India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

பெரம்பலூர் மக்களே கொய்யா, பப்பாளி, எலுமிச்சை உள்ளிட்ட செடிகள், தக்காளி, கத்தரி, மிளகாய், வெண்டை மற்றும் கீரை விதை அடங்கிய விதை தொகுப்பு இலவசமாக வழங்கப்படுகிறது. இதை விவசாயிகள், பொதுமக்கள் பயன் படுத்திக்கொள்ளலாம். விண்ணபிக்க <

பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா, மருதடி கிராமத்தைச் சேர்ந்தவர் சரவணன் (30). இவர் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்றதாக கூறப்படுகிறது. இதையடுத்து அப்பகுதியில் தனிப்படை போலீசார் சோதனை செய்தனர். இதில் 17 கிலோ புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து சரவணனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மின்வாரிய ஊழியர்களுக்கு, பொறியாளர்களுக்கு, அலுவலர்களுக்கு 1.12.2023 முதல் வழங்க வேண்டிய ஊதிய உயர்வை உடனடியாக வழங்கிட கோரியும், காலம் தாழ்த்துவதை கைவிட கோரியும் தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு- CITU பெரம்பலூர் வட்டக் கிளை சார்பாக பெரம்பலூர் உபகோட்ட அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் திருச்சி மண்டல செயலாளர் எஸ்.அகஸ்டின், சதீஷ், தினேஷ், தீபன் ஆகியோர்கள் கலந்துகொண்டனர்.

மத்திய அரசின் ‘மிஷன் வாத்சல்யா’ குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 1 குடும்பத்திற்கு அதிகபட்சமாக 2 குழந்தைகளுக்கு மாதம் தலா ரூ.4,000 வீதம் 3 வருடத்திற்கு நிதி வழங்கப்படுகிறது. இதற்கு வருமான சான்றிதழ் போதும், பொது சேவை மையம் (CSC) அல்லது குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் அலுவலகத்தில் நேரடியாக விண்ணப்பிக்கலாம். இந்த தகவலை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!

பெரம்பலூர் வாடகை வீட்டில் வசிப்பவர்கள், வாடகை உயர்வு, திடீர் வெளியேற்றம், முன்பணம் இழுபறி போன்ற பல பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர். வாடகை வீட்டில் குடியிருப்போர் உரிமைகளை பாதுகாக்க தனி சட்டமே உள்ளது. வாடகைக்கு இருக்கும் வீட்டில் உரிமையாளர் அதிக கட்டணம் வசூலித்தாலோ அல்லது தொந்தரவு செய்தாலோ, 1800 599 01234 என்ற தமிழக வீட்டுவசதித் துறையின் கட்டணமில்லா எண்ணில் புகார் அளிக்கலாம். இதை SHARE பண்ணுங்க!

தற்போதைய நவீன காலகட்டத்தில் அரசின் பல்வேறு நலத்திட்டங்களுக்கு இ-சேவை மையங்கள் வாயிலாகவே விண்ணப்பிக்க வேண்டிய நிலை உள்ளது. எனவே தமிழகத்தில் தொழில் முனைவோர்களை ஊக்குவிக்கும் வகையில் சொந்தமாக இ-சேவை மையங்கள் தொடங்கிட அரசு அனுமதிக்கிறது. இதில் விருப்பமுள்ளவர்கள் tnesevai.tn.gov.in என்ற இணையதளம் மூலமாக விண்ணப்பிக்கலாம். இதன் மூலம் மாதம் ரூ.30,000 வரை சம்பாதிக்கலாம். ஷேர் பண்ணுங்க!

இந்திய அஞ்சல் துறை ‘POMIS’ எனும் பெயரில் சூப்பரான திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் நீங்கள் ஒரு முறை முதலீடு செய்தால் போதும், முதலீடு செய்த பணத்திற்கேற்ப மாதந்தோறும் மிகச்சரியாக வட்டி வழங்கப்படும். எடுத்துக்காட்டுக்கு நீங்கள் ரூ.15 லட்சம் முதலீடு செய்தால், ஒவ்வொரு மாதமும் ரூ.9,250 வட்டியாக வழங்கப்படும். மேலும் 5 வருடங்களுக்கு பிறகு முதலீடு செய்த பணம் திருப்பி வழங்கப்படும். ஷேர் பண்ணுங்க!

பெரம்பலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பிப்ரவரி 20-ம் தேதி காலை 10 மணி முதல் சிறிய அளவிலான வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. 10-ம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை முடித்தவர்கள் இதில் பங்கேற்கலாம். விருப்பமுள்ளோர் www.tnprivatejobs.tn.gov.in இணையதளத்தில் பதிவு செய்து, உரிய சான்றிதழ்களுடன் முகாமில் கலந்துகொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் மிருணாளினி தெரிவித்துள்ளார்.

பாரத ஸ்டேட் வங்கியில் (SBI) காலியாக உள்ள Circle Based Officers (CBO) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 2050
3. வயது: 21 – 30
4. சம்பளம்: ரூ.48,480
5. கல்வித் தகுதி: ஏதேனும் டிகிரி
6. கடைசி தேதி: 25.02.2026
7. விண்ணப்பிக்க:<
வேலை தேடுபவர்களுக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள காவல் அலுவலகத்தில் துப்பறியும் மோப்பநாய் படை பிரிவில் ‘ஜெனி’ என்ற வெடிபொருள் கண்டறியும் மோப்பநாய் நேற்று முதல் புதிதாக பணிக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதற்கு முன்னதாக ‘ஜெனி’ கோவை மாநகர துப்பறியும் மோப்ப நாய் பயிற்சி பள்ளியில் ஆறு மாத கால அடிப்படை பயிற்சியை முடித்தது குறிப்பிடத்தக்கது.
Sorry, no posts matched your criteria.