India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
1.கரும்பு நடுவதற்கு முன் குளத்து மண் இட்டால் அதிக மகசூல் பெறலாம்; 2.ஆட்டு புழுக்கையை உரமாக பயன்படுத்தினால் சக்கரை தன்மை அதிகரிக்கும்; 3.கரும்பு வளர வளர சோகையை உரிப்பதால் செதில், மாவு பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்தலாம். 4. அடிக்கடி நீர் பாச்சுவதால் கரையான் தாக்குதலை கட்டுப்படுத்தலாம். 5. பயிர் செய்து 3 மாதங்களில் சூளை சாம்பல், வேப்பங்கொட்டை தண்ணீர் தெளித்தால் இளந்தண்டு துளைப்பானை கட்டுப்படுத்தலாம்.
விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, பெரம்பலூா் மாவட்டத்தில் 5 இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் தெரிவித்துள்ளாா். வேப்பந்தட்டை வட்டத்தில் அரும்பாவூா், பூலாம்பாடி, குன்னம் வட்டத்தில் அகரம் சீகூா், கோவில்பாளையம், காடூா் ஆகிய 5 இடங்களிலும் நேரடி கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன. விவசாயிகள் உற்பத்தி செய்யும் நெல்லை இதன் மூலம் விற்பனை செய்து பயன்பெறலாம்.
பெரம்பலூர் மாவட்டத்தில் பசுமை பரப்பளவினை அதிகப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில், மாவட்டம் முழுவதும் அரசுக்கு சொந்தமான புறம்போக்கு நிலங்கள் குறித்து கணக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில், மாவட்டத்தில் உள்ள 4 வட்டங்களிலும் மொத்தம் 184.81 ஏக்கர் புறம்போக்கு நிலம் கண்டறியப்பட்டுள்ளது. அந்த நிலங்களில் மரக்கன்றுகள் நடும் பணியினை துரிதப்படுத்தப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
பெரம்பலூர் மாவட்டத்தில் ஜூலை 18ம் தேதி தமிழ்நாடு நாள் விழாவினை முன்னிட்டு ஜூலை 9ம் தேதி அன்று பெரம்பலூர் பாரத சாரண, சாரணியர் பயிற்சி மையத்தில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு கட்டுரை மற்றும் பேச்சுப் போட்டிகள் நடைபெற உள்ளது. இப்போட்டிகளில் 6ம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவ, மாணவிகள் கலந்து கொள்ளுமாறு ஆட்சியர் கற்பகம் நேற்று தகவல் தெரிவித்துள்ளார்.
பெரம்பலூர் மாவட்டத்தில் ஜூலை 18ம் தேதி தமிழ்நாடு நாள் விழாவினை முன்னிட்டு ஜூலை 9ம் தேதி அன்று பெரம்பலூர் பாரத சாரண, சாரணியர் பயிற்சி மையத்தில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு கட்டுரை மற்றும் பேச்சுப் போட்டிகள் நடைபெற உள்ளது. இப்போட்டிகளில் 6ம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவ, மாணவிகள் கலந்து கொள்ளுமாறு ஆட்சியர் கற்பகம் இன்று தகவல் தெரிவித்துள்ளார்.
பெரம்பலூர் மாவட்ட விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று பெரம்பலூர் மாவட்டத்தில் அரும்பாவூர், பூலாம்பாடி, அகரம்சீகூர், கோவில் பாளையம், காடூர் ஆகிய பகுதிகளில் புதிதாக 5 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் தங்கள் உற்பத்தி செய்யும் நெல்லினை இந்த நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் விற்பனை செய்து பயனடையுமாறு மாவட்ட ஆட்சியர் கற்பகம் இன்று தகவல் தெரிவித்துள்ளார்.
பெரம்பலூர் மாவட்ட விவசாயிகள் தீவன அபிவிருத்தி திட்டத்தின் கீழ் தென்னை, பழத் தோட்டங்களில் ஊடுபயிராக பசுந்தீவனம் வளர்க்க விவசாயிகளுக்கு ஒரு ஏக்கருக்கு ரூ.3000 முதல் 1 ஹெக்டருக்கு ரூ.7,500 வரை அரசால் மானியமாக வழங்கப்படுகிறது. எனவே விவசாயிகள் தங்கள் கிராமத்திற்கு அருகில் உள்ள கால்நடை மருந்தக கால்நடை உதவி மருத்துவரை அணுகி திட்ட விபரங்களை பெற்று விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.
பெரம்பலூர் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் இருந்து மாவட்ட முதன்மை நீதிபதி பல்கீஸ் இன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளை சிறப்பு மக்கள் நீதிமன்றத்தில் முடித்துக்கொள் ஏதவாக சிறப்பு மக்கள் நீதிமன்றம் வரும் 29.7.24 முதல் 3.8.24 வரையிலான வாரத்தில் நடைபெறவுள்ளது. வழக்காடிகள் இவ்வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ள மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
2024 – 2025ஆம் ஆண்டிற்கான அக்னிவீர் வாயு ஏர்மேன் தேர்வு சென்னை தாம்பரத்தில் அமைந்துள்ள 8வது ஏர்மேன் தேர்வு மையத்தின் மூலம், இந்திய ராணுவ ஆட்சேர்ப்பு பேரணி நடைபெறவுள்ளது. இதில் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள திருமணமாகாத ஆண், பெண், வேலை நாடுபவர்கள் விண்ணப்பித்து பயன் பெறலாம். மேலும் விவரங்கள் அறிய www.agnipathvayu.cdac.in என்ற இணையதளத்தை அணுகவும் என்று மாவட்ட ஆட்சியர் கற்பகம் தெரிவித்துள்ளார்.
பெரம்பலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்ட அரங்கில், விவசாயிகள் குறைதீா்க்கும் கூட்டம் நாளை காலை நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியா் கற்பகம் தெரிவித்துள்ளாா். இக்கூட்டத்தில் விவசாயிகள் மற்றும் விவசாயிகள் சங்க பிரதிநிதிகள் பங்கேற்று, வேளாண்மை சம்பந்தமான கடனுதவிகள், வேளாண் இடுபொருட்கள், இயந்திரங்கள் மற்றும் விவசாயிகளுக்கான நலத்திட்டங்கள் குறித்து தங்களது குறைகளை தெரிவிக்கலாம் என்று அறிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.