Perambalur

News June 14, 2024

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விசாரணை

image

தமிழ்நாடு தகவல் ஆணையம் சார்பில் பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காணொளி காட்சி மூலம் (ஜூன் 14) இன்று விசாரணை நடைபெற்றது. இதில், வேப்பந்தட்டை, மற்றும் ஆலத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்திலிருந்து RTI – 2005-இன் படி சமூக ஆர்வலர்கள் அன்னமங்கலம் முருகானந்தம், குப்புசாமி ஆகியோருக்கு தகவலை தர மறுத்தது உள்ளிட்ட 6 வழக்குகள் மீது தகவல் ஆணையர் செல்வராஜ் விசாரணை மேற்கொண்டார்.

News June 14, 2024

மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தந்தை கைது

image

பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த 12ஆவது படிக்கும் 16 வயது மாணவி. இவரின் தாயார் ஏற்கனவே இறந்த நிலையில் மாணவியின் தந்தை அவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக அந்த மாணவி பெரம்பலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அதன்பேரில் போலீசார் போக்சோவில் வழக்குப்பதிவு செய்து மாணவியின் தந்தையை நேற்று(ஜூன் 13) கைது செய்து சிறையில் அடைத்தனர்.

News June 14, 2024

குழந்தை தொழிலாளர்கள் இருவர் மீட்பு

image

குழந்தை தொழிலாளர் முறையை ஒழிக்கும் விதமாக பெரம்பலூர் மாவட்டத்தில் பல பகுதிகளில் குழந்தை தொழிலாளர்கள் யாரேனும் கடைகளில் பணிபுரிகின்றனாரா என்று பெண்கள் (ம) குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தடுப்பு பிரிவு போலீசார் கடைகள் (ம) கல்குவாரிகள் போன்ற இடங்களில் சோதனை செய்ததில் கவுல்பாளையத்தில் ஒரு கடையில் பணியமர்தப்பட்டிருந்த குழந்தை தொழிலாளர்கள் இருவரை மீட்டனர்.

News June 13, 2024

குழந்தை தொழிலாளர்கள் இருவர் மீட்பு

image

குழந்தை தொழிலாளர் முறையை ஒழிக்கும் விதமாக பெரம்பலூர் மாவட்டத்தில் பல பகுதிகளில் குழந்தை தொழிலாளர்கள் யாரேனும் கடைகளில் பணிபுரிகின்றனாரா என்று பெண்கள் (ம) குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தடுப்பு பிரிவு போலீசார் கடைகள் (ம) கல்குவாரிகள் போன்ற இடங்களில் சோதனை செய்ததில் கவுல்பாளையத்தில் ஒரு கடையில் பணியமர்தப்பட்டிருந்த குழந்தை தொழிலாளர்கள் இருவரை மீட்டனர்.

News June 13, 2024

பெரம்பலூர் மாவட்ட திமுக சார்பாக அழைப்பு

image

கோயமுத்தூர் கொடிசியா மைதானத்தில் ஜூன் 15ஆம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலும் மற்றும் கூட்டணி கட்சித் தலைவர்கள் கலந்து கொள்ளும் முப்பெரும் விழா பொதுக்கூட்டத்தில், பெரம்பலூர் மாவட்ட திமுக சார்பில் நிர்வாகிகள் மற்றும் கட்சி உறுப்பினர்கள் பெருந்திரளாக கலந்து கொள்ள வேண்டுமென பெரம்பலூர் மாவட்ட திமுக பொறுப்பாளர் வீ.ஜெகதீசன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

News June 13, 2024

பெரம்பலூர்: அஞ்சலக வங்கிக் கணக்கு முகாம்

image

பெரம்பலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில், அரசு பள்ளியில் அஞ்சலக வங்கிக் கணக்கு தொடங்கும் முகாம் நேற்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் பழனிச்சாமி, பெரம்பலூர் எம்.எல்.ஏ பிரபாகரன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். நிகழ்ச்சியில் பள்ளி மாணவ மாணவிகளுக்கு அஞ்சல் சேமிப்பு கணக்கு புத்தகமும், இந்திய அஞ்சல் பட்டுவாடா, வங்கியின் சேமிப்பு கணக்கு அட்டையும் வழங்கப்பட்டது.

News June 13, 2024

பெரம்பலூர்: பேரூராட்சியாக அறிவிக்க வேண்டும்

image

குன்னம் அடுத்த வேப்பூர் பகுதியை பேரூராட்சியாக அறிவிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இங்கு 1000க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். வேளாண்மை அலுவலகம், அரசு மகளிர் கல்லூரி, சார் பதிவாளர் அலுவலகம், அரசு மருத்துவமனை இருப்பதனால், ஓலைப்பாடி ஊராட்சியில் இருந்து பிரித்து வேப்பூர் பேரூராட்சியாக அறிவிக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

News June 12, 2024

அரசு மருத்துவமனையில் மருத்துவர் இல்லாததால் அவதி

image

பெரம்பலூர் அரசு அலுவலக தலைமை மருத்துவமனையில் புது நோயாளிகள் விபத்து (ம) அவசர சிகிச்சை பிரிவு என பல்வேறு பிரிவுகளுடன் விரிவாக்கம் செய்யப்பட்ட கட்டிடத்தில் இயங்கி வரும் மருத்துவமனையில் தினமும் 1000த்திற்கும் மேற்பட்ட நோயாளிகள் வந்து சொல்கின்றனர். இந்நிலையில் மருத்துவமனையில் நிரந்தரமாக பல் மருத்துவர் இல்லாததால், நோயாளிகள் கடும் அவதி அடைந்துள்ளனர். இதுகுறித்து நடவடிக்கை எடுக்க கோரிக்கை எழுந்துள்ளது.

News June 12, 2024

மாவட்ட காவல் அலுவலகத்தில் சிறப்பு மனு முகாம்

image

பெரம்பலூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் மாவட்ட எஸ்பி ஷ்யாம்ளாதேவி தலைமையில் சிறப்பு மனு முகாம் இன்று நடைபெற்றது. இச்சிறப்பு மனு முகாமில் கலந்து கொண்ட மாவட்ட எஸ்.பி பொதுமக்களிடம் மனுவை பெற்றார். இந்த மனு முகாம் மூலம் 24 மனுக்கள் பெறப்பட்டு சம்பந்தப்பட்ட காவல் நிலையத்திற்கு நடவடிக்கை மேற்கொள்ள அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

News June 12, 2024

தொழில் முனைவோருக்கு அழைப்பு

image

பெரம்பலூர் மாவட்டத்தில் 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற முதல் தலைமுறையினர் தொழில் தொடங்கிட மானியத்துடன் கூடிய கடன் உதவி, மாவட்ட தொழில் மையம் மூலம் வழங்கப்பட உள்ளது. இத்திட்டத்தில் பயன்பெற ஆர்வமுள்ள தொழில் முனைவோர்கள் www.msmetamilnadu.tn.gov.in என்ற இணையதளத்தின் மூலம் இலவசமாக விண்ணப்பித்து பயன்பெறலாம். மேலும் விவரங்களுக்கு 89255- 33977 என்ற தொலைபேசியில் அணுகலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!