India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பெரம்பலூர் நகரப் பகுதியில் வானொலி திடல் சாலையில் காலை முதல் மாலை வரை பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் இருசக்கர வாகனத்தில் ஆபத்தான பயணத்தை மேற்கொண்டு வருகின்றனர். பெரிய விபத்து நடப்பதற்கு முன்னரே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இது போன்ற ஆபத்தான பயணத்தை மேற்கொள்ளும் பள்ளி மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
கீழப்புலியூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன். இவர், பெரம்பலூரில் உள்ள தனியார் கல்லூரியில் B.Com மூன்றாம் ஆண்டு படித்து வந்துள்ளார். நேற்று இரவு 7 மணி அளவில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் பூச்சிமருந்தை குடித்து மயங்கி கிடந்தார். இதை கண்ட அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
பெரம்பலூர் எஸ்பிஐ வங்கி கிளை அருகே நடந்த ஆர்ப்பாட்டத்தில் சிபிஎம் கட்சியின் மாவட்ட செயலாளர்கள் ஜெயராமன், ரமேஷ் ஆகியோர் தலைமை வகித்தனர். பின்னர், மத்திய அரசை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்ட 30 பெண்கள் உட்பட 90 பேரை போலீசார் கைது செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர், துறைமங்கலம் தனியார் மண்டபத்தில் அடைக்கப்பட்டு நேற்று மாலை விடுவிக்கப்பட்டனர்.
ஆலத்தூர் தாலுகா தேனூர் கிராமத்தில் உள்ள பயிர் வளாகத்திற்கு புதியதாக பொறுப்பேற்ற பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் கிரேஸ் பச்சாவ் வருகை புரிந்து பயிர் வளாகத்தில் நடைபெறும் பணிகளை பார்வையிட்டு அங்குள்ள பணியாளர்களிடம் உரையாடினார். இந்நிகழ்ச்சியில் தேனூர் பஞ்சாயத்து அலுவலர்கள், பயிர் அமைப்பினர் கலந்து கொண்டனர்.
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் நீர்வள ஆதாரத்துறையின் மூலம் தூர்வாரப்பட்டுள்ள நீர்நிலைகள் குறித்து தமிழ்நாடு அரசின் முதன்மைச் செயலாளர்/ தமிழ்நாடு மினரல் கார்ப்பரேஷன் நிறுவன மேலாண்மை இயக்குநர் மற்றும் பெரம்பலூர் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் அனில் மேஷ்ராம், தலைமையில், மாவட்ட ஆட்சித்தலைவர் கிரேஸ் பச்சாவ், முன்னிலையில் ஆய்வுக் கூட்டம் இன்று நடைபெற்றது.
குரும்பலூர் ஏரிக்கு செல்லும் வரத்து வாய்க்கால் தூர்வாரப்பட்டுள்ளதை தமிழ்நாடு அரசின் முதன்மைச் செயலாளர்/ தமிழ்நாடு மினரல் கார்ப்பரேஷன் நிறுவன மேலாண்மை இயக்குநர் / மாவட்ட கண்காணிப்பு அலுவலர் அனில் மேஷ்ராம், இன்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்நிகழ்வின் போது மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.
பெரம்பலூர் மாவட்ட அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கடந்த 2022ஆம் ஆண்டு சிறுமியை பாலியல் தொந்தரவு செய்த அய்யலூர் கிராமத்தைச் சேர்ந்த மகேந்திரன் என்பவருக்கு 20 வருடம் சிறை தண்டனையும், ஒரு லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. மேலும், அபராதத்தை செலுத்த தவறினால் மேலும் இரண்டு ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படும் என பெரம்பலூர் மகிலா நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
பெரம்பலூரில் பணியாற்றும் பெண் காவல் உதவி ஆய்வாளர் செந்தமிழ்ச் செல்வி, சவுக்கு சங்கர் மீது அளித்த புகாரின் பேரில், பெரம்பலூர் போலீசார் சென்னை சென்று புழல் சிறையில் இருந்து சவுக்கு சங்கரை கைது செய்து இன்று வேப்பந்தட்டையிலுள்ள நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இந்நிலையில் சவுக்கு சங்கருக்கு ஜாமீன் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பெரம்பலூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் தொடக்கப்பள்ளி, நடுநிலைப் பள்ளி, உயர்நிலைப் பள்ளி, மேல்நிலைப் பள்ளிகளில் அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர் தலைமையில் நாளை பள்ளி மேலாண்மை குழு மறுகட்டமைப்பு கூட்டம் நடைபெறுகிறது. இக்கூட்டத்தில் மாணவர்களின் பெற்றோர்கள், வார்டு உறுப்பினர்கள், இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்கள், பள்ளி முன்னாள் மாணவர்கள் ஆகியோர் கலந்து கொள்கிறார்கள்.
பெரம்பலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மக்களின் பல்வேறு கோரிக்கைகளை இன்று பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் பிரபாகரன் மற்றும் மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் டி.ஆர். சிவசங்கர் ஆகியோர் திருச்சியில் தமிழ்நாடு இளைஞர் நலன் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் கோரிக்கை மனுவாக வழங்கினர். மனுக்களை பெற்றுக்கொண்டு விரைவில் அனைத்துக்கும் தீர்வு காண்பதாக அமைச்சர் உறுதியளித்தார்.
Sorry, no posts matched your criteria.