Perambalur

News August 5, 2024

பெரம்பலூரில் பலத்த மழைக்கு வாய்ப்பு

image

தமிழகத்தில் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் இன்று பெரம்பலூரில் இடி மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்று மற்றும் நாளை 30 முதல் 40 கி.மீ வேகத்தில் காற்று வீசும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News August 5, 2024

பெரம்பலூர் மாவட்டத்தில் 176 மி.மீ. மழை

image

பெரம்பலூர் மாவட்ட சுற்றுப் பகுதியில், நேற்று மழை பெய்தது. அதன்படி பெரம்பலூர் கிருஷ்ணாபுரம், வி.களத்தூர், வேப்பந்தட்டை, அகரம்சீகூர், லப்பைகுடிகாடு, பாடாலூர், செட்டிகுளம் ஆகிய பகுதிகளில் மழை பெய்துள்ளது. அதன்படி மாவட்டத்தின் மொத்தம் 176 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் சராசரியாக 16 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

News August 4, 2024

பெரம்பலூர் தேமுதிக பொறுப்பாளர்களுக்கு சான்றிதழ்

image

பெரம்பலூர் மாவட்ட தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் நிர்வாகிகளுக்கு புதிய பொறுப்பு அறிவித்து பொறுப்பாளர்களுக்கு இன்று மாவட்ட கழக அலுவலகத்தில் மாவட்ட கழகச் செயலாளர் துரை சிவா ஐயப்பன் மாவட்ட கழகத்தின் சார்பாக சான்றிதழை வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்தார். இந்நிகழ்வில் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் நிர்வாகிகள் பலர் உடன் பங்கேற்றனர்.

News August 4, 2024

பெரம்பலூரில் பலத்த மழைக்கு வாய்ப்பு

image

தமிழத்தில் பருவ மழை தீவிரமடைந்துள்ள நிலையில் பெரம்பலூர் மாவட்டத்தில் இன்று இரவு 10 மணி வரை இடி, மின்னலுடன் மழை பெய்ய வாப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இடை இடையே 30 கிலோ மீட்டர் முதல் 40 கிலோ மீட்டர் வரை காற்று வீசக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

News August 4, 2024

பெரம்பலூரில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம் புகுந்த காதல் ஜோடி

image

பெரம்பலூர் எசனை கிராமத்தைச் சேர்ந்த முருகேசன் மகன் தினகரன் பட்டதாரி இளைஞர். இவர் கோயம்புத்தூரில் தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வந்தபோது மதுரையைச் சார்ந்த பவித்ரா என்பவருடன் காதல் ஏற்பட்டது. காதல் விவகாரம் வீட்டுக்கு தெரியவே எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்நிலையில் இன்று ஸ்ரீரங்கத்தில் திருமணம் செய்து கொண்டு பெரம்பலூர் மகளிர் காவல் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்தனர்.

News August 4, 2024

பெரம்பலூர் மாற்றுதிறனாளி வீரர் மாரத்தானில் பங்கேற்பு

image

பெரம்பலூர் வட்டம், மேலப்புலியூர் கிராமத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளி வீரர் கலைச்செல்வன் மாரத்தானில் பங்கேற்று 3-ஆம் இடம் பிடித்துள்ளார். சென்னையில் ஆகஸ்ட்- 4 இன்று காலையில் உடல் உறுப்பு தானம் பற்றிய விழிப்புணர்வுக்கான 10 கி.மீ தொலைவுக்கான தமிழ்நாடு மாரத்தான் போட்டி நடைபெற்றது. ‌விருகம்பாக்கம் எம்.எல்.ஏ. பிரபாகா் ராஜா விழாவை துவக்கி வைத்தார் .

News August 4, 2024

பெரம்பலூர் பேருந்து நிலையத்தில் போலீசார் அபராதம்

image

பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்தில் பயணிகளுக்கு இடையூறாக இருக்கும் இருசக்கர வாகனங்களுக்கு ரோந்து பணியில் இருக்கும் காவலர்கள் அபதாரம் விதித்து வருகின்றனர். மேலும் இருசக்கர வாகனங்கள் தொடர்ந்து நிறுத்தப்பட்டால் வாகனத்தை பறிமுதல் செய்யப்படும் என காவல்துறையினர் எச்சரிக்கை எடுத்து வருகின்றனர்.

News August 4, 2024

நட்புனா என்னனு தெரியுமா!

image

இன்று சர்வதேச நண்பர்கள் தினம் கொண்டாடப்படுகிறது. இவ்வுலகில் நண்பர்கள் இல்லாமல் எவரும் இல்லை. கிணற்றில் குளித்தது, கிரிக்கெட் ஆடியது, பள்ளிக்கு செல்வதாக கூறி படத்துக்கு போவது என சினிமாவை மிஞ்சும் அளவுக்கு நண்பர்களுடன் செய்த சேட்டைகளுன்டு. அந்த வகையில், நீங்க உங்க நண்பனை பற்றி கீழே கமெண்ட் பண்ணுங்க, நண்பனுக்கு சேர் செய்யுங்க.

News August 3, 2024

பயிர் வளர்ப்பு குறித்து ஆட்சியர் ஆய்வு

image

குன்னம் அடுத்த வயலப்பாடி கிராமத்தில், தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறையில் சார்பில் 1.77 இலட்சம் அரசு மானியத்தில் அமைக்கப்பட்டுள்ள நிழல் வளைகுடிலில் நாற்றாங்கள் மூலமாக கத்திரி, தக்காளி, மிளகாய் செடி வளர்ப்பு செய்யப்படுவதை மாவட்ட ஆட்சித் தலைவர் கிரேஸ் பச்சாவ் இன்று ஆய்வு செய்தார்.

News August 3, 2024

பெரம்பலூரில் எட்டாம் ஆண்டு விதைத்திருவிழா

image

பெரம்பலூர் மாவட்ட இயற்கை உழவர்கள் குழு சார்பில் 8ஆம் ஆண்டு விதைத்திருவிழா வருகின்ற (11.08.2024) காலை-9 மணியளவில், ஆண்டிமுத்து சின்னப்பிள்ளை வளாகத்தில் நடைபெறவுள்ளது. இதில், பாரம்பரிய நெல் விதைகள், காய்கறி விதைகள், சிறுதானிய விதைகள், இயற்கை உணவுகள், மற்றும் நூல்கள் உள்ளிட்ட ஏராளமானவைகள் அணிவகுக்கப்படவுள்ளன.

error: Content is protected !!