India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சிறுமத்தூர் கிராமத்தைச் விக்ரமாதித்தன் தனியார் நிதி நிறுவனம் மூலம் 15.10.2020 அன்று 5,000 முன்பணம் செலுத்தி 12,900 கடன் பெற்று செல்போன் வாங்கி உள்ளார். மாதம் 1,456 வீதம் தனது வங்கி கணக்கில் இருந்து 7மாதம் கடனை திருப்பி செலுத்திய நிலையில், 14,770 கூடுதலாக பணம் பிடிக்கப்பட்டது. மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு ரூ.50,000+10,000 நஷ்ட ஈடு வழங்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
பெரம்பலூர் மின் கோட்டம், பேரளி துணை மின் நிலையத்தில் ஜூன் 6-ம் தேதி நாளை காலை 9:30 மணி முதல் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள உள்ளதால் பேரளி, ஆசூர், சித்தளி, பீல்வாடி, ஒதியம், சிறுகுடல், அருமடல், கீழப்புலியூர், எஸ் குடிக்காடு, கல்பாடி க.எறையூர், உள்ளிட்ட பகுதிகளில் பராமரிப்பு பணிகள் நிறைவடையும் வரை மின்விநியோகம் இருக்காது என மின்வாரிய உதவி செயற்பொறியாளர் முத்தமிழ்செல்வன் இன்று தகவல் தெரிவித்துள்ளார்.
பெரம்பலூர் மாவட்டத்தில் இன்று மாலை 5 மணி வரை இடி மற்றும் மின்னலுடன் கூடிய மிதமான மழை வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. கோடை முடிந்தும் கடந்த சில நாட்களாக தமிழ்நாட்டில் வெப்பம் வாட்டி வதைத்து வரும் நிலையில், இந்த மழை குறித்த அறிவிப்பு சற்று நிம்மதியை தந்துள்ளது. சில இடங்களில் மழை பெய்து வருவதும் குறிப்பிட்டத்தக்கது.
2024 மக்களவைத் தேர்தல்:
*திமுக வேட்பாளர் அருண் நேரு – 6,03,209 வாக்குகள்
*அதிமுக வேட்பாளர் சந்திரமோகன் – 2,14,102 வாக்குகள்
*ஐஜேகே வேட்பாளர் பாரிவேந்தர் – 1,61,866 வாக்குகள்
*நாதக வேட்பாளர் இரா.தேன்மொழி – 1,13,092 வாக்குகள்
பெரம்பலூர் தொகுதியில் தொடக்கத்தில் இருந்தே திமுக வேட்பாளர் அருண் நேரு முன்னிலை வகித்த நிலையில், பாஜக கூட்டணி சார்பில் போட்டியிட்ட பாரிவேந்தரை விட அதிகமாக பெற்று வெற்றி பெற்றுள்ளார். இத்தேர்தலில் பாரிவேந்தர் டெபாசிட்டையும் இழந்துள்ளார். இவர் கடந்த தேர்தலில் திமுகவுடன் கூட்டணி அமைத்து 4 லட்சத்திற்கு மேல் வாக்குகள் பெற்று வெற்றி பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
பெரம்பலூர் மக்களவை தொகுதியில் 2வது முறையாக போட்டியிட்ட ஐஜேகே தலைவர் பாரிவேந்தர் தோல்வி அடைந்தார். பாஜக சார்பில் போட்டியிட்ட அவர், டெபாசிட்டை இழந்து பரிதாப தோல்வி அடைந்தார். அருண் நேருவை விட 4,20,941 வாக்குகள் குறைவாக பெற்று தோல்வி அடைந்தார் பாரிவேந்தர். கடந்த முறை திமுக கூட்டணியில் வெற்றி பெற்ற அவர், பாஜக சார்பில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.
2024 மக்களவைத் தேர்தலில் பெரம்பலூர் தொகுதியில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் அருண் நேரு 589160 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து களம் கண்ட அதிமுக வேட்பாளர் சந்திரமோகன் 208930 வாக்குகளும், பாஜக – IJK வேட்பாளர் பாரிவேந்தர் (பச்சமுத்து) 157640 வாக்குகளும், நாதக வேட்பாளர் இரா.தேன்மொழி 110515 பெற்று தோல்வியைத் தழுவினர்.
பெரம்பலூர் மக்களவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை 18வது சுற்று முடிந்த நிலையில திமுக வேட்பாளர் அருண் நேரு 4,22, 995 வாக்குகள் வித்தியாசத்தில் தொடர்ந்து முன்னிலையில் உள்ளார். அதிமுக வேட்பாளர் சந்திரமோகன் 1,48, 7052 வாக்குகளுடன் வது இடத்திலும் பாரிவேந்தர் 3 வது இடத்திலும் உள்ளார். பெரம்பலூர் திமுக மாவட்ட அலுவலகத்தில் பட்டாசு வெடித்து வெற்றியை கொண்டாடி வருகின்றனர்.
பெரம்பலூர் மக்களவை தொகுதியில் 20 சுற்றுகள் முடிவடைந்த நிலையில் திமுக வேட்பாளர் அருண் நேரு 5,79,435 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார். அதிமுக வேட்பாளர் – சந்திரமோகன் 2,05,283 வாக்குகள் பெற்றுள்ளார். இதில் அதிமுக வேட்பாளரை விட திமுக வேட்பாளர் அருண் நேரு 3,74,152 -வாக்கு வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.
பெரம்பலூர் மக்களவை தொகுதியில் 18வது சுற்று நிலவரப்படி திமுக வேட்பாளர் அருண் நேரு 5,46,807 வாக்குகள் பெற்று 4,44,131 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார். அதிமுக வேட்பாளர் சந்திரமோகன் 1,90,799 வாக்குகள் பெற்று 2ஆம் இடத்தில் உள்ளார். பாஜக வேட்பாளர் பாரிவேந்தர் -1,44,574 வாக்குகள் பெற்று 3ஆம் இடத்தில் உள்ளார். நாதக தேன்மொழி 1,02,676 வாக்குகள் பெற்று 4ஆம் இடத்தில் உள்ளார்.
Sorry, no posts matched your criteria.