Perambalur

News April 25, 2024

பாடலூர் சிவன் கோவிலில் திருக்கல்யாண உற்சவம்

image

ஆலத்தூர் வட்டம் பாடாலூரில் ஸ்ரீ காமாட்சி அம்மன் சமேத கைலாசநாதர் கோவிலில் (ஏப்ரல் 23) நேற்று சித்ரா பௌர்ணமி நாளில் சுவாமிக்கு ஆராதனை அபிஷேகங்கள் நடைபெற்று ஸ்ரீ காமாட்சி அம்மன் கைலாசநாதருக்கு திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. கோவில் மண்டபத்தில் சுற்று வட்டார கிராம மக்கள் ஒன்று கூடி சீர்வரிசையுடன் வந்து சாமி தரிசனம் செய்தனர். வழிபட்டனர் பின்னர் அன்னதானம் வழங்கப்பட்டனர்.

News April 25, 2024

பெரம்பலூர் மாவட்டத்திற்கு மஞ்சள் எச்சரிக்கை!

image

பெரம்பலூர் மாவட்டத்தில் இன்று வெப்பம் அதிகரித்து காணப்படும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதிக வெப்ப அலை வீசக்கூடும் என்பதால் பெரம்பலூர் மாவட்டத்திற்கு மஞ்சள் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. எனவே, பெரம்பலூர் மாவட்ட மக்கள் நண்பகல் 12 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை வெளியில் செல்வதை தவிர்க்கமாறு அறுவுறுத்தப்பட்டுள்ளது.

News April 24, 2024

ஆண்களை விட பெண்கள் அதிகம்

image

பெரம்பலூர் மக்களவைத் தொகுதியில் மொத்தம் 14, 46, 352 வாக்காளர்கள் உள்ள நிலையில் 11,19, 881 பேர் மட்டும் வாக்களித்துள்ளனர். இதில் ஆண்களை விட பெண்களே அதிகமாக வாக்களித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதில் 77.43% சதவீதம் வாக்குப்பதிவு பெற்று தமிழகத்தில் 39 தொகுதிகளில் 6 வது இடத்தை பெரம்பலூர் மக்களவை தொகுதி பெற்றுள்ளது என மாவட்ட தேர்தல் அலுவலர் தெரிவித்துள்ளார்.

News April 24, 2024

பெரம்பலூர் அருகே நல்லேறு திருவிழா!

image

பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் வட்டத்திற்கு உட்பட்ட நாரணமங்கலம் கிராமத்தில், ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் நடைபெறும் நல்லேறு திருவிழா இன்று(ஏப்.23) நடைபெற்றது. சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு வரும் ஆண்டில் நல்ல மழை பெய்து, விவசாயம் செழிக்க இயற்கையை வணங்கி வளர்ப்பு காளைகளுடன் பொன் ஏர் பூட்டி உழவுப் பணியை பாரம்பரிய முறைப்படி மேற்கொண்டனர். இதில் திரளாக கலந்து கொண்டாடினர்.

News April 24, 2024

பெரம்பலூர்: கல்லூரி சாலை – 2024!

image

பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று(ஏப்.22) காலை 10 மணி முதல் 5 மணி வரை உதிரம் நண்பர்கள் குழு, மாணவர்கள் சக்தி இயக்கம், திருச்சி சேவை கரங்கள் அறக்கட்டளை, தமிழ்நாடு சமூக ஆர்வலர்கள் இணைந்து நடத்தும் கல்லூரி சாலை 2024 நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் 12ம் வகுப்பு முடித்த மாணவ மாணவிகள் உயர்கல்வி படிப்பதற்கு வழிகாட்டு நிகழ்ச்சி நடைபெற்றது.

News April 22, 2024

வேப்பந்தட்டை: மதுரை வீரன் சுவாமி கும்பாபிஷேகம்

image

வேப்பந்தட்டை வட்டம் பூலாம்பாடியில் நேற்று(ஏப்.21) புதிதாக கட்டப்பட்ட மதுரை வீரன் சுவாமி திருக்கோயிலில் சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் ஓதி சிறப்பு பூஜைகளுடன் கோபுரத்தில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளராக மலேசிய தொழிலதிபர் பிரகதீஷ் குமார் கலந்து கொண்டனர். சுற்றுவட்டார கிராமத்தில் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு வழிபட்டனர்.

News April 21, 2024

பெரம்பலூர் : பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு பூஜை

image

பெரம்பலூர் ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத ஸ்ரீபிரம்மபுரீஸ்வரர் திருக்கோவிலில் இன்று பிரதோஷத்தை முன்னிட்டு ஸ்ரீநந்திகேஸ்வரர் மற்றும் ஈசனுக்கு பால், தயிர், சந்தனம், பழ வகைகள், வாசனை திரவியுடன் சிறப்பு அபிஷேகம் முடித்து, மகா தீபாராதனை காண்பித்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. பின்னர் ரிஷப வாகனத்தில் ஈசன் எழுந்தருளி உட்பிரகாரம் மூன்று முறை வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

News April 21, 2024

ஆலத்தூர் அருகே மது விற்றவர் கைது

image

பெரம்பலூர் மாவட்டம் பாடலூர் அருகே காரை பிரிவு ரோடு அருகில் நேற்று மாலை(ஏப்.20), கள்ளத்தனமாக விற்பனை செய்வதற்காக வைத்திருந்த 92 மது பாட்டில்களை போலீசார் கண்டுபிடித்தனர். இது தொடர்பாக இருர் கிராமத்தை சேர்ந்த கணேசன் என்பவரை பிடித்து விசாரித்து வருகின்றனர். மது பாட்டில்களையும் பறிமுதல் செய்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

News April 20, 2024

பெரம்பலூர்: டாஸ்மாக் விடுமுறை அறிவிப்பு

image

பெரம்பலூர் மாவட்டத்தில் இயங்கி வரும் தமிழ்நாடு வாணிப கழகத்தின்(டாஸ்மாக்) அனைத்து அரசு மதுபான சில்லரை விற்பனை கடைகள் மற்றும் விற்பனை கடைகளுடன் இணைந்த மதுக்கூடங்கள் மற்றும் FL3 உரிமதலங்கள் ஆகிய அனைத்திற்கும் மகாவீரர் ஜெயந்தி (21.04.2024) (ஞாயிற்று கிழமை) மற்றும் மே தினம் (01.05.2024) (புதன் கிழமை) ஆகியவற்றை முன்னிட்டு மேற்படி இரண்டு நாட்களுக்கு உலர்தினமாக (DRY DAY) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

News April 20, 2024

பெரம்பலூர்: வாக்குப் பெட்டிகள் அறையில் சீல்!

image

பெரம்பலூர் மக்களவைத் தொகுதிக்கான வாக்கு எண்ணும் மையமான, ஆதவ் பப்ளிக் பள்ளியில் சட்டமன்ற தொகுதி வாரியாக அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறைகளில், அந்தந்த சட்டமன்ற தொகுதிகளில் இருந்து வரப்பெற்ற மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டன. தொடர்ந்து இன்று தேர்தல் நடத்தும் அலுவலர் கற்பகம் ஆய்வு செய்து, அந்த அறை சீல் வைக்கப்பட்டது.

error: Content is protected !!