India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கேரளாவிலிருந்து குமரிக்கு கழிவுகள் ஏற்றி வந்த வாகனத்தை பொதுமக்கள் இன்று(மார்ச் 16) அதிகாலை சிறை பிடித்து குழித்துறை நகராட்சியில் ஒப்படைத்தனர். இதை தொடர்ந்து நகராட்சி ஆணையர், சுகாதார ஆய்வாளர் ஆய்வு செய்து வாகனத்தில் மருத்துவ மற்றும் மீன் கழிவுகள் இருப்பதை உறுதி செய்து ரூ.1,00,000 அபராதம் விதித்தனர். சிறை பிடிக்கப்பட்ட வாகனத்தை களியக்காவிளை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
நாவலூர் பகுதியில் ஓஎம்ஆர் சாலையில் உள்ள சூப்பர் மார்க்கெட்டில் இன்று காலை 8 மணி அளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீ மளமளவென பரவியதால் அந்த பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்தது. தகவலறிந்து வந்த தீயணைப்புத் துறையினர் சுமார் அரை மணி நேரத்திற்கு மேலாக போராடி தீயை அணைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் மின்கசிவால் தீ விபத்து ஏற்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம் முழுவதும் நேற்று (மார்ச் 16) மாலை முதல் தேர்தல் விதிகள் அமலுக்கு வந்தது. இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவாயிலில் வைக்கப்பட்டுள்ள அரசு விளம்பரங்கள், பலகைகள் மற்றும் அரசு சாதனை திட்டங்கள் குறித்து வைக்கப்பட்டுள்ள புகைப்படத்தை தேர்தல் பணியாளர்கள், அரசு ஊழியர்கள் அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
சென்னை கடற்கரை முதல் தாம்பரம் வழித்தடத்தில் எழும்பூர், கோடம்பாக்கம் மற்றும் தாம்பரம் வரை தண்டவாள பராமரிப்பு பணிகள் இன்று (17.03.2024) காலை 10.30 மணி முதல் மாலை 4.30 மணி வரை நடைபெறுகிறது. அதனால் சென்னை கடற்கரை – தாம்பரம், சென்னை கடற்கரை – செங்கல்பட்டு, சென்னை கடற்கரை- அரக்கோணம் இடையே இரு மார்க்கங்களிலும் 44 புறநகர் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே அறிவித்துள்ளது.
மேலபூதனூரை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன். இவர் தனக்கு சொந்தமான வயலில் அறுவடை செய்து வைத்திருந்த சுமார் ரூ.2 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பிலான 4500 வைக்கோல் கட்டுகளை தனது வீட்டுக்குப் பின்னால் உள்ள தகர கொட்டகையில் அடுக்கி வைத்துள்ளார். திடீரென வைக்கோல் போரில் தீப்பற்றி எரிந்துள்ளது. இதில் 4500 வைக்கோல் கட்டுகளும் தீயில் எரிந்து நாசமானது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தடைசெய்யப்பட்ட போதை பொருட்கள் விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சமய்சிங் மீனா எச்சரித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கிராம புற, நகர் புற பகுதிகளில் செயல்பட்டு வரும் கடைகளில் தடை செய்யப்பட்ட பான்மசாலா, குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
மின்சார ரயில் பராமரிப்பு பணிகள் காரணமாக சென்னை கடற்கரை – தாம்பரம் இடையே இன்று இயக்கப்படும் 44 மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், பயணிகள் வசதிக்காக இன்று கூடுதலாக மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது. அதன்படி இன்று காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை, 7 நிமிட இடைவெளியில் ரயில்கள் இயக்கப்படும்.
நாடாளுமன்ற தேர்தல் நடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வந்ததையடுத்து வேலூர் அண்ணா சாலையில் நேற்று இரவு தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.கார் உள்ளிட்ட வாகனங்களில் பணம், பரிசு பொருட்கள் கடத்தப்படுகிறதா என தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் ஆய்வு. இதே போல் மாவட்டம் முழுவதும் உள்ள முக்கிய சாலையில் தேர்தல் அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்
குமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகர திமுக வழக்கறிஞர் அணிக்கு புதிதாக நியமிக்கப்பட்ட நிர்வாகிகள் நேற்று இரவு ஒழுகினசேரி மாவட்ட தலைமை கழக அலுவலகத்தில் குமரி கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் மேயர் மகேஷை சந்தித்து வாழ்த்து பெற்றனர். இந்த நிகழ்ச்சியில் புதிதாக பொறுப்பேற்ற அனைத்து நிர்வாகிகளும் கலந்து கொண்டனர். அவர்களது பணி சிறக்க மேயர் பொன்னாடை போர்த்தி வாழ்த்துகளை தெரிவித்தார்.
பாராளுமன்ற தேர்தல் அடுத்த மாதம் 19 ஆம் தேதி நடைபெற உள்ளது.இதனால் தேர்தல் நடத்தை விதிமுறைகள் நேற்று மாலை 4 மணி முதல் அமலுக்கு வந்தன. MLA அலுவலகங்களை தேர்தல் பிரச்சாரத்திற்கு பயன்படுத்தக் கூடாது என்பதால் உடனடியாக பூட்டி அதன் சாவியை அந்தந்த தாலுகா தாசில்தாரிடம் ஒப்படைக்க உத்தரவிடப்பட்டது. அதன்படி பாளை எம்எல்ஏ அலுவலகம் உடனடியாக பூட்டப்பட்டு சாவியை தாசில்தாரிடம் நேற்று (மார்ச் 16) ஒப்படைக்கப்பட்டது.
Sorry, no posts matched your criteria.