India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
குரும்பலூர் அரசு கலைக் கல்லூரியில் கௌரவ விரிவுரையாளர்கள் நிலுவைத் தொகையை உடனடியாக வழங்ககோரி ஐந்து நாட்களாக உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதனை தொடர்ந்து மாணவர்களும், அவர்களுக்கு ஆதரவாக போராட்டத்தில் களம் இறங்கினர். இன்று தற்சமயம் கல்லூரி முதல்வர் அறைக்குள் அனைத்து கௌரவ விரிவுரையாளர்களும் உள்ளிருப்பு போராட்டத்தை தொடங்கியுள்ளனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
பெரம்பலூர் அடுத்த வடக்குமாதவி ஊராட்சியில், திமுக தலைமை பொதுக்குழு உறுப்பினர் அண்ணாதுரை தாயாரும், ஒன்றிய பெருந்தலைவர் மீனா அண்ணாதுரை மாமியார் அண்மையில் மறைந்ததையடுத்து, நேற்று போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர், அவர்களின் இல்லம் சென்று மறைந்த நபரின் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். இதில் பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் எம்.பிரபாகரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
பெரம்பலூா் ஆட்சியா் அலுவலக கூட்ட அரங்கில், விவசாயிகள் குறைதீா்க்கும் கூட்டம் இன்று நடைபெறுவதாக மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவ் அறிவித்துள்ளார். இந்த கூட்டத்தில் வேளாண்மை சம்பந்தமான நீா்ப்பாசனம், கடனுதவிகள், வேளாண் இடுபொருள்கள், வேளாண் இயந்திரங்கள் உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்படும். எனவே விவசாயிகள் தங்களது குறைகளை மனுவாக கொடுத்து பயன்பெற வேண்டுமென ஆட்சியர் தெரிவித்துள்ளாா்.
சிறுவாச்சூரில் உள்ள நியாயவிலைக் கடையினை மாவட்ட ஆட்சியர் கிரேஸ் பச்சாவ் இன்று பார்வையிட்டு ஆய்வு செய்து குடும்ப அட்டைதாரருக்கு வழங்கப்படும் அரிசி, கோதுமை, பருப்பு, சர்க்கரை உள்ளிட்ட அத்திவாசிய பொருட்கள் இருப்பு நிலை மற்றும் தரம் குறித்து ஆய்வு செய்து குறித்த காலத்தில் பொருட்களை குடும்ப அட்டைதார்களுக்கு தடையின்றி வழங்கிட மாவட்ட கண்காணிப்பு அலுவலர் அறிவுறுத்தினார்.
பெரம்பலூர் மாவட்டத்திலிருந்து கோயம்புத்தூர், சென்னை, மேட்டுப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் வகையிலான நான்கு புதிய பேருந்துகளை போக்குவரத்துத் துறை அமைச்சர் இன்று, தொடங்கி வைத்ததோடு நில்லாமல் மாவட்ட ஆட்சியர், சட்டமன்ற உறுப்பினர் உள்ளிட்டவர்களோடு இணைந்து பேருந்தில் பயணம் செய்தனர். கட்சி நிர்வாகிகள் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.
பெரம்பலூர் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து தமிழ்நாடு அரசின் முதன்மைச் செயலாளர், தமிழ்நாடு மினரல் கார்ப்பரேஷன் நிறுவன மேலாண்மை இயக்குனர் மற்றும் பெரம்பலூர் மாவட்டத்திற்கான கண்காணிப்பு அலுவலர் அனில்மேஷ்ராம், இன்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்நிகழ்வின்போது மாவட்ட ஆட்சியர் உடனிருந்தார்.
பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்தில் நான்கு புதிய பேருந்துகளை போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் இன்று மாவட்ட ஆட்சியர் கிரேஸ் பச்சாவ் தலைமையில் தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் எம்எல்ஏ பிரபாகரன் முன்னிலை வகித்தார். பெரம்பலூர் மாவட்டத்திலிருந்து சென்னை, மேட்டுப்பாளையம் மற்றும் கோயம்புத்தூர் ஆகிய பகுதிகளுக்கு செல்லும் வகையில் 4 புதிய புறநகர பேருந்துகளை அமைச்சர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
தர்மபுரி, கிருஷ்ணகிரியில் உள்ள பல்வேறு பெண்களின் பாலினத்தை சட்ட விரோதமாக கண்டறிவதற்காக, சட்ட விரோத கும்பல் பெண்கள் அனைவரையும் தர்மபுரியிலிருந்து பெரம்பலூருக்கு கொண்டு சென்றனர். அங்கு கருவின் பாலினத்தை கண்டறியும் முயற்சியில் இறங்கினர். தகவல் அறிந்த தர்மபுரி சுகாதாரத்துறை இணை இயக்குநர் சாந்தி தலைமையில் அதிகாரிகள் மர்மகும்பலை பெரம்பலூர் அருகே சுற்றி வளைத்து பிடித்தனர்.
பெரம்பலூர் மாவட்ட விவசாயிகள் தங்களது வயலில் சொட்டு நீர் பாசனம் அமைப்பதற்கு தோட்டக்கலைத் துறை மூலம் விண்ணப்பித்து மானியத்தை பெற்றுக் கொள்ளலாம் என ஆட்சியர் அறிவித்துள்ளார். இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும் விவசாயிகள் தங்களது நிலத்தின் சிட்டா, சிறு குறு சான்று, அடங்கல், வரைபடம் நீர் மற்றும் மண் பரிசோதனை சான்று சம்பந்தப்பட்ட வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலக மூலமாக விண்ணப்பித்து பயன்பெறலாம்.
பெரம்பலூா் அடுத்த விளாமுத்தூரைச் சோ்ந்தவா் துரைராஜ். இவரது 2.32 ஏக்கா் தரிசு நிலத்தை இவர் மற்றும் அவரது சகோதரா் மணி ஆகியோா் பிரித்து கொண்டனா். இதில் அவரின் சகோதரருக்கு கூடுதலாக இடம் பதிவு செய்யப்பட்டிருந்தது. இது தொடா்பாக துரைராஜ் வட்டாட்சியா் மீது மாவட்ட நுகா்வோா் குறைதீா் ஆணையத்தில் வழக்கு தொடா்ந்தாா். இந்த வழக்கை விசாரித்த ஆணையம் தற்போதைய வட்டாட்சியருக்கு பிடி ஆணை வழங்கி நேற்று உத்தரவிட்டது.
Sorry, no posts matched your criteria.