India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பெரம்பலூர் மாவட்டத்தில் 11 மற்றும் 12 ஆம் வகுப்பு பயிலும் மாணவ-மாணவிகளுக்கு ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் சார்பில், வரும் 29ஆம் தேதி சனிக்கிழமை காலை 9.30 மணி முதல் மாலை 4 மணி வரை சீனிவாசன் பல்கலைக்கழகத்தின், பொறியியல் கல்லூரியில் “என் கல்லூரிக் கனவு” ஆலோசனை முகாம் நடைபெறவுள்ளது என மாவட்டக் கலெக்டர் கிரேஸ் பச்சாவ் தெரிவித்தார். இதனை அனைத்து மாணவ-மாணவிகளுக்கும் SHARE பண்ணுங்க..
கோடைகாலத்தில் பொதுமக்கள் வெயிலிலிருந்து தங்களை பாதுகாத்து கொள்ள பொது சுகாதாரம் (ம) நோய் தடுப்பு மருந்து துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள பாதுகாப்பு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றிட வேண்டும் கோடை வெயிலினால் அதிக வியர்வை வெளியேறும் பொழுது உடலில் நீர் சத்து பற்றாக்குறை ஏற்படுகிறது. பொதுமக்கள் அதிக அளவில் மோர், இளநீர், உப்பு கலந்த எலுமிச்சை சாறு, ORS கரைசல் ஆகியவற்றை பருக வேண்டும் என கலெக்டர் தகவல்.
பெரம்பலூர் மாவட்டம், கொளத்தூர் கிராமத்தை சேர்ந்த சிறுமியை கடத்தி சென்று பாலியல் தொந்தரவு செய்ததாக மருவத்தூர் காவல் நிலையத்தில் கடந்த 2019ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட போக்சோ வழக்கில் மணிகண்டன் (29) என்பவருக்கு 30வருடம் கடுங்காவல் சிறை தண்டனை மற்றும் ரூ.1 லட்சம் அபராதம் விதித்து பெரம்பலூர் மாவட்ட மகிளா நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
மாற்றுத்திறனாளி குழந்தைகளை திருச்சி மாவட்டம் பறவைகள் பூங்கா, அண்ணா அறிவியல் கோளரங்கம், வண்ணத்துப்பூச்சி பூங்கா உள்ளிட்ட பகுதிகளுக்கு ஒரு நாள் சுற்றுலாவிற்காக நேற்று (24.3.2025) பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து மாவட்ட ஆட்சியர் வழி அனுப்பி வைத்தார். மாற்றுத் திறனாளிகளுக்கான பல்வேறு நிகழ்ச்சிகளை முன்னெடுத்து மாவட்ட ஆட்சியர் கிரேஸ் செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
பெரம்பலூரில் (மார்ச்.25) உரிய தேதிகளில் ஊதியம் வழங்க ஆணை பிறப்பிக்கக் கோரி தமிழ்நாடு டெங்கு கொசுப்புழு ஒழிப்பு முன்களப் பணியாளர்கள் கலெக்டரிடம் கோரிக்கை விடுத்தனர். பெரம்பலூர் மாவட்டக் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில், நேற்று திங்கட்கிழமை காலையில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், மாவட்டக் கலெக்டர் கிரேஸ் பச்சாவ் தலைமையில் நடைபெற்றது.
பெரம்பலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டல் மையத்தில் டிஎன்பிஎஸ்சி குரூப் 1 பயிற்சி வகுப்புகள் 26.3.2025 முதல் நடைபெற உள்ளது. மேலும் விவரங்களுக்கு www.tnpsc.gov.in இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். பெரம்பலூர் மாவட்டத்தை சார்ந்த போட்டித் தேர்வு ஆர்வலர்கள் நேரில் அல்லது 9499055913 என்ற மாவட்ட வேலை வாய்ப்பு மைய தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு பயன்பெறலாம் என்று ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
பெரம்பலூர் மாவட்டத்தில் குற்றம் நடைபெறாமல் தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாவட்ட எஸ்பி ஆதர்ஷ் பஸேரா உத்தரவின்படி ஏடிஎஸ்பி மதியழகன் தலைமையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு பெரம்பலூர் மாவட்டத்தில் இன்று வழக்கமான குற்றவாளிகள் மற்றும் ரவுடிகள் வீடுகளில் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி அதிரடி சோதனையில் செய்யப்பட்டது.
தமிழ்நாட்டில் தற்போது 25 மாநகராட்சிகள் இருக்கின்றன. அதோடு, மேலும் 2 மாநகராட்சிகளை உருவாக்க இருப்பதாக, அமைச்சர் கே.என்.நேரு சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் இன்று பேசிய அமைச்சர் கே என் நேரு பெரம்பலூர் நகராட்சியை, மாநகராட்சியாக தரம் உயர்த்தப்படவுள்ளதாக தெரிவித்தார். மேலும், நகராட்சிகளின் எண்ணிக்கையையும் உயர்த்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் கூறினார்.
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியரகத்தில் வேளாண்மை உழவர் நலத்துறையின் சார்பில், மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 28.03.2025 அன்று காலை 10.30 மணியளவில் நடைபெற உள்ளது. கூட்டத்தில் வேளாண்மை சம்மந்தமான நீர்ப்பாசனம், வேளாண்மை கடன் உதவிகள், இயந்திரங்கள், விவசாயிகள் மேம்பாட்டிற்கான நலத்திட்டங்கள் பற்றிய முறையீடுகள் பற்றி விவாதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் மாவட்ட ஆட்சியர் கிரேஸ் பச்சாவ் தலைமையில் இன்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இன்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 416 மனுக்கள் பெறப்பட்டன. இக்கூட்டத்தில் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
Sorry, no posts matched your criteria.