India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ஆலத்தூர்: புதுக்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்த 17 வயதுடைய பள்ளி மாணவி ஒருவருக்கு அதே ஊரைச் சார்ந்த 22 வயது வாலிபருடன் காதல் ஏற்பட்டுள்ளது. இதனை தாய் கண்டித்ததால் மனம் உடைந்து சிறுமி நேற்று இரவு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். போலீசார் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரிக்கின்றனர்.
பெரம்பலூர் மாவட்டத்தில் பெண்கள் மேன்மைக்காக சிறந்த சமூக சேவை புரிந்த சமூக சேவகர்கள் மற்றும் தொண்டு நிறுவனத்திற்கான விருதுகள் 2024ம் ஆண்டிற்கு வழங்கப்பட இருக்கிறது. இவ்விருதுக்கு தகுதியானவர்கள் தமிழக அரசின் விருதுகள் இணையதளத்தில் (awards.tn.gov.in) 20.6.2023-க்குள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் கற்பகம் நேற்று(மே 28) தகவல் தெரிவித்துள்ளார்.
பெரம்பலூர் மாவட்டத்தில் பெண்கள் மேன்மைக்காக சிறந்த சமூக சேவை புரிந்த சமூக சேவகர்கள் மற்றும் தொண்டு நிறுவனத்திற்கான விருதுகள் 2024ம் ஆண்டிற்கு வழங்கப்பட இருக்கிறது. இவ்விருதுக்கு தகுதியானவர்கள் தமிழக அரசின் விருதுகள் இணையதளத்தில் awards. tn. gov. in 20.6.2023 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் கற்பகம் இன்று தகவல் தெரிவித்துள்ளார்.
மணப்பாறையை சேர்ந்த பிரியதர்ஷினி (23) இவரது நண்பர் பெரம்பலூர், எறைய சமுத்திரத்தைச் சேர்ந்த மணிகண்டன் (23).
இந்நிலையில் பிரியதர்ஷினி திருச்சியில் இருந்து மணிகண்டன் டூவீலரில் பெரம்பலூருக்கு வந்தனர். அப்போது பாடாலூர் அருகே டூவீலரில் இருந்து பிரியதர்ஷினி
கீழே விழுந்தார். காயமடைந்த பிரியதர்ஷினியை மருத்துவமனையில் சேர்த்தனர். சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து பாடாலூர் போலீசார் விசாரணை.
பெரம்பலூர், எறையூர் பகுதியில் நடந்த ATM-ல் கொள்ளை முயற்சி (ம) 5 இருசக்கர வாகன திருட்டு குற்ற சம்பவங்களில் ஈடுப்பட்டது கடலூர் மாவட்டம்
வளையமாதேவி மெயின் ரோடு பகுதி சேர்ந்த ஆகாஷ்(19), பெரம்பலூர், குன்னம் வட்டம், அத்தியூர் வடக்கு தெருவைச் சேர்ந்த மணிகண்டன்(21) ஆகியோர் என்பது தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் மங்களமேடு போலீசார் இன்று கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.
பெரம்பலூர், எறையூர் பகுதியில் நடந்த ATM-ல் கொள்ளை முயற்சி (ம) 5 இருசக்கர வாகன திருட்டு குற்ற சம்பவங்களில் ஈடுப்பட்டது கடலூர் மாவட்டம்
வளையமாதேவி மெயின் ரோடு பகுதி சேர்ந்த
ஆகாஷ்(19), பெரம்பலூர், குன்னம் வட்டம், அத்தியூர் வடக்கு தெருவைச் சேர்ந்த மணிகண்டன்(21) ஆகியோர் என்பது தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் மங்களமேடு போலீசார் இன்று கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.
பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம் அருகே அம்மா உணவகம் அருகில் இயங்கி வரும் ஏடிஎம் அருகில் இன்று மாலை சுமார் 50 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் கிடப்பதாக இன்று பெரம்பலூர் நகர போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பிரேதத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து, இறந்தவர் யார் என்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பெரம்பலூர் மாவட்டத்தில் அதிக அளவில் சின்னவெங்காயம் சாகுபடி செய்யப்படுகிறது. இம்மாவட்டத்தில் 17 ஆயிரம் ஏக்கரில் சின்னவெங்காயம் சாகுபடி செய்யப்படுகிறது. தமிழகத்தில் இதுதான் அதிகமாகும். ஆற்றுப்பாசனமே இல்லாத மானாவரி பூமியான பெரம்பலூர் மாவட்டத்தில் சராசரியாக ஏக்கருக்கு 4000 கி வெங்காயம் மகசூல் செய்யப்படுகிறது. அந்த வகையில் ஆண்டுக்கு 80,000 மெட்ரிக் டன் சின்ன வெங்காயம் இங்கு விளைவிக்கப்படுகிறது.
பெரம்பலூர் பழைய பேருந்து நிலையம் அருகில் தனியார் கூட்ட அரங்கில் (மே.26) நேற்று (2008-2011) ஆம் ஆண்டு குரும்பலூர் பாரதிதாசன் அரசு கலைக் கல்லூரியில் படித்த கல்லூரி மாணவ, மாணவிகள் 13 ஆண்டுகளுக்கு பிறகு சந்திப்பு கூட்டம் நடைபெற்றது. இதில் கல்லூரியின் நினைவுகளை பகிர்ந்து கொண்டு நட்பை பரிமாறிக் கொண்டனர். இந்நிகழ்ச்சியில் சுற்றுவட்டாரப் பகுதிகளை இருந்து முன்னாள் கல்லூரி மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர்.
பெரம்பலூர் மாவட்டத்தில் வேளாண்மை உதவி இயக்குநர் கௌதமன், அப்துல் ரகுமான் தலைமையில் 4 வேளாண் அலுவலர்களின் குழு (மே 23, 24) ஆகிய தேதிகளில் பெரம்பலூர், வேப்பந்தட்டை, ஆலத்தூர், வேப்பூர் ஆகிய வட்டாரங்களில் உள்ள 68 உரக்கடைகளில் ஆய்வு மேற்கொண்டனர். அஸ்ரீதில் உர கட்டுப்பாடு ஆணையை மீறிய 38 உரக்கடைகளுக்கு தடை விதித்தனர். ஆய்வில் பெரம்பலூர் வேளாண்மை உதவி இயக்குனர் ராதாகிருஷ்ணன் உடன் இருந்தார்.
Sorry, no posts matched your criteria.