில் பிரச்சாரம் மேற்கொள்ளவுள்ளதால், தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.

News April 12, 2024

தபால் வாக்கு செலுத்தும் மையத்தில் ஆய்வு

image

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செய்தி மக்கள் தொடர்பு அலுவலகத்தின் பின்புறம் உள்ள கூட்ட அரங்கில் தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள அலுவலர்கள் தபால் வாக்கு செலுத்துவதற்காக பிரத்தியேகமான தபால் வாக்கு செலுத்தும் சேவை மையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மையத்தை மாவட்ட ஆட்சித்தலைவர், மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் கற்பகம் இன்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

News April 11, 2024

அதிமுகவினர் தீவிர வாக்கு சேகரிப்பு 

image

பெரம்பலூர் குன்னம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வேப்பூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட கீழப்புலியூர் சிறுகுடல், ஆகிய பகுதிகளில் இன்று சிதம்பரம் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் சந்திரகாசன் தேர்தல் பிரச்சாரத்தை ஈடுபட்டார். உடன் பெரம்பலூர் மாவட்ட செயலாளர் முன்னாள் அரியலூர் சட்டமன்ற உறுப்பினர் (ம) அரசு தலைமை கொறடா தாமரை ராஜேந்திரன் கழக நிர்வாகிகளுடன் பொது மக்களிடம் வாக்கு கேட்டு பிரச்சாரம் செய்தனர். 

News April 11, 2024

வெயில் தாக்கம் குறையும்

image

தமிழகத்தில் பல மாவட்டங்களில் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி வெயில் பாதிவாகியுள்ளது. இந்நிலையில் அடுத்த வாரத்தில் சென்னையில் இயல்பான (அ) அதற்குக் கீழான வெப்ப நிலையே பதிவாகும் என தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். மேலும், 40 முதல் 41 டிகிரி செல்சியஸ் பதிவான இடத்தில் 37, 39 டிகிரி செல்சியஸாக குறையக்கூடும் என தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!