India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பெரம்பலூர் மதிமுக கட்சியின் மாவட்ட செயலாளர் ஜெயசீலன் இல்ல திருமண விழா இன்று பெரம்பலூரில் நடைபெற்றது. இதில் கட்சியின் முதன்மைச் செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ பங்கேற்று மணமக்களை வாழ்த்தினார். இந்நிகழ்ச்சியில் கட்சி நிர்வாகிகள், உறுப்பினர்கள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
ஆலத்தூர் தாலுகா ஆதனூர் கிராமத்தில் இன்று நாம் தமிழர் கட்சியின் சார்பாக புதிய கொடிக்கம்பம் அமைத்து கொடியேற்றும் நிகழ்வு நடைபெற்றது. இதில் பெரம்பலூர் கிழக்கு மா.செயலாளர் தங்க இரத்தினவேல் கொடியேற்றி வைத்தார், மா.தலைவர் மைக்கேல், தெற்கு தொகுதி செயலாளர் சரவணன், சிதம்பரம் தொகுதி நாதக வேட்பாளராக போட்டியிட்ட ஜான்சிராணி உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.
தமிழக சட்டப்பேரவை மானிய கோரிக்கையில் பெரம்பலூர் பேருந்து நிலையத்திற்கு ரூபாய் 76.30 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டதற்கு நேற்று நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என்.நேருவை, பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் பிரபாகரன் நேரில் சந்தித்து பெரம்பலூர் மக்களின் சார்பாக நன்றியை தெரிவித்தார்.
நீலகிரி பாராளுமன்ற தொகுதியில் மீண்டும் வெற்றி பெற்று, முதன் முறையாக பெரம்பலூருக்கு வருகை தந்த திமுக துணை பொதுச்செயலாளர் மற்றும் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசாவுக்கு நேற்று குரும்பலூர் திமுக சார்பில் பேரூர் மாணவரணி துணை அமைப்பாளர் திவான், வார்டு செயலாளர் பிரபாகரன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர். மேலும் பேரூர் கழக நிர்வாகிகள், தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
அம்மாபாளையம் அருகே பெரம்பலூர் நோக்கி சென்ற இருசக்கர வாகனத்தின் மீது அம்மாபாளையம் நோக்கி சென்ற கார் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் இருசக்கர வாகனத்தில் பயணித்த அன்பரசு, பால்ராஜ் ஆகிய இருவரும் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்து குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பெரம்பலூரில் அனைத்து துறை சார்ந்த பதவி உயர்வுக்கான எழுத்து தேர்வு பெரம்பலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் நேற்று நடைபெற்றது. இதில் வருவாய் துறை, மின்வாரியத் துறை, கல்வித்துறை, சமூக நலத்துறை, உள்ளிட்ட பல்வேறு துறையில் 5 வருடம், 8 வருடத்திற்கு மேலாக பணியில் சேர்ந்து பணியாற்றி வரும் உதவியாளர் மற்றும் அரசு அலுவலர் பதவி உயர்வுக்கான எழுத்துத் தேர்வு நடைபெற்றது. இதில் சுமார் 773 பேர் தேர்வை எழுதியுள்ளனர்.
பெரம்பலூர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் திருநங்கைகளுக்கான சிறப்பு முகாம் கலெக்டர் க.கற்பகம் தலைமையில் நேற்று நடைபெற்றது. இந்நிகழ்வில் திருநங்கைகளுக்கு ஆதார் அட்டை, முதலமைச்சரின் மருத்துவக் காப்பீட்டு அட்டை ஆகியவை எளிதில் விண்ணப்பித்திட நடைபெற்றது. மேலும் கல்விச்சான்று, சாதிச்சான்று, தொழில் தொடங்க ஏற்பாடு, இலவச வீட்டு மனை பட்டா, அடிப்படை வசதிகள் குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.
பெரம்பலூர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் திருநங்கைகளுக்கான சிறப்பு முகாம் கலெக்டர் க.கற்பகம் தலைமையில் இன்று நடைபெற்றது. இந்நிகழ்வில் திருநங்கைகளுக்கு ஆதார் அட்டை, முதலமைச்சரின் மருத்துவக் காப்பீட்டு அட்டை ஆகியவை எளிதில் விண்ணப்பித்திட நடைபெற்றது. மேலும் கல்விச்சான்று, சாதிச்சான்று, தொழில் தொடங்க ஏற்பாடு, இலவச வீட்டு மனை பட்டா, அடிப்படை வசதிகள் குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் க.கற்பகம் அறிவிப்பின்படி, தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் இன்று (21.6.24) தேதி இன்று காலை.10 மணியளவில் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் 8, 10, 12ஆம் வகுப்பு முடித்தவர்கள், ஐடிஐ, டிப்ளமோ, பட்டப்படிப்பு முடித்தவர்கள் இதில் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.
பெரம்பலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை அருகே நேற்று 70 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் இறந்து கிடந்தார். இதனைக்கண்ட அப்பகுதி மக்கள் இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் அங்கு வந்த போலீசார் இறந்து கிடந்தவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Sorry, no posts matched your criteria.