Perambalur

News June 4, 2024

பெரம்பலூர்: வாக்கு எண்ணும் மையத்தில் பரபரப்பு

image

பெரம்பலூர் தனியார் பள்ளியில் வாக்கு எண்ணிக்கை எண்ணும் பணி தொடங்கியுள்ளது. முன்னதாக வாக்கு எண்ணிக்கை முகவர்களுக்கு காலை உணவு வழங்கப்படவில்லை என்று கூறி அதிமுக மற்றும் நாம் தமிழர் கட்சியினர் போராட்டம் நடத்தினர். அப்போது நாதக கட்சியின் வாக்கு எண்ணிக்கை முகவரான வெங்கடேஷ் என்பவர் மயக்கம் அடைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் உணவு வழங்கப்பட்டு நிலைமை சரிசெய்யப்பட்டு

News June 4, 2024

பெரம்பலூர்: தொடங்கியது வாக்கு எண்ணிக்கை

image

நாடே எதிர்பார்க்கும் மக்களவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை சற்றுமுன் தொடங்கியது. அதன்படி, பெரம்பலூர் மாவட்டத்தில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு சுற்றுகளின் முடிவுக்காக அரசியல் கட்சி முகவர்கள், அரசியல் தலைவர்கள், தொண்டர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக்கொண்டுள்ளனர். முதலில் தபால் வாக்குகள் எண்ணப்படுகின்றன.

News June 4, 2024

ELECTION: பெரம்பலூரில் வெல்லப்போவது யார்?

image

2024 மக்களவைத் தேர்தலில் பெரம்பலூர் தொகுதியில் மொத்தம் 77.37 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளது. வேட்பாளராக திமுக சார்பில் அருண்நேரு, அதிமுக சார்பில் சந்திரமோகன், பாஜக கூட்டணியில் பாரிவேந்தர், நாம் தமிழர் சார்பில் தேன்மொழி போட்டியிட்டுள்ளனர். இவர்களில் வெற்றி பெறப்போவது யார்? தேர்தல் முடிவுகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள Way2News-னுடன் இணைந்திருங்கள்.

News June 3, 2024

நாளை மாவட்டம் முழுவதும் விடுமுறை

image

பெரம்பலூர் நாடாளுமன்றத் தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை நாளை நடைபெறவுள்ளது. இதனால், மாநில வாணிப கழகத்தின் (டாஸ்மாக்) கட்டுப்பாட்டில் இயங்கி வரும் அனைத்து டாஸ்மாக் மதுபான சில்லரை விற்பனைக்கடைகள், மதுபானக் கடைகளை ஒட்டி உள்ள மதுக்கூடங்கள் அனைத்தும் தமிழக அரசு உத்தரவின்படி விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

News June 3, 2024

பெரம்பலூர் அருகே விபத்து: ஒருவர் படுகாயம்

image

தண்ணீர் பந்தல் இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்தவர் பெரியண்ணன். இவர் நேற்று இரவு தண்ணீர் பந்தல் பகுதியில் திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலை கடக்க முயன்ற போது அதிவேகமாக வந்த கார் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் தலையில் பலத்த காயமடைந்த அவரை அருகில் இருந்தவர்கள் அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதித்தனர். விபத்து குறித்து பெரம்பலூர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News June 3, 2024

கலைஞரின் 101 ஆவது பிறந்தநாள் விழா கொண்டாட்டம்

image

முத்தமிழறிஞர் கலைஞரின் 101 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு வேப்பந்தட்டை வட்டம் கிருஷ்ணாபுரத்தில் மாவட்ட பொறுப்பாளர் ஜெகதீசன் தலைமையில் கலைஞர் மற்றும் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில் சட்டமன்ற உறுப்பினர் எம். பிரபாகரன், தலைமை செயற்குழு உறுப்பினர் வழக்கறிஞர் என்.ராஜேந்திரன், மாவட்ட துணைச் செயலாளர் தழுதாழை பாஸ்கர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

News June 3, 2024

வாக்கு என்னும் மையத்தில் 1125 காவலர்கள்

image

பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதி வாக்கு என்னும் மையத்தில் 192 கண்காணிப்பு கேமராக்களுடன் மத்திய துணை ராணுவம் துப்பாக்கி ஏந்திய நிலையில் 24 மணி நேரமும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்த நிலையில்,(ஜூன்4) நாளை கூடுதலாக 1125 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். வாக்கு என்னும் மையத்திற்கு 100 மீட்டருக்கு முன்பே வாகனங்களை நிறுத்த வேண்டும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சியாமளாதேவி தெரிவித்துள்ளார்.

News June 3, 2024

வாகன விபத்தில் ஒருவர் உயிரிழப்பு: 3 பேர் காயம்

image

கடலூர், கோழியூரை சேர்ந்த 5 பேர் காரில் திருச்சி சென்று விட்டு மீண்டும் நேற்று சொந்த ஊர் சென்றுள்ளனர்.
தேசிய நெடுஞ்சாலையில் சின்னாறு பகுதியில் சென்ற போது, கார் சாலையின் நடுவே உள்ள தடுப்புச் சுவரில் ஏறி, ஒரு டூவீலர் மீது மோதி விபத்துக்குள்ளாகி சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது. இவ்விபத்தில் டூவீலரில் வந்தவர் உயிரிழந்தார். காரில் வந்த 3 சிகிச்சை பெற்று வருகின்றனர். 

News June 2, 2024

இளைஞர்களுக்கு கேமரா பழுது நீக்கல் பயிற்சி முகாம்

image

பெரம்பலூர், எளம்பலூர் சாலையில் உள்ள IOB வங்கி ஊரக சுய வேலைவாய்ப்பு மையத்தில் கிராமம் (ம) நகர்ப்புற இளைஞர்களுக்கு கண்காணிப்பு கேமரா பழுது நீக்கல் பயிற்சி ஜூன் 6ஆம் தேதி முதல் 30 நாட்கள் நடைபெறுகிறது. இதில் சேர விரும்பும் 19 -45 வயதுடைய ஆண்கள் தங்களது ஆதார், குடும்ப அட்டை, கல்விச் சான்றுடன் ஜூன்.3 ஆம் தேதி நடைபெறும் நேர்முகத் தேர்வில் பங்கு பெறலாம் என பயிற்சி மைய இயக்குனர் ஆனந்தி தெரிவித்துள்ளார்.

News June 2, 2024

பெரம்பலூர் இளைஞர் அசத்தல்

image

ஈரோடு மாவட்டம் பவானி தனியார் பள்ளி சார்பில் தாளாளர் சின்னசாமி ரேணுகாதேவி முன்னிலையில் இன்று பவானி சங்கமேஸ்வரர் ஆலயம் என்ற இடத்தில் இருந்து 14 கிலோமீட்டர் தொலைவுக்கு மரம் வளர்ப்பது தொடர்பான விழிப்புணர்வு மாரத்தான் போட்டி நடைபெற்றுள்ளது. இதில் பெரம்பலூர் வட்டம் மேலப்புலியூர் மாற்றுத்திறனாளி வீரர் எஸ்.கலைச்செல்வன் கலந்துகொண்டு 3ஆம் இடம் பிடித்து விழா குழுவினரிடம் சான்றிதழ் பெற்றார்.

error: Content is protected !!