India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மக்களவைத் பொதுத் தேர்தல் 2024 தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருந்ததால் பொதுமக்கள் குறைதீர் கூட்டம் நிறுத்திவைக்கப்பட்டிருந்தது. தற்பொழுது தேர்தல் நடத்தை விதிமுறைகள் விலக்கப்பட்டுள்ளது. இதனால், பெரம்பலூர் மாவட்டத்தில் எதிர்வரும் 10ஆம் தேதி முதல் வழக்கம் போல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், பொதுமக்கள் குறைதீர் கூட்டம் நடைபெறும் என கலெக்டர் க.கற்பகம் தெரிவித்துள்ளார்.
பெரம்பலூர் நகர்பகுதிகளான புதிய பேருந்து நிலையம், சங்குபேட்டை, நான்கு ரோடு, துறைமங்கலம், பழைய பேருந்து நிலையம், ஆலம்பாடி சாலை, துறையூர் சாலை, ஆத்தூர் சாலை, எளம்பலூர் சாலை, வடக்குமாதேவி சாலை மற்றும் அரணாரை ஆகிய பகுதிகளில் இன்று 7ஆம் தேதியான இரவு 8 மணிமுதல் பலமான காற்றுடன் கூடிய திடீர் மழை பெய்தது.
தமிழ்நாடு அரசுபணியாளர் தேர்வாணையத்தின் மூலம் (9.6.2024) நடத்தப்படவுள்ள தொகுதி IV தேர்வினை சிறப்பாக நடத்த மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடு பணிகள் (ம) தேர்வில் கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள் குறித்து அனைத்து அலுவலர்கள் மற்றும் தலைமை கண்காணிப்பாளர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் ஆட்சியர் கற்பகம் தலைமையில் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் அரசுத்துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
பெரம்பலூர் நகர்பகுதிகளான புதிய பேருந்து நிலையம், சங்குபேட்டை, நான்கு ரோடு, துறைமங்கலம், பழைய பேருந்து நிலையம், ஆலம்பாடி சாலை, துறையூர் சாலை, ஆத்தூர் சாலை, எளம்பலூர் சாலை, வடக்குமாதேவி சாலை மற்றும் அரணாரை ஆகிய பகுதிகளில் இன்று 7ஆம் தேதியான இரவு 8 மணிமுதல் பலமான காற்றுடன் கூடிய திடீர் மழை பெய்தது.
தமிழக அரசு, துணிநூல் துறை மூலம் 10, 12ஆம் வகுப்பு முடித்த வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கு தென்னிந்திய ஜவுளி ஆராய்ச்சிக் கழகம் மற்றும் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் மூலமாக ஸ்பின்னிங் (ம) தொழில்நுட்ப ஜவுளி பிரிவுகளில் பயிற்சி அளிக்கப்படவுள்ளது. பயிற்சி பெறவிரும்புபவர்கள் https://tntextiles.tn.gov.in./jobs/ என்ற வலைதளத்தில் பதிவு செய்து பயன் பெறலாம் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
பெரம்பலூர் மாவட்டத்தில்
5வது சுற்று கோமாரி நோய் தடுப்பூசி பணிகள் ஜூன் 10 முதல் 21 நாட்கள் நடைபெறவுள்ளதால், விவசாயிகள் (ம) கால்நடை வளர்ப்பவர்கள் தங்களது கால்நடைகளுக்கு தடுப்பூசி போட்டு பயன்பெறலாம் என கலெக்டர் க.கற்பகம் தெரிவித்துள்ளார்.
கால்நடைகளை தாக்கும் கோமாரி நோய் வராமல் தடுத்திட தேசிய கால்நடை நோய் தடுப்பு திட்டத்தின் தடுப்பூசி செலுத்தப்படவுள்ளது.
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் ஜூன் 9ஆம் தேதி ஞாயிற்றுக் கிழமை நடத்தப்படும் ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் குரூப்-4 தேர்வில், பெரம்பலூர் மாவட்டத்தில் 61 தேர்வு மையங்களில் 18,169 பேர் தேர்வு எழுத உள்ளனர். இந்த தேர்வர்கள், தேர்வு எழுத ஏதுவாக அனைத்து அடிப்படை வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் இன்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருச்சி மாவட்டம் பச்சைமலை நாகூர் கிராமத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்ற கபடி போட்டியில் அண்டை மாவட்டங்களை சேர்ந்த 20க்கும் அணிகள் பங்குபெற்றன. இதில் பெரம்பலூர் மாவட்டம் அம்மாபாளையத்தை சேர்ந்த சஹாரா அணியினர் பங்குபெற்று முதல் பரிசைப் பெற்றனர். முதல் பரிசை வென்ற அந்த அணியினருக்கு ஊர் பொதுமக்கள் தங்களுடைய வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
பெரம்பலூர் மாவட்ட சமூக நல அலுவலகத்தின் மூலம் திருநங்கைகளுக்கு ஒரே இடத்தில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்க ஏதுவாக சம்பந்தப்பட்ட துறைகள் ஒருங்கிணைந்து முகாம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. ஆட்சியரகத்தில் ஜூன் 21 ஆம் தேதி நடைபெறும் சிறப்பு முகாமில் அனைத்து திருநங்கையரும் பங்குபெற்று பயன்பெறலாம் என கலெக்டர் கற்பகம் நேற்று(ஜூன் 6)தெரிவித்துள்ளார்.
பெரம்பலூர் மாவட்டத்தில் பொது விநியோகத்திட்டத்தின் கீழ் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் பாமாயில் மற்றும் துவரம்பருப்பு மே மாதத்தில் வழங்கப்படவில்லை. இந்நிலையில் பாமாயில் மற்றும் துவரம் பருப்பினை பெற்றுக்கொள்ளாத குடும்ப அட்டைதாரர்கள் ஜூன் மாத பொருட்கள் வாங்கும்போது சேர்த்து பெற்றுக்கொள்ளலாம் என ஆட்சியர் கற்பகம் நேற்று(ஜூன் 6) தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.